குடிவரவு வீசா காத்திருப்புக் காலங்கள்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

ஒவ்வொரு குடிவரவு வீசா நிலையும் வித்தியாசமானதாகும், ஆகவே ஒரு குறிப்பிட்ட தனிநபருக்கு அது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வளவு காலமாகும் எனக் கணக்கிடுவது சிரமமானதாகும். பொதுவாக, நடவடிக்கை எடுக்கத் தேவைப்படுகிற காலத்திற்குப் பங்களிப்பதாக மூன்று காரணிகள் இருக்கின்றன:

ஒரு மனு மீது நடவடிக்கை எடுக்கத் தேவைப்படுகிற காலம்

ஒரு மனுவை USCIS அங்கீகரிப்பதற்கு ஆகிற காலம் என்பது மனுவின் வகை மற்றும் அதில் ஈடுபட்டுள்ள குறிப்பிட்ட USCIS அலுவலகம் ஆகிவற்றுக்கு ஏற்ப வேறுபடுகிறது. குறிப்பிட்ட USCIS அலுவலகங்களுக்கான கணக்கிடப்படுகிற காலங்கள் இங்கே கிடைக்கின்றன.

தேசிய வீசா மையம் மற்றும் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவைப்படுகிற காலம்

ஒரு மனுவை அங்கீகரித்ததும், அது நெருங்கிய தொடர்பு வகையாக இருந்தாலோ அல்லது அதற்குத் தற்போதைய முன்னுரிமைத் தேதி இருந்தாலோ, ஒரு நேர்காணல் தேதியைப் பெறுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கிறது என்பது பெரும்பாலும் உங்களைப் பொறுத்ததேயாகும். தேசிய வீசா மையம் வழங்கிய அறிவுறுத்தல்களை நீங்கள் எவ்வளவு விரைவாகப் பின்பற்றி, தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கிறீர்களோ, அந்தளவிற்கு சீக்கிரமாக நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்துக் கொள்ள முடியும். நேர்காணலுக்காக நேரத்தைக் குறிப்பது என்பது வழக்கமாக அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு ஒரு மாதத்தில் திட்டமிடப்படுகிறது. வீசாக்கள் சாதாரனமாக நேர்காணலில் இருந்து சில தினங்களுக்குள் கிடைத்து விடுகின்றன.

வழக்கு தற்போதையதாக ஆவதற்கு ஆகும் காலம்

குடிவரவாளரகளின் ஒருசில வகையினரைப் பொருத்த வரையில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்த எண்ணிக்கையிலான வீசாக்களை வழங்குவதற்கே சட்டம் வழி வகுக்கிறது. இவ்வீசாக்கள் மனுவை தாக்கல் செய்த தேதி வரிசையில் கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன (இது தான் முன்னுரிமைத் தேதியாகும்). ஒரு விண்ணப்பதாரரின் முன்னுரிமைத் தேதி வராத வரையில் (அந்த விண்ணப்பம் தற்போதையதாக ஆகிறது) வீசாவை வழங்க முடியாது. இதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை மிகச் சரியாகச் சொல்லி விடுவது சாத்தியமில்லை என்கிற அதே வேளையில், மாதாமாதம் பிரசுரிக்கப்படுகிற வீசா செய்திகள், தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிற முன்னுரிமைத் தேதிகளைப் பட்டியலிடுகிறது, அது எவ்வளவு காலம் மீதமிருக்கிறது என்பது குறித்ததோர் குறிப்பை வழங்கலாம்.

குறிப்பு: மனுதாரர் குடியுரிமை பெற்று விடும் போது, அனைத்து F2A மனுக்களும் (நிரந்தர வசிப்பாளரின் இல்வாழ்க்கைத் துணை அல்லது இளம் குழந்தை) தானாகவே IR1 மனுவாக (அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரின் இல்வாழ்க்கைத் துணை) அல்லது IR2 மனுவாக (அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரின் குழந்தை) மாற்றப்படுகின்றன. இத்தகைய வீசா வகைகள், வீசா ஒதுக்கீட்டு அமைப்பிற்கு உட்படுவதில்லை, அதன் காரணமாக அவை பயனடைபவர்கள் வீசா வழங்குவதற்குத் தகுதியடைகிற பட்சத்தில் அவர்களுக்கு எப்போதுமே வீசா கிடைப்பதாக இருக்கும். இன்னும் அதிகத் தகவல்களுக்கு USCIS ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.