துரிதமாக நேரம் குறிக்க விண்ணப்பியுங்கள்
இந்தப் பக்கத்தில்:
மேலோட்டம்
கீழே பட்டியலிட்டுள்ள வரன்முறைகள் ஒன்றுக்கு ஏற்ப உங்களுக்கு எதிர்பாராத பயணத் தேவைகள் ஏற்பட்டால், அமெரிக்கத் தூதரகத்தில் கிடைக்கும் தன்மையைப் பொருத்து நீங்கள் ஒரு விரைவு நேர்காணல் நேரம் குறிப்பதற்குத் தகுதியடையலாம். விண்ணப்பதாரர்கள் ஒரு விரைவான சந்திப்புக் கோரிக்கையை மட்டுமே உருவாக்க அனுமதிக்கப்படுவதால், எல்லா நிபந்தனைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பது முக்கியம்.
தகுதிகள்
நேர்கானல் ஒன்றுக்குத் துரிதமாக நேரம் குறிக்க நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நீங்கள் முதலில் வழக்கமான நேரம் குறிக்கும் நடைமுறை வழியாக நேர்காணலுக்கான நேரம் ஒன்றைக் குறித்துக் கொள்ள வேண்டும், அதோடு அந்த அவசரத்தை நிரூபிக்கத் தேவையான ஆவணத் தடயம் உங்களிடம் இருக்கிறது என்பதையும் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே முதலில் ஒரு நேரத்தை ஆன்லைனில் குறித்திருக்கவில்லை என்றால், அவசர நேரக் குறிப்புகளுக்கான வேண்டுகோள் பரிசீலிக்கப்படாது. உங்கள் வீசா நேர்காணலின் போது, அவசரப் பயணத்திற்கான காரணங்களை நீங்கள் தவறாகத் தெரிவித்திருக்கிறீர்கள் என்பதாகத் தோன்றும் பட்சத்தில், அது போன்ற யதார்த்தங்கள் உங்களது வழக்குக் கோப்பில் குறிக்கப்பட்டு, அது உங்கள் வீசா விண்ணப்பத்தின் முடிவைப் பாதிக்கலாம். துரிதமாக நேரம் குறிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கிற விண்ணப்பதாரர்கள் அனைவரும், முதலில் வழக்கமானதோர் வீசா நேர்காணலுக்கு நேரக் குறிக்கப் பணம் செலுத்த வேண்டும். அமெரிக்கத் தூதரகத்தில் துரித வீசா நேர்காணலுக்கு நேரம் குறித்துத் தரப்பட்டு, இறுதியில் வீசா மறுக்கப்படுகிற விண்ணப்பதாரர்கள், பயணம் செய்வதற்கான அதே காரணத்திற்காக இன்னொரு துரித வீசா நேர்காணலுக்கு நேரக் குறித்துப் பெறுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
குறிப்பு: திருமணம் மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்ளும் நோக்கத்திற்காக, கர்ப்பமாக உள்ள உறவினர்களுக்கு உதவியாக இருக்க, வருடாந்திர வியாபார/கல்வி/தொழில் நிபுணர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அல்லது கடைசி-நிமிட சுற்றுலாவில் கலந்து கொண்டு மகிழ்வதற்காகப் பயணம் செய்வது, துரித நேர்காணல் நேரக் குறிப்பிற்குத் தகுதியாவதில்லை. ஒவ்வொரு பயணத்திற்கும், தயவுசெய்து அதிக நாட்களுக்கு முன்பே வழக்கமானதோர் வீசா நேர்காணலுக்கான நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக, பின்வரும் வகைகளில் வருகிற வேண்டுகோள்கள் மட்டுமே அவசர நேரக் குறிப்புகளுக்குப் பரிசீலிக்கப்படும்:
- கடுமையாக சுகவீனமாக உள்ளதோர் உறவினரை சந்தித்து அவருக்கு உதவி செய்ய அல்லது ஒரு குடும்ப அவசரத்திற்கு உதவி செய்வதற்காக பயணம் செய்கிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கான மனிதாபிமான வேண்டுகோள்.
- பொதுவான நோக்கங்களுக்காகப் பயணிக்காமல், அல்லது பல்வேறு விதமான கூட்டங்கள் மற்றும் உல்லாச நோக்கங்களுக்காகப் பயணிக்காமல், அமெரிக்க நிறுவனம் ஒன்றின் எழுத்துப் பூர்வமான வேண்டுகோளின்படி குறிப்பான கூட்டங்களில் கலந்து கொள்கிற வியாபாரப் பயணிகள்.
மருத்துவத் தேவை
பயணத்தின் நோக்கமே அவசர மருத்துவக் கவனிப்பை பெறுவது, அல்லது அவசர மருத்துவக் கவனிப்பிற்குச் செல்கிற உறவரினர் அல்லது பணியாளர் ஒருவரோடு துணைக்குச் செல்வதாக இருக்கிறது.
அத்தியாவசிய ஆவணம்:
- உங்கள் மருத்துவ நிலைமையையும், அமெரிக்காவில் நீங்கள் ஏன் மருத்துவக் கவனிப்பை நாடுகிறீர்கள் என்பதையும் விவரித்து உங்கள் மருத்துவரிடமிருந்து பெற்ற கடிதம் ஒன்று.
- உங்களுக்குள்ள நோய் நிலைக்குச் சிகிச்சையளிப்பதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும், சிகிச்சைக்கு ஆகும் உத்தேசமான செலவை வழங்கியும், அமெரிக்காவில் உள்ள மருத்துவர் அல்லது மருத்துவமனையிலிருந்து பெற்ற கடிதம் ஒன்று.
- சிகிச்சைக்கு ஆகும் செலவிற்கு நீங்கள் எவ்விதம் பணம் செலுத்துவீர்கள் என்பதற்கான தடயம்.
இறுதிச் சடங்கு/மரணம்
அமெரிக்காவில் உள்ள நெருங்கிய குடும்ப உறுப்பினரின் (தாய், தந்தை, சகோதரர், சகோதரி, குழந்தை) இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதே அல்லது அவர்களின் உடலைச் சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான ஏர்பாடுகளைச் செல்வதே பயணத்தின் நோக்கம்.
அத்தியாவசிய ஆவணம்:
- தொடர்புத் தகவல்கள், மரணமடைந்தவர் குறித்த விவரங்கள் மற்றும் இறுதிச் சடங்குத் தேதி ஆகியவற்றைத் தெரிவித்து இறுதிச் சடங்கு இயக்குநரிடமிருந்து பெற்றதோர் கடிதம்.
- மரணமடைந்தவர் உங்களது நெருங்கிய உறவினர் என்பதைத் தெரிவிப்பதற்கான அத்தாட்சியையும் நீங்கள் காண்பித்தாக வேண்டும்.
அவசர வியாபாரப் பயணம்
பயணத்தின் நோக்கமானது ஒரு அவசர வியாபார விஷயத்தில் கலந்து கொள்வது, இதில் பயணத்திற்கான தேவையை முன்பே கணிக்க முடியவில்லை.
அத்தியாவசிய ஆவணம்:
- திட்டமிட்ட வருகையின் அவசரத்திற்கு அத்தாட்சியளித்தும், வியாபாரத்தின் தன்மையை விவரித்தும், வீசா நேர்காணலுக்குத் துரிதமாக நேரம் குறிக்கவில்லை என்றால் அமெரிக்காவில் உள்ள நிறுவனம் அல்லது உங்கள் பகுதியில் உள்ள நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வாய்ப்பினை இழக்கும் என்பதையும் விவரித்தும் அமெரிக்காவில் உள்ள தொடர்புடைய நிறுவனத்திடமிருந்து பெற்ற ஓர் அழைப்புக் கடிதம்.
அல்லது
- மூன்று மாதங்கள் அல்லது அதைவிடக் குறைவான காலத்திற்கு அமெரிக்காவில் எடுக்க அவசியமாகிற பயிற்சித் திட்டத்திற்கானதோர் தடயம், உங்கள் பகுதியில் உள்ள பணியமர்த்தும் நிறுவனத்திடமிருந்தும், பயிற்சியை வழங்குகிற அமெரிக்க நிறுவனத்திடமிருந்தும் பெற்ற கடிதங்களைச் சேர்க்க வேண்டும். அவ்விரு கடிதங்களிலும், பயிற்சி குறித்ததோர் விவரமான விளக்கத்தையும், அதோடு வீசா நேர்காணலுக்குத் துரிதமாக நேரம் குறித்துக் கிடைகக்வில்லை என்றால் அமெரிக்காவில் உள்ள நிறுவனம் அல்லது உங்கள் பகுதியில் உள்ள நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வாய்ப்பினை இழக்கும் என்ற விளக்கத்தையும் சேர்க்க வேண்டும்.
ESTA மறுக்கப்பட்டது
நீங்கள் வீசா தள்ளுபடித் திட்டம் பங்குதாரர் , குடிமகனாக இருந்தால் நீங்கள் ஒரு துரிதப்படுத்தும் விசா நியமனத்திற்கு கோரிக்கை இடலாம் , ஆனால் நீங்கள் இனி இத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கு தகுதியற்றவர் என்று அறிவிப்பு பெற்றிருப்பீர்கள். இத்தகைய பயணிகள் ஈராக், ஈரான், சூடான், சிரியா வின் இரட்டை பிரஜைகள் ஆயின் அல்லது மார்ச் 1, 2011 க்கு பிறகு ஈராக், ஈரான், சூடான், சிரியா, லிபியா, யேமன், அல்லது சோமாலியாவிற்கு பயணம் செய்த பயணிகளுக்கு அடங்கும். உங்கள் பயணமாவது உடனடி துரிதப்படுத்தும் நியமனத்திற்கு தகுதியாக இருக்க வேண்டும். உங்கள் கோரிக்கையில் பயணத் திகதி மற்றும் நோக்கத்தையும் சேர்க்கவும்.
அத்தியாவசிய ஆவணங்கள்:
- அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பில் இருந்து பேற்றுக்கு கொண்ட ESTA நிலை குறித்த செய்தி நகல்.
துரிதமாக நேரம் குறிப்பதற்கு விண்ணப்பித்தல்
படி 1
குடிவரவாளர் அல்லாத வீசா மின்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.
படி 2
வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
படி 3
மிகச் சீக்கிரத்தில் கிடைக்கக் கூடிய தேதியில் ஒரு நேரத்தை ஆன்லைனில் குறிக்கத் திட்டமிடுங்கள். நீங்கள் ஓர் துரிதத் தேதியை வேண்டிக் கொள்வதற்கு முன்பாக நீங்கள் ஒரு நேரத்தைக் குறித்தாக வேண்டும் என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான நேரத்தை நீங்கள் திட்டமிடும் நேரத்தில், திரையில் தோன்றும் செய்தி மிகச் சமீபத்தில் கிடைக்கிற நேரம் குறிப்பதற்கான தேதியை உங்களுக்குக் காண்பிப்பதை நீங்கள் காண்பீர்கள், அதில் துரித நேரம் குறிப்பதற்கான தேதியும் அடங்குகிறது. அதற்கேற்ப, அதை விட முன்னதான தேதி எதுவும் கிடைப்பதில்லை என்பதால், நீங்கள் துரித நேரம் குறிப்பதற்கான வேண்டுகோள் ஒன்றை விடுக்கத் தேவையில்லை என்பதை நீங்கள் காணலாம்.
நீங்கள் துரித நேரக் குறிப்பிற்கான வேண்டுகோளை மேற்கொள்ள விரும்பினால், துரித வேண்டுகோள் படிவத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யுங்கள் அல்லது உதவிக்கு வேண்டுகோள் விடுக்க அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். துரிதமாக நேரம் குறிப்பதற்கு உங்களைத் தகுதியாக்குவதாக நீங்கள் நம்புகிற அவசரத்தின் வகையைக் குறிப்பிடுவதை தயவுசெய்து உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் வேண்டுகோளை நீங்கள் சமர்ப்பித்ததும், மின்னஞ்சல் வழியாக வந்து சேரும் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திலிருந்து வரும் பதிலுக்காகத் தயவுசெய்து காத்திருங்கள்.
படி 4
அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் உங்கள் வேண்டுகோளை அங்கீகரிக்கிற பட்சத்தில், உங்கள் துரித நேரக்குறிப்பை ஆன்லைனில் திட்டமிடுமாறு உங்களை உசார்படுத்தி ஒரு மின்னஞ்சல் செய்தியை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அழைப்பு மையம் உங்களுக்கான துரித நேரக்குறிப்பைத் திட்டமிட்டுத் தர முடியாது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள், ஆனால் கேள்விகள் எழும் பட்சத்தில் முகவர்களால் உங்களுக்கு உதவ இயலும். துரித நேரக்குறிப்பு ஒன்றுக்கான உங்களது வேண்டுகோளை அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் மறுத்து விடுகிற பட்சத்தில், அந்த மறுப்பு குறித்து உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அறிவிக்கப்படும் மேலும் நீங்கள் ஏற்கெனவே குறித்துள்ள நேரத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பு: உங்கள் வேண்டுகோளை உறுதி செய்கிற அல்லது மறுக்கிற மின்னஞ்சல் என்ற no-reply@ustraveldocs.com முகவரியில் இருந்து வரும். சில மின்னஞ்சல் பயன்பாடுகள், தெரியாத அனுப்புனர்களிடமிருந்து மின்னஞ்சல்களை வடிகட்டி அவற்றை ஸ்பேம் அல்லது ஜங்க் அஞ்சல் கோப்புறைகளுக்கு அனுப்பி வைக்கும் விதிகளைக் கொண்டுள்ளன. உங்கள் மின்னஞ்சல் அறிவிப்பை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், உங்கள் ஜங்க் மற்றும் ஸ்பேம் மின்னஞ்சல் கோப்புறைகளில் உள்ள செய்திகளில் தேடிப் பாருங்கள்.
படி 5
உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். நீங்கள் உங்கள் நேரக் குறிப்புக் கடிதத்தின் அச்சிட்ட நகல் ஒன்றையும், உங்கள் DS-160 படிவத்தின் உறுதிப்படுத்தல் பக்கத்தையும், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும், உங்களது தற்போதைய மற்றும் அனைத்துப் பழைய கடவுச்சீட்டுக்களையும், ஆதார ஆவணங்களையும் கொண்டு வர வேண்டியிருக்கும். இத்தகைய உருப்படிகள் அனைத்தும் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.