எனது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்தல்

இந்தப் பக்கத்தில்:

மேலோட்டம்

குழந்தைகள் உள்ளிட்ட, ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தங்களுக்கென்று சொந்தமாக DS-160 படிவ வீசா விண்ணப்பத்தை வைத்துக் கொள்ள வேண்டும். DS-160 படிவத்தை உங்களது நேர்காணலுக்கு முன் அமெரிக்கத் தூதரகம் அல்லது தூதரக அலுவலகத்தில் ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பித்தாக வேண்டும். DS-160 படிவத்தின் உறுதிப்படுத்தல் பக்கத்தில் உள்ள பட்டைக் குறியீட்டு எண், உங்களது நேர்காணலைப் பதிவு செய்ய அவசியமாகிறது. DS-160 படிவத்தை ஆன்லைனில் தான் சமர்ப்பித்தாக வேண்டும் - அமெரிக்கத் தூதரகம் அல்லது தூதரக அலுவலகம் கையால் எழுதிய அல்லது தட்டச்சு செய்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளாது மேலும் DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கம் இல்லாம உங்களது நேர்காணலில் கலந்து கொள்வதற்கு நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.

நீங்கள் உங்கள் படிவத்தை மின்னணு ரீதியாகக் கையொப்பமிடும் போது, அதிலுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவையும், சரியானவையுமாக இருப்பதாக நீங்கள் சான்றளிக்கிறீர்கள். உண்மைகள் எதையும் தவறாகக் குறிப்பிடுவது, உங்களை அமெரிக்காவிற்குள் நுழையத் தகுதியற்றவராக ஆக்கிவிடக்கூடும். உங்கள் பதில்கள் அனைத்தும் துல்லியமானவையாக இருக்கின்றன என்பதையும், ஒவ்வொரு கேள்விக்கும் முழுமையாகப் பதிலளித்திருக்கிறீர்கள் என்பதையும் தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு: DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்வது குறித்த விசாரணை எதனையும் பின்வரும் இணையதளத்தில் பார்த்துத் தீர்த்துக் கொள்ளலாம். இந்நடைமுறையில் கேள்விகள் எதற்கும் பதிலளிப்பதோ அல்லது அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவோ எங்களால் இயலாது.

DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள்

குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்ப நடைமுறையை படித்துப் பார்த்த பிறகு உங்கள் DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். அமெரிக்கத் தூதரகத்தில் அல்லது தூதரக அலுவலகத்தில் நேர்காணலுக்காக நேரம் குறிப்பதற்கு முன்பாக நீங்கள் உங்கள் DS-160 விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பித்தாக வேண்டும்.

  • DS-160 படிவத்தின் ஆரம்பத்தில் நீங்கள் தேந்தெடுக்கிற தூதரகம் அல்லது துணைத் தூதரகம் தான் நீங்கள் உங்கள் நேர்காணலைத் திட்டமிடுகிற அதே தூதரகம் அல்லது துணைத் தூதரகமாக இருந்தாக வேண்டும்.
  • உங்களது சொந்த மொழி எழுத்துக்களில் உங்களது முழுப் பெயரை எழுதுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்ளப்படும் போது தவிர்த்து, அனைத்துக் கேள்விகளுக்கும் ஆங்கில-மொழி எழுத்துக்களை மட்டுமே உபயோகித்து ஆங்கிலத்திலேயே பதிலளித்தாக வேண்டும்.
  • DS-160 படிவ நடைமுறையின் ஒரு பகுதியாக நீங்கள் கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்ததோர் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. தரமானதோர் புகைப்படத்தை எடுத்து அதனைச் சமர்ப்பிப்பதற்கான விபரமான வழிகாட்டுதல்கள் அமெரிக்க அயலுறவுத் துறை இணையதளத்தில் இங்கே உள்ளன.
  • 20 நிமிட நேரத்திற்கும் மேலாக நீங்கள் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்வதை நிறுத்தி விட்டால், உங்கள் அமர்வு காலாவதியாகிவிடும். உங்களது விண்ணப்ப அடையாள எண்ணை நீங்கள் பதிவு செய்து வைத்திருந்தாலோ அல்லது உங்கள் கணினியில் உள்ளதோர் கோப்பில் உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் சேமித்து வைத்திருந்தாலோ அன்றி, நீங்கள் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இப்பக்கத்தின் வலது-கை மேல் மூலையில் காண்பிக்கப்படுகிற விண்ணப்ப அடையாள எண்ணை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்பாக நீங்கள் உங்கள் உலாவியை மூட வேண்டியிருந்தால், உங்கள் விண்ணப்பத்தைத் தொடர்வதற்கு உங்களுக்கு இந்த விண்ணப்ப அடையாள எண் தேவைப்படும்.
  • பூர்த்திசெய்த DS-160 விண்ணப்பப் படிவம் ஒரு எழுத்து-எண் கொண்ட பட்டைக் குறியீட்டு உறுதிப்படுத்தல் பக்கத்தை உருவாக்கும். இந்தப் பக்கத்தை அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்கத் தூதரகத்தில் அல்லது துணைத்தூதரகத்தில் நடைபெறும் நேர்காணலுக்கு இந்த அச்சிட்ட உறுதிப்படுத்தல் பக்கம் அவசியமாகிறது.
  • பட்டைக் குறியீட்டு உறுதிப்படுத்தல் பக்கத்தை நீங்கள் அச்சிட்டதும், உங்கள் உலாவியில் உள்ள “பின்செல்” பொத்தானைத் தட்டி, DS-160 படிவத்தின் நகல் ஒன்றை உங்களுக்காக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். மின்னஞ்சல் செய்த PDF கோப்பு வடிவில் இருக்கும், அதனைப் பார்வையிடவோ அல்லது அச்சிடவோ உங்களுக்கு Adobe Acrobat மென்பொருள் அவசியமாகிறது.

இன்னும் அதிகத் தகவல்கள் DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்வது குறித்த விசாரணை எதனையும் பின்வரும் இணையதளத்தில் பார்த்துத் தீர்த்துக் கொள்ளலாம். இந்நடைமுறையில் கேள்விகள் எதற்கும் பதிலளிப்பதோ அல்லது அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவோ எங்களால் இயலாது.

DS-160 படிவம் ஆன்லைனில் இங்கே உள்ளது.