விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

இந்த பக்கத்தில்:

வலைத்தளத்தின் பயன்பாடு

ஐக்கிய அமெரிக்கா (யு.எஸ்.) இராஜங்க திணைக்களம் (DoS) அமெரிக்க விசா விண்ணப்பங்கள் தொடர்பான பொதுவான தகவல் மற்றும் நிர்வாக சேவைகளை வழங்க CGI உடன் ஒப்பந்தம் செய்தது. இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துவது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது மற்றும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க வேண்டும்.

தடைசெய்யப்பட்ட நடத்தை

bots, crawlers அல்லது ஸ்கிரிப்ட்கள் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்லாமல், எந்த தானியங்கு வழிமுறைகள் மூலமாகவும் நீங்கள் இணையதளத்தை அணுகவோ பயன்படுத்தவோ முடியாது.

எந்தவொரு முறையற்ற நோக்கத்திற்காகவும் நீங்கள் இணையதளத்தை அணுகவோ பயன்படுத்தவோ கூடாது.

MRV க்கான கட்டணம்

  • உங்கள் பணம் செலுத்துவதில் பிழை ஏற்பட்டாலோ அல்லது உங்கள் கட்டணம் சரியாக செல்லுத்த படவில்லை என நினைத்தாலோ, இரண்டாவது முறை கட்டணத்தைச் செலுத்த வேண்டாம், ஏனெனில் அது திருப்பிச் செலுத்த முடியாதது. உங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்க பரிந்துரைக்கிறோம். உங்கள் வங்கிக் கணக்கு டெபிட் செய்யப்பட்டு, உங்கள் சந்திப்பைத் திட்டமிட முடியாவிட்டால், கூடுதல் உதவிக்கு எங்கள் அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
  • மெஷின் ரீடபிள் விசா (MRV) கட்டணங்கள் திரும்பப்பெற முடியாதவை மற்றும் மாற்ற முடியாதவை, இந்த கட்டணம் செலுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் நேர்காணலை திட்டமிடுவதற்கு அல்லது ரத்து ஆனாதின் விளைவாக வழக்கமான விசா சேவைகள் நடைமுறையில் உள்ள விசா கட்டண செல்லுபடியாகும் நீட்டிப்பு வழிகாட்டுதலின் படி பயன்படுத்தப்படலாம்.
  • MRV க்கான கட்டணம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியமனத்தை மட்டுமே மறு அட்டவணை படுத்த பயன்படுத்தப்படலாம். ஒருமுறை ஒரு சுயவிவரத்தை குறித்துள்ளது அல்லது ஆரம்ப சந்திப்பிற்க்கு பயன்படுத்தப்பட்டால், MRV க்கான கட்டணம் மற்றொரு விண்ணப்பதாரருக்கு இடமாற்றம் செய்ய முடியாது.
  • அனைத்து பணம் கட்டணம், உள்ளூர் நாணயங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் பணம் எங்கு கட்டப்பட்டதொ அன் நாட்டில் மட்டுமே நியமனங்கள் திட்டமிடப்பட செல்லுபடியாகும். MRV க்கான பணம் கட்டணம் ஒரு நாட்டுக்கு வெளியே செய்யப்பட்டதாயின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு மாற்றப்பட முடியாது.இது போன்ற சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர் அவன் / அவள் விண்ணப்பிக்க விரும்பும் இடத்திலே , நாட்டில் ஒரு புதிய MRV க்கான கட்டணம் வாங்க வேண்டும்.  
  • ஒரு கலாவதியான கொடுப்பனவு சீட்டை பயன்படுத்தி, அல்லது கட்டண வசூலிப்பு முறைகள் மூலம் அல்லது எங்கள் இணையத்தளங்களில் வங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள் / எனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல், குறிப்பிடப்படாத விற்பனையாளர்கள் மூலம் மேட்கொள்ளப்படும் கட்டணங்களால் பின்வரும் விளைவுகள் ஏற்படலாம்.
    • கட்டணச் செயல்படுத்தளில் தாமதம்
    • முழு கட்டணத்தை அடைய மற்றொரு கட்டணம் செலுத்தப்படல் வேண்டும்.
    • கட்டண செயலாக்கல் சிக்கல்களினால் கட்டணத்தை செலுத்த மீண்டும் கோரப்படும்.  

நடைமுறைகள் மற்றும் கட்டணம் மாற்றங்கள்

U.S. தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவாளர் வீசாக்களின் நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் CGI இன் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளதால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. நடைமுறைகளில் அல்லது கட்டண அதிகரித்தலுக்கான எந்த விதமான மாற்றத்திற்கும் CGI பொறுப்பு ஏற்காது.

அழைப்பு மையம்

  • எங்கள் அழைப்புமையம், U.S. தூதரகம் மற்றும் துணைத்தூதரகம் வழிமுறைகளுக்கு ஏற்ப பொது தகவல்களை வழங்குகிறது.
  • அழைப்புமையம் முகவர் DS -160 / 260 விண்ணப்பபடிவங்கள் நிரப்ப  உதவி வழங்க முடியாது. மேலும் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய விசாவர்க்கத்தின் மீதும் விண்ணப்பதாரர்களுக்கு ஆலோசனை கூற முடியாது, அல்லது விண்ணப்பதாரர் நேர்காணலின்போது முன்வைக்க வேண்டிய குறிப்பிட்ட ஆவணங்களை அடையாளம் கூற முடியாது.
  • சேவை ஆதரவிற்கு இணங்க அனைத்து தொலைபேசி அழைப்புகளும் தரம் மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக பதிவு செய்யப்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் இந்த நடைமுறைப் பற்றி தொடக்கத்தில் தொடர்புகொள்ளும் போதே அதன்நோக்கம் அறிவிக்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட தொடர்புத் தகவல்களான தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது அரட்டை மூலம் அழைப்பு மையத்தை அணுகலாம்.

தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாடு

CGI ஆனது U.S. DoS க்கு விண்ணப்பத் தரவுகளைச் சேகரிப்பது, தூதரகம் அல்லது துணைத் தூதரக சந்திப்புகளைத் திட்டமிடுதல், கட்டண வசூல் சேவைகள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு மையம் மற்றும் ஆவண விநியோகச் சேவைகளை வழங்குதல் போன்ற ஆதரவு சேவைகளை வழங்குகிறது.

இந்தச் சேவைகளை வழங்குவதற்காக, பெயர், முகவரி, பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண், இன்டர்நெட் புரோட்டோகால் (IP) முகவரி மற்றும் பிற தரவுப் புள்ளிகள் உட்பட தனிப்பட்ட தகவல்களை CGI சேகரிக்கிறது. இந்தச் சேவையின் மூலம் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும், DoS உடனான CGI ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் பராமரிக்கப்படும் கணினி அமைப்புகளில் கைப்பற்றப்பட்டு சேமிக்கப்படும்.

CGI இந்த வலைத்தளத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்களை பின்வரும் நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறது:

  • விண்ணப்பதாரரின் விசாரணைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு கையாளுதல் /  பதிலலித்தல்.
  • வீசா விண்ணப்பங்கள் மற்றும் நியமனங்கள் சேவைகளை செயலாக்க கோரிக்கைகள்.
  • விண்ணப்ப முன்னேற்றம் கண்காணிப்பு.

நம்பகத்தன்மை

எந்த ஒரு விண்ணப்பதாரரினாலும் வழங்கப்படுகின்ற தகவல்களின் நம்பகத்தன்மைக்கும்  துல்லியதிற்கும் CGI பொறுப்புஅல்ல, மற்றும் CGI யினால் வழங்கப்படும் தகவல் அனைத்தும் துல்லியமானதா என்பதை உறுதி செய்வது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும்.

அவசர நியமனங்கள்

  • ஒரு அவசர சந்திப்பு கோரிக்கையை விண்ணப்பதாரரின் ஆன்லைன் சுயவிவரத்தின் வழியாக மட்டுமே கோர முடியும்; விண்ணப்பதாரர் தனிப்பட்ட முறையில் அல்லது விண்ணப்பதாரரின் சார்பாக அவரின் பிரதிநிதி இக்கோரிக்கையை கோரலாம்.ஒரு விண்ணப்பத்திற்கு ஒரு முறை மட்டுமே அவசரசந்திப்பை கோர முடியும்.
  • அவசர கோரிக்கைகள் தூதரகத்தின் மற்றும் துணைத்தூதரகத்தின் ஒப்புதலிற்க்கு உட்பட்டவையாகும். ஒரு அவசர சந்திப்பு கோரும் முன், விண்ணப்பதாரர்கள் தங்கள் பயணத்தின் உடனடி நோக்கத்தை நிரூபிப்பதற்க்கான ஆவணசான்றுகளை சமர்ப்பித்து உறுதி செய்தல் வேண்டும்.
  • ஒரு அவசரகோரிக்கைக்குள் அடங்கும் நிகழ்வுகள் என கருதபடுபவை, அவசர மருத்துவ பாதுகாப்பு அல்லது ஒரு உறவினரின் அல்லது முதலாளி உடன் செல்பவர்; இறுதிசடங்கு / மரணம்; அவசர வணிக  பயணம்; அல்லது மாணவர்கள் அல்லது பரிமாற்ற பார்வையாளர்கள். தயவு செய்து எங்கள் வலைத்தளத்தின்----  துரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள் கவனமாக பின்பற்றவும்.

குழு நியமனங்கள் 

  • ஒரு குழு நியமனம் கோரிக்கை ஒரு குழு ஒருங்கிணைப்பாளரின் ஆன்லைன் சுயவிவரத்தின்வழியாக மட்டுமே கோர முடியும். மற்றும் இக்கோரிக்கை தூதரகத்தின் / துணைத்தூதரகத்தின் ஒப்புதலிற்க்கு உட்பட்டவை
  • அக்கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டபின், குழு ஒருங்கிணைப்பாளர் குழுநியமனத்தை திட்டமிடலாம், ஆனாலும் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் அவர்களுடைய DS -160 படிவத்தை தனித்தனியாக முடித்து விசா கட்டணத்தை செலுத்த வேண்டும். குழு திட்டமிடலின் நேர அமைப்பு குறைவாக உள்ளதால் குழு ஒருங்கிணைப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட காலாவதி திகதியை சரிபார்க்க மறந்துவிடாதீர்கள்

நியமனம் கிடைக்கும்

நேர்காணல் முறையாக அடிப்படையில் வழங்கப்படுகின்றன மற்றும் விண்ணப்பதாரரின் குறிப்பிட்ட அளவுகோல்களைப் பொறுத்தது. தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் மாறுபடும் அல்லது மாறக்கூடிய அளவுகோல்களின் அடிப்படையில் சில விசாக்களுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்த தனி செயல்முறையைக் கொண்டிருக்கலாம். CGI இந்த அளவுகோல்களைத் தீர்மானிப்பதற்குப் பொறுப்பாகாது அல்லது எந்தவொரு நியமனம் அல்லது பிற சேவைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாது.

நேர்காணலுக்கான காத்திருப்பு நேரம்

அமெரிக்கத் தூதரகம் அல்லது தூதரகத்தில் நேர்காணல் சந்திப்பைப் பெறுவதற்கான மதிப்பிடப்பட்ட காத்திருப்பு நேரம் மாறலாம் மற்றும் உண்மையான உள்வரும் பணிச்சுமை மற்றும் பணியாளர்களின் அடிப்படையிலானது. இவை மதிப்பீடுகள் மட்டுமே மற்றும் சந்திப்பின் கிடைக்கும் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்காது.

கடவுச்சீட்டு விநியோகம் 

  • விண்ணப்பதாரர் திட்டமிடல் பணியின்போது தேர்வுசெய்த இடத்தின் அடிப்படையில் கடவுச்சீட்டை சேகரிக்கலாம். விநியோக முகவரி மற்றும் விசா எடுக்கும் இடம் நியமனத் திகதியின் 11:59 மணிவரை மட்டுமே மாற்றமுடியும். இந்த மாற்றத்தை www.ustraveldocs.com  வலைத்தளத்தில் விண்ணப்பதாரரின் சுயவிவரத்தில் செய்ய முடியும்.
  • 14 நாட்களுக்குள் சேகரிக்கப்படாத கடவுச்சீட்டுக்கள் அந்தந்த U.S. தூதரகத்திற்கு / துணைத்தூதரகத்திற்க்கு திருப்பி அனுப்பப்படும். பின்னர், விண்ணப்பதாரர்கள் U.S. தூதரகத்தில் / துணைத்தூதரகத்தில் இருந்து நேரடியாக தங்கள் கடவுச்சீட்டை / ஆவணங்களை எடுக்க வேண்டும்.
  • கடவுச்சீட்டை சேகரிக்க விண்ணப்பதாரர்தங்கள் தங்களது அசல், அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டையை முன்வைக்க வேண்டும். அல்லது விண்ணப்பதாரரின் பிரதிநிதிகள் கடவுச்சீட்டை சேகரிப்பதாயின் அவர்கள் தங்களுடைய அசல், அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டை, விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் ஒரு நகல், மற்றும் விண்ணப்பதாரரின் அங்கீகார கடிதம் போன்றவற்றை முன் வைத்தல் வேண்டும். குழுக்களுக்கு, குழுவில் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சேர்த்து ஒரு அங்கீகார கடிதம் போதுமானது.
  • விண்ணப்பதாரர் தனது சொந்த ஆபத்தில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் கடவுச்சீட்டை சேகரிப்பதில் இருந்து  தடுக்க அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்.

வீசா வழங்கல் 

வீசா வெளியிடவோ அல்லது மறுக்கும் முடிவு  தூதரகம் அல்லது துணைத் தூதரகம் மட்டுமே செய்யப்படுகிறது. CGI ஒரு விண்ணப்பத்தின் முடிவு மீது எந்த பங்கு அல்லது செல்வாக்கு மற்றும் எந்த மதிப்பிடிலும் ஆலோசனை வழங்க முடியாது.  

இணையம்  அடிப்படையிலான இடமாற்றங்கள்  

இணையம் என்பது உலகளாவிய சூழல் என்பதால், இணையத்தை பயன்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்கள் நடைமுறைப்படுத்தும் அவசியம் சர்வதேச அளவிலான தகவல்கள் பரிமாற்றத்தில் ஈடுபடுத்துகிறது. இந்த வலைத்தளத்தை உலாவுவதன் மூலமும் CGI உடன் மின்னணு முறையில் தொடர்பு கொள்வதன் மூலமும் விண்ணப்பதாரர்கள் இதை புரிந்துகொண்டு இதே  பாணியில் CGI ஐ  தனிப்பட்ட முறையில் செயலாக்க ஒப்புக்கொள்கிறார்கள்.

பிற இணையதளங்கள்  

CGI வலைத்தளமானது CGI கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள மற்ற வலைத்தளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருக்கும், மேலும் இந்த தனியுரிமைக் கொள்கையினால் மூடப்பட்டிருக்காது.வழங்கப்பட்ட இணைப்புகளை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் பிற தளங்களுக்குள்  அணுகினால், அந்த தளங்களின் இயக்கிகள் விண்ணப்பதாரர் தகவலை சேகரிக்கலாம்.அவர்கள் இந்த தகவலை தங்கள் தனியுரிமைக் கொள்கைகளுக்கு இணங்கிப் பயன்படுத்தலாம், இது CGI இன் வேறுபாட்டில் இருக்கலாம்.CGI, எங்கள் அலுவலர்கள், ஊழியர்கள் அல்லது முகவர்கள் எந்தவொரு வலைத்தளத்திற்கும் அல்லது அவற்றில் உள்ள எந்தவொரு தகவலுக்கும் எந்தவொரு பொறுப்பையும் கொண்டிருக்கவில்லை, அவற்றில் எதுவுமே CGI அல்லது அதனின் கூட்டாளர்களால் சரிபார்க்கப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை.

பொது 

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளடக்கங்களை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் மற்றும் விண்ணப்பதாரர்கள் பயன்பாடு நேரத்தில் பொருந்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்