குடிவரவாளர் வீசா தகவல்கள்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

பொதுவாக, அமெரிக்காவிற்குக் குடிபுக விரும்புகிறதோர் நபருக்கு, அவர் ஒரு குடிவரவு வீசாவிற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பே, அவரது மனு ஒன்று, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் (U.S. Citizenship and Immigration Services (USCIS)) துறையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாக வேண்டும். அந்த மனு, தகுதியுடையதோர் உறவினர் அல்லது வேலை கொடுக்க வாய்ப்புள்ளதோர் நிறுவனத்தின் மூலமாக, அமெரிக்காவில் உள்ள USCIS அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. குடிவரவு மனுக்களைத் தாக்கல் செய்வது குறித்த குறிப்பான தகவல்கள், USCIS இணையதளத்தில் கிடைக்கின்றன. அங்கீகரிக்கப்பட்டுள்ளதோர் மனுவையும், அதனைப் பரிசீலிப்பதற்கான நடப்பிலுள்ள முன்னுரிமைத் தேதி ஒன்றையும் (குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும்) வைத்துள்ளதோர் தனிநபர், ஒரு குடிவரவு வீசாவிற்கோ அல்லது K குடிவரவு-அல்லாத வீசாவிற்கோ விண்ணப்பிப்பதற்குத் தகுதியுள்ளவராகிறார்.

மனுக்கள்

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து, USCIS அலுவலகத்திற்கு ஒரு பொதுமக்களுக்கான கவுண்டர் இல்லாமல் இருக்கிற, இலங்கையில் வசிக்கும் மனுதாரர்கள், சிக்காகோ லாக்பாக்ஸ்-ல் அஞ்சல் மூலமாகவே அவர்களது 1-130 படிவங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும். USCIS அலுவலகம் இல்லாமல் இருக்கிற அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள், கீழே சுட்டிக்காட்டியுள்ளபடி, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே 1-130 படிவங்களை ஏற்றுக் கொண்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க இயலும். USCIS அலுவலகம் இல்லாத அயல்நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அல்லது துணைத் தூதரகத்தில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்கு முன், முறைப்படித் தாக்கல் செய்யப்படுகிற 1-130 படிவங்கள் இந்த மாற்றத்தினால் பாதிக்கப்படாது.

வழக்கமான அஞ்சல்களைக் கொடுப்பதற்கான USCIS சிக்காகோ லாக்பாக்ஸ் முகவரிகள்:

USCIS
த. பெ. எண் 804625
சிகாகோ, IL 60680-4107

எக்பிரஸ் அஞ்சல் மற்றும் துரித அஞ்சல்களைக் கொடுப்பதற்கான USCIS சிக்காகோ லாக்பாக்ஸ் முகவரிகள்:

USCIS
கவனம்: I-130
131 சவுத் டியர்பான்-3 ஆம் தளம்
சிகாகோ, IL 60603-5517

USCIS சிக்காகோ லாக்பாக்ஸில் I-130 படிவம் ஒன்றை எவ்விதம் தாக்கல் செய்வது என்பது குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, https://uscis.gov/ என்ற USCIS இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள் அல்லது அமெரிக்காவில் உள்ள USCIS அலுவலகத்தை 1-800-375-5283 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

USCIS குடிவரவாளர் கட்டணம்

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதியிலிருந்து, வெளிநாடுகளில் குடிவரவாளர் வீசாக்கள் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தனிநபர்களும், அமெரிக்காவிற்குப் பயணித்து வருவதற்கு முன்பாக என்ற USCIS குடிவரவாளர் கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். ஆதரவற்றோர் அல்லது ஹாக் நடைமுறையின் (Orphan or Hague Process) கீழ் அமெரிக்காவிற்குள் நுழைகிற குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ள வாய்ப்புள்ள தத்துப் பெற்றோர்கள், அமெரிக்க அரசாங்கம் பணியமர்த்தியுள்ள ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரத்தியேகக் குடிவரவாளர்கள், ஊர் திரும்பும் அமெரிக்க வாழ் மக்கள், மற்றும் K வீசாக்கள் வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டும் இந்தப் புதிய கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. கீழுள்ள USCIS இணையதளத்தில், மேற்கொண்டும் கேள்விகள் இருந்தால் தொடர்பு கொள்வதற்கான USCIS அலுவலகத் தொடர்புத் தகவல்கள் உட்பட, புதிய கட்டணம் குறித்த இன்னும் அதிக விவரங்கள் உள்ளன: https://uscis.gov/forms/uscis-immigrant-fee.

விதிவிலக்கான சூழலில் தாக்கல் செய்தல்

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியில் ஆரம்பித்து, விதி விலக்கு பெறுவதற்கு தங்களது சூழல் தகுதியடைகிறது என நம்புகிற மனுதாரர்கள், தங்களது விண்ணப்பம் தாக்கல் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ளுமாறு துணைத் தூதரகப் பிரிவில் வேண்டுகோள் விடுக்கலாம். ஒவ்வொரு வேண்டுகோளும் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்படும்.

I-130 படிவத்தைத் தாக்கல் செய்ய நாடுகிறதோர் மனுதாரர், விதிவிலக்கான சூழ்நிலையைப் பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவும், அச்சூழ்நிலையை விவரமாக விளக்கிச் சொல்வதற்கும் துணைத் தூதரகப் பிரிவைத் தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பின் அத்துணைத் தூதரகப் பிரிவு, விதிவிலக்கை வேண்டி அந்த வேண்டுகோளை, அமெரிக்கத் தூதரக அல்லது துணைத் தூதரக ஆட்சி எல்லையைத் தன் கீழ் கொண்டுள்ள USCIS கள அலுவலரிடம் அனுப்பி வைக்கும். பொதுவான தாக்கல் செய்யும் நடைமுறைக்கு விதிவிலக்கை உறுதி செய்கிற விதிவிலக்கான சூழ்நிலைகள் அந்நிலையில் இருக்கின்றனவா என்பதை USCIS அலுவலகமே தீர்மானிக்கும். விதிவிலக்கிற்குத் தகுதியடையக் கூடிய சூழ்நிலைகள் குறித்ததோர் வழிகாட்டுதலை USCIS அலுவலகம் தங்களது இணையதளத்தில் பிரசுரிக்கும்.

மருத்துவத் தேவைகள்

தூதரகம் அங்கீகரித்துள்ள மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் செய்கிறதோர் மருத்துவப் பரிசோதனைக்கு அனைத்து விண்ணப்பதாரர்களும் உட்பட வேண்டும். மருத்துவப் பரிசோதனை குறித்த தகவல்களை இங்கே காணலாம். உங்கள் மருத்துவப் பரிசோதனைக்காக நேரம் குறிப்பை எவ்விதம் திட்டமிடுவது என்பது குறித்த அறிவுறுத்தல்களை நீங்கள் NVC-யில் இருந்து அல்லது தூதரகத்திலிருந்து பெற்றுக் கொள்வீர்கள். இவ்வறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு முன்பே மருத்துவப் பரிசோதனைக்கு நேரம் குறிக்க முயற்சிக்காதீர்கள்.

அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் நேர்காணலுக்குக் குறித்த நேரம்

உங்களுக்கு நேர்காணல் தேதி கொடுக்கப்பட்டிருந்தால், உங்களுக்குக் கொடுத்துள்ள தேதி மற்றும் நேரத்தில் நீங்கள் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு வந்தாக வேண்டும். உங்கள் நேர்காணலுக்கு உங்களோடு நீங்கள் என்னென்ன கொண்டு வரலாம் அல்லது கொண்டு வர முடியாது என்பவற்றை விவரித்துச் சொல்கிற, அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் உள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் குறித்து தயவுசெய்து படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒதுக்கியுள்ள நேரம் குறித்த கடிதம் மற்றும் உங்கள் வீசா வகைக்குத் தேவைப்படுகிற ஆவணங்களை நீங்கள் உங்களோடு கொண்டு வர வேண்டும்.