எனது நேர்காணலுக்கு நேரம் குறிப்பதைத் திட்டமிடுக

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

பொதுவாக, அமெரிக்க நாட்டிற்குள் நுழைய விரும்புகிற அந்நிய நாட்டுக் குடியுரிமை பெற்ற ஒருவர் முதலில் ஒரு வீசாவைப் பெற்றாக வேண்டும், அது தற்காலிகமாகத் தங்குவதற்கான குடிவரவாளர் அல்லாதோர் வீசாவாகவோ அல்லது நிரந்தரமாக வசிப்பதற்கான குடிவரவாளர் வீசாவாகவோ இருக்கலாம். தகுதிபெற்ற நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களும், வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ், வீசா இல்லாமலேயே அமெரிக்காவிற்கு வந்து போக முடியலாம். வீசா தள்ளுபடித் திட்டத்திற்கு நீங்கள் தகுதியடையவில்லை என்றாலோ அல்லது படிப்பதற்கு, வேலை பார்ப்பதற்கு அல்லது ஒரு பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்பதற்காக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றாலோ, நீங்கள் ஒரு குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசாவிற்கு விண்ணபித்தாக வேண்டும்.

அமெரிக்க வீசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள், அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத்தூதரகத்தில் நடைபெறுகிறதோர் வீசா நேர்காணலுக்கு நேரில் ஆஜராக வேண்டும். அந்த நேர்காணலுக்கானதோர் நேரத்தை, இந்த இணையதளத்தை உபயோகித்து ஆன்லைனிலோ அல்லது அழைப்பு மையத்தின் வாயிலாகவோ நீங்கள் குறித்தாக வேண்டும்.

ஆதார ஆவணங்கள்

குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா நேர்காணலுக்கு நேரம் ஒன்றைத் திட்டமிடுவதற்கு, உங்களிடம் பின்வரும் தகவல்களும், ஆவணங்களும் இருந்தாக வேண்டும்:

  • அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்;
  • உங்கள் விசா விண்ணப்பம் (MRV) கட்டணம் செலுத்தும் ரசீது; மாலத்தீவில் வசிப்பவர்கள் ஒரு சந்திப்பை திட்டமிட இந்த ரசீது தேவையில்லை மற்றும் இலங்கை வங்கியில் வரையப்பட்ட இலங்கை ரூபாயில் வங்கி வரைவு மூலம் தங்கள் கட்டணங்களை "UNITED STATES DISBURSING OFFICER, SYMBOL 8768" க்கு செலுத்தலாம்.
  • உங்கள் DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கம்;
  • உங்கள் மின் - அஞ்சல் முகவரி; மற்றும்
  • பொருந்துமானால், வீசா வகையின் அடிப்படையில் தேவையான ஆவணங்கள் (மனு-அடிப்படையிலான வீசாக்களுக்கு ஒரு மனு அங்கீகாரம் போன்று); வீசா வகைகள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களையும், அவை ஒவ்வொன்று குறித்த தகவல்களையும் இங்கே காணலாம்).
நேர்காணலுக்குக் குறித்த நேரங்களை மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள்

விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காகக் குறித்துக் கொள்கிற நேரங்களை இத்தனை தடவை தான் மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு அவர்களுக்கு வரம்பு விதிக்கப்படுகிறது. இன்னொரு வீசா விண்ணப்பக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியது வராத வரையில் தயவுசெய்து அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

இன்னும் அதிகச் செயல்பாடுகள்

நேர்காணலுக்கு நேரமொன்றைக் குறிக்கத் திட்டமிடுங்கள்
நேர்காணலுக்குக் குறித்த நேரத்தை மாற்றுங்கள்