வங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள் / எனது வீசா கட்டணத்தைச் செலுத்துதல்

இந்தப் பக்கத்தில்:

மேலோட்டம்

குழந்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், தங்களது அமெரிக்க வீசா விண்ணப்ப நடைமுறையைத் துவக்குவதற்கு எந்திரம் படித்துணரக்கூடியதோர் வீசா (Machine Readable Visa (MRV)) கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த அமெரிக்க அரசாங்கத்தின் கட்டாயக் கட்டணமானது, வீசா வழங்கப்படுகிறதோ இல்லையோ, ஆனால் வீசா கொடுப்பது குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கான கட்டணமாகும்.

இந்த MRV கட்டணம், திரும்பத் தரக்கூடியதல்ல மேலும் அடுத்தவருக்கு மாற்றிக் கொள்வதுமல்ல. விண்ணப்பதாரர்கள் தங்களது வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்பாக, முதலில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்குத் அவர்களுக்கு ஒரு வீசா தேவையா இல்லையா என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

வீசா தேவைப்படாமல் இருக்கக் கூடிய நபர்களுக்கான உதாரணங்களில் அடங்குபவர்கள்; ஆனால் இவர்கள் மட்டும் தான் என்றில்லை:

  • நீங்கள் அலுவலகப் பூர்வ பயணத்திற்கான ஒரு A அல்லது G வீசாவிற்கு விண்ணப்பிக்கிற பட்சத்தில், நீங்கள் MRV கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை
  • நீங்கள் அமெரிக்க அரசாங்கம் நிதியுதவியளிக்கிற திட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக ஒரு J வீசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், (G-1, G-2, G-3, G-7 என்ற குறியீடுகளைக் கொண்டு ஆரம்பிக்கிற திட்டங்கள்) நீங்கள் MRV கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
  • நீங்கள் செய்ய எண்ணங் கொண்டுள்ளதோர் பயணத்திற்கான செல்லுபடியாகிறதோர் வீசா உங்களிடம் ஏற்கெனவே இருக்கிற பட்சத்தில், உங்களுக்கு ஒரு வீசா தேவைப்படாமல் போகலாம்
  • நீங்கள் கனடா அல்லது பெர்முடா நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களாக (ஆனால் A, E, G, K அல்லது V வீசா வகைக்கு விண்ணப்பிக்காதவராக) இருந்தால், உங்களுக்கு ஒரு வீசா தேவைப்படாமல் போகலாம்

நீங்கள் வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதிருந்தால், தயவுசெய்து பணம் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிட அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, அவர்கள் வெற்றிகரமாக பணம் செலுத்தியாக வேண்டும். தங்களது வீசா வகைக்கு சரியான கட்டணத்தைச் செலுத்தாத விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் ஒன்றுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம்.

ஆரம்பகட்ட நேர்காணலைத் திட்டமிட்டதும், விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காகக் குறித்துக் கொள்கிற நேரத்தை இத்தனை தடவை தான் மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு அவர்களுக்கு வரம்பு விதிக்கப்படுகிறது. குறித்த நேர்காணல் நேரத்திற்கு நீங்கள் வரத் தவறினால், இன்னொரு நேர்காணலுக்கு நேரம் குறிக்க நீங்கள் மறுபடியும் MRV கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கலாம். நீங்கள் கூடுதல் வீசா விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியது வராத வரையில் தயவுசெய்து அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வீசா விண்ணப்பக் கட்டணங்கள் திருப்பித் தரக்கூடியவையல்ல.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்: விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காகக் குறித்துக் கொள்கிற நேரங்களை இத்தனை தடவை தான் மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு அவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இன்னொரு வீசா விண்ணப்பக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியது வராத வரையில் தயவுசெய்து அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வீசா விண்ணப்பக் கட்டணங்கள் திருப்பித் தரக்கூடியவையல்ல.

வீசா வழங்கல் கட்டணம் (பிரதிச்சலுகைக் கட்டணம்)

வீசா வழங்கல் கட்டணம் (பிரதிச்சலுகைக் கட்டணம்) உங்கள் குடியுரிமை வகை மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் வீசா வகை ஆகியவற்றைப் பொருத்து, நீங்கள் வீசா வழங்கல் கட்டணம் அல்லது "பிரதிச்சலுகைக்" கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டியிருக்கலாம். இந்தக் கட்டணம் MRV கட்டணம் அல்ல, மேலும் இதனை நேர்காணலுக்கு நேரம் குறிப்பதற்காக உபயோகிக்க முடியாது. உங்களது முந்தைய வீசாவை நீங்கள் புதுப்பித்து, உங்கள் விண்ணப்பத்தை நேர்காணல் தள்ளுபடி வழியாகச் சமர்ப்பிக்கிறீர்கள் என்றால் மட்டுமே நீங்கள் முன்னதாகவே பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் நேர்காணலுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், முன்னதாகவே பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்தாதீர்கள்; அந்தக் கட்டணத்தை உங்களது நேர்காணல் நடைபெறும் நேரத்தில், அமெரிக்கத் தூதரக / துணைத் தூதரக அதிகாரியின் தூதரகப் பிரிவிலேயே செலுத்த வேண்டும்.

பொருந்துகிற பிரதிச்சலுகைக் கட்டணத் தொகைகளைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்தப் பக்கத்தில் பாருங்கள்.

உங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

இலங்கையில், DFCC வர்தானா வங்கியின் எந்தக் கிளையிலும் நீங்கள் நேரில் சென்று உங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்தும் வழிவகை விவரங்களைப் பார்க்க, நீங்கள் முதலில் விண்ணப்பதாரர் தளத்தில் பதிவு செய்து கொண்டு, அதன் பின் ‘உங்கள் நேர்காணலுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுங்கள்’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான படிகளுக்குக் கீழே பாருங்கள். உங்களுக்கு அருகாமையில் உள்ள DFCC வங்கிக் கிளையைக் கண்டுபிடிக்க, தயவுசெய்து சொடுக்குங்கள்: இங்கே

படி 1

எமது ஆன்லைன் விண்ணப்ப அமைப்பில் புகு-பதிகை செய்து, ஒரு சுயவிவரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது உரிய தொகை செலுத்தப்பட்டு, உரிய நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்யும். தொகையின் மதிப்புகள் அமெரிக்க டாலர்களில் (USD) காண்பிக்கப்படுகின்றன; ஆயினும், நீங்கள் இலங்கையில் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், அக்கட்டணத்தை இலங்கை ரூபாயில் (LKR) செலுத்த வேண்டும். வெவ்வேறு வீசா விண்ணப்பக் கட்டணங்கள் குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன.

படி 2

இடது-கைப் பக்கத்தில் உள்ள மெனுவில் எனது நேர்காணல் நேரம் குறிப்பதைத் திட்டமிடுக என்ற வழிவகை மீது சுட்டுக. வீசா வகை, அலுவலகம், வீசா வகைப்பாடு மற்றும் வகுப்பு ஆகியவற்றுக்கான படிகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

படி 3

நீங்கள் பணம் செலுத்துவதற்கான திரைக்கு வந்து சேர்ந்ததும், பணம் செலுத்தும் வழிவகைகள் மீது சொடுக்குங்கள். DFCC வங்கிக் கிளை இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக, நீங்கள் உங்கள் CGI டெப்பாசிட் சீட்டை அச்சிட்டுக் கொள்வீர்கள். டெப்பாசிட் சீட்டை பல நகல்களாக அச்சிடாதீர்கள். நீங்கள் உங்கள் குடும்பம் அல்லது குழுவிற்காக பல வீசாக்களுக்கு விண்ணப்பிக்கிற பட்சத்தில், ஒரே ஒரு முறை பணம் செலுத்துவதே அவசியமாகிறது.

LKR தொகைகள், அமெரிக்க அயலுறவுத் துறை தீர்மானிக்கிற தூதரகப் பரிமாற்ற விகிதத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றன. தங்களது வீசா வகைக்கு சரியான கட்டணத்தைச் செலுத்தாத விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் ஒன்றுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம்.
படி 4

உங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு DFCC வங்கி இருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். DFCC டெப்பாசிட் சீட்டைப் பூர்த்தி செய்து, கட்டணத்தைக் காசாளரிடம் கொடுங்கள். நீங்கள் வீசாக் கட்டணத்தைச் செலுத்தும் போது, அது ஒரு விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன் தேவையாக அவசியமாகிற திருப்பித் தரமுடியாத வீசா விண்ணப்பக் கட்டணம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இது, விண்ணப்பதாரரோடு செய்து கொள்கிறதோர் ஒப்பந்தம் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதில்லை அல்லது அவ்விண்ணப்பம் வெற்றிகரமானதாக அமைவதை உத்திரவாதமளிப்பதில்லை. இந்த விண்ணப்பத்தின் முடிவு என்ன என்பதைப் பொருட்படுத்தாமல், பணம் திருப்பித் தருவது எதுவும் சாத்தியமல்ல.

படி 5

வீசா விண்ணப்பக் கட்டணத்தை நீங்கள் செலுத்தி விட்ட பிறகு, உங்கள் பதிவிற்காக DFCC வங்கிக் காசாளர் இரசீதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அது தொலைந்து போனால் அதற்குப் பதிலாக ஒன்றைப் பெற முடியாது. உங்கள் CGI பார்வை எண் இல்லாமல் உங்களால் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறிக்கத் திட்டமிட முடியாது.

படி 6

உங்கள் வீசாக் கட்டணத்தை நீங்கள் செலுத்தியதும், அடுத்து வருகிற வேலை நாளில் காலை 1:00 மணிக்கு உங்கள் நேர்காணலுக்கு நேரம் குறிப்பதை நீங்கள் திட்டமிடலாம். உங்கள் சுயவிவரத்திற்குள் புகு-பதிகை செய்து, உங்கள் CGI பார்வை எண்ணைக் கொண்டு உங்கள் நேர்காணலுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுவதற்கான படிகளைப் பூர்த்தி செய்யுங்கள்.

கட்டணம் செலுத்தும் வழிவகைகள்

DFCC வங்கிக் கிளைகளில் ரொக்கம் செலுத்துதல்:

எந்த DFCC வங்கிக் கிளையிலும் நீங்கள் ரொக்கமாக உங்கள் குடிவரவாளர் அல்லாதோர் வீசா (NIV) விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்துமிடத்திற்குச் செல்வதற்கு முன்பாக, பொருந்துகிற அமெரிக்க வீசா கட்டண வசூலிப்புச் சீட்டை அச்சிட்டு, அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் (உங்கள் சுயவிவரத்திற்குள் புகுபதிகை செய்த பிறகு கிடைக்கின்றது).

டெப்பாசிட் சீட்டை பல நகல்களாக அச்சிடாதீர்கள். நீங்கள் உங்கள் குடும்பம் அல்லது குழுவிற்காக பல வீசாக்களுக்கு விண்ணப்பிக்கிற பட்சத்தில், ஒரே ஒரு முறை பணம் செலுத்துவதே அவசியமாகிறது. ஒரே ஒரு CGI டெப்பாசிட் சீட்டு மட்டுமே அவசியமாகிறது. உங்கள் கட்டணத்தைச் செலுத்துவதற்கு உங்களோடு அச்சிட்ட டெப்பாசிட் சீட்டை எடுத்துச் செல்லுங்கள். டெப்பாசிட் சீட்டில் சுட்டிக்காட்டியுள்ள மிகச் சரியான தொகையையே நீங்கள் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

DFCC வங்கிக் கிளையில், தயவுசெய்து டெப்பாசிட் சீட்டில் கோப்பிட்டுள்ள ‘பார்வை எண்’ என்பதில் CGI பார்வை எண்ணைப் பதிவு செய்வது உட்பட DFCC டெப்பாசிட் சீட்டைப் பூர்த்தி செய்யுங்கள். CGI பார்வை எண்ணைப் பூர்த்தி செய்யாமல் விடாதீர்கள். நீங்கள் செலுத்திய தொகையைப் பெற்றுக் கொண்ட பிறகு, DFCC வங்கிக் காசாளர் உங்களிடம் ஒரு இரசீதைக் கொடுப்பார்.

CGI பார்வை எண்ணோடு உங்கள் இரசீதைப் பத்திரப்படுத்தி வையுங்கள். அது தொலைந்து போனால் அதற்குப் பதிலாக ஒன்றைப் பெற முடியாது. உங்கள் CGI பார்வை எண் இல்லாமல் உங்களால் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறிக்கத் திட்டமிட முடியாது.

உங்கள் நேர்காணலைத் திட்டமிடுதல்

உங்களது நேர்காணலுக்கான நேரத்தை நீங்கள் ஆன்லைன்-ல் குறிக்கிறீர்களோ அல்லது எங்களது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்கிறீர்களோ, உங்கள் வங்கி டெப்பாசிட் சீட்டில் அச்சிட்டுள்ள CGI பார்வை எண் உங்களுக்கு அவசியமாகும்.

DFCC இரசீது

Deposit Slip_sample - New

குறிப்பு: தயவுசெய்து ‘பார்வை எண்’ பகுதியில் CGI பார்வை எண்ணை உள்ளிடுங்கள்.

DFCC வங்கி இருக்கும் இடங்களுக்குச் சென்று ரொக்கம் செலுத்துதல்

நடவடிக்கை எடுக்கும் கால நேரங்களுக்குக் கீழுள்ள அட்டவணையைப் பாருங்கள்

வீசா விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதைப் பரிசீலிக்கும் நேரங்கள் - DFCC வங்கியில் ரொக்கம்
பணம் செலுத்திய நேரம் நேர்காணல் பதிவு செய்தல்
உங்கள் பகுதி நேரத்தில் மாலை 3:00 மணிக்கு முன் செலுத்துகிறீர்கள் உங்கள் பகுதி நேரத்தில் அடுத்த வேலை நாள் காலை 1 மணி
உதாரணம்: நீங்கள் திங்கட்கிழமை மாலை 3:00 மணிக்கு முன்னதாகப் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், உங்கள் இரசீது செவ்வாய்க்கிழமை காலை 1 மணிக்குப் பிறகு செயல்படுத்தப்படும்.

குறிப்பு:திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9:00 மணி முதல் பி.ப. 3:00 வரை அனைத்து DFCC வங்கிக் கிளையிலும் ஏற்றுக்கொள்ளப்படாத குடியுரிமை வீசா (NIV) விண்ணப்ப கட்டணம் செலுத்தப்படும். NIV விண்ணப்ப கட்டணத்திற்கான கட்டணம் வார இறுதிகளில் அல்லது விரிவான வங்கி நேரங்களில் ஏற்றுக்கொள்ளப்படாது