புகைப்படங்கள் மற்றும் ரேகைப் பதிவுகள்
இந்தப் பக்கத்தில்:
- மேலோட்டம்
- டிஜிட்டல் புகைப்படத் தேவைகள்
- வெற்றிகரமான புகைப்படத்திற்கான 7 படிகள்
- விரல் ரேகை
- இன்னும் அதிகத் தகவல்கள்
மேலோட்டம்
குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா ஒன்றுக்காக விண்ணப்பிக்கும் போது, DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் ஒரு பகுதியாக நீங்கள் கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்ததோர் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. உங்களது நேர்காணலுக்கான நாளன்றும் நீங்கள் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு உங்கள் புகைப்படத்தின் நகல் ஒன்றைக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கத் தூதரகத்தில் அல்லது துணைத் தூதரகத்தில் நடைபெறும் உங்களது நேர்காணலுக்கு நீங்கள் வந்து சேரும் போது உங்களது கைவிரல் ரேகையும் பதிவு செய்து கொள்ளப்படும்.
டிஜிட்டல் புகைப்படத் தேவைகள்
உங்கள் வீசா விண்ணப்பப் புகைப்படம், அளவு மற்றும் உள்ளடக்கம் சம்பந்தமான ஒருசில வரன்முறைகளைச் சந்தித்தாக வேண்டும். இத்தகைய வரன்முறைகளைச் சந்திக்காத புகைப்படங்களைச் சமர்ப்பிப்பது, உங்கள் வீசா விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுப்பதைத் தாமதப்படுத்தலாம். உங்கள் DS-160 படிவத்துடன் பதிவேற்றம் செய்துள்ள டிஜிட்டல் புகைப்படம், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்துள்ளதாக இருந்தாக வேண்டும் மேலும் அது கீழுள்ள படத்தில் காண்பித்துள்ள வழிகாட்டுதல்களைச் சந்தித்தாக வேண்டும்.
உங்கள் புகைப்படத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், நீங்கள் உங்கள் வீசா செயலாக்கப்படுவதற்கு முன்பு புதிய புகைப்படத்தை சமர்ப்பித்தல் வேண்டும், விசா விண்ணப்ப அமைப்பு உங்கள் புகைப்படத்தை ஒரு டிஜிட்டல் புகைப்பட பதிவேற்றமாக ஏற்றுக்கொண்டாலும் கூட.
தலை அளவு
தலைக் கேசம் உட்பட, உங்கள் தலையின் உச்சியிலிருந்து நாடியின் அடிப்பகுதி வரை அளவிட்ட உங்கள் தலை உயரம், மொத்த புகைப்படத்தின் உயரத்தில் 50% அளவிற்கும் 70% அளவிற்கும் இடைப்பட்ட அளவில் இருந்தாக வேண்டும். உங்கள் புகைப்படத்தின் அடிப்பகுதியிலிருந்து, உங்கள் கண்களின் அளவிற்கு அளவிட்ட, உங்கள் கண் உயரம், 55% மற்றும் 70% அளவிற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும் அல்லது புகைப்பட உயரத்தில் உத்தேசமாக 2/3 அளவில் இருக்க வேண்டும்.
புகைப்படத் தேவைகள்: நவம்பர் 1, 2016 முதல் கண் கண்ணாடிகள் இனி விசா புகைப்படங்களில் அனுமதிக்கப்படமாட்டாது.புகைப்பட தேவைகள் குறித்து மேலதிக விவரங்களுக்கு பின்வரும் வலைத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்: https://travel.state.gov/content/travel/en/us-visas/visa-information-resources/photos.html
புகைப்படப் பரிமாணங்கள்
உங்கள் புகைப்படம் சதுர-வடிவுள்ளதாக இருந்தாக வேண்டும், அதன் பொருள் புகைப்படத்தின் உயரம், அதன் அகலத்தை ஒத்தகாக இருந்தாக வேண்டும். உங்கள் புகைப்படத்திற்கான குறைந்தபட்ச பரிமாணங்கள் 600 பிக்ஸெல்கள் x 600 பிக்ஸெல்களாகும் (உயரம் x அகலம்). அதிகபட்ச பரிமாணங்கள் 1200 பிக்ஸெல்கள் x 1200 பிக்ஸெல்களாகும் (உயரம் x அகலம்).
வெற்றிகரமான புகைப்படத்திற்கான 7 படிகள்
தலை அமைவு
நீங்கள் உங்கள் புகைப்படத்தை எடுக்கும் போது தலை அமைவு என்பது முக்கியமானதாகும். உங்களது முழு முகமும் தெரியும் படி உங்களை புகைப்படத்திற்குள் வருமாறு அமையுங்கள். நேரடியாக கேமராவை நோக்கிப் பார்த்திருந்து, உங்கள் கண்கள் திறந்துள்ளன என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
புகைப்பட விளிம்புளுக்குள் நிரப்புங்கள்
உங்கள் புகைப்படம் உங்கள் முழுத் தலையையும், தலைக் கேசத்தின் உச்சியிலிருந்து, நாடியின் அடிப்பகுதி வரைக்கும் காண்பிக்க வேண்டும். நல்லதோர் புகைப்படத்தில், உங்களது தலை உயரம் 1-1-3/8 அங்குலங்கள் உயரமுள்ளதாக இருக்கும் (25-35 மிமீ), அல்லது பின்வருவதைப் போன்று புகைப்படத்தில் 50% - 70% அளவிற்கு இடைப்பட்டதாக இருக்கும்:
மையமாக புகைப்படம் எடுங்கள்
புகைப்பட வரம்பின் மையமாக உங்கள் தலையை வையுங்கள்.
உங்கள் கண்களைக் காண்பியுங்கள்
உங்கள் கண்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது கண் புகைப்படத்தின் அடிப்பகுதியிலிருந்து 2/3 அளவில் இருக்க வேண்டும் அல்லது 1-1/8 அங்குலங்கள் முதல் 1-3/8 அங்குலங்கள் (28 மிமீ மற்றும் 35 மிமீ) உயரத்தில் - சுமார் 60% அளவில் இருக்க வேண்டும்.
பின்னணியம்
புகைப்படத்தில் உங்களுக்குப் பின்னால் உள்ள பகுதி தாறுமாறாக இல்லாமல், வெள்ளையாகவோ அல்லது பாதி-வெள்ளையாகவோ இருக்க வேண்டும். மிகச் சிறப்பான முடிவுகள் கிடைப்பதற்கு சுத்தமான வெண்மை அல்லது பாதி-வெண்மையான பின்னணியத்தின் முன்பாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
நிழல்களைத் தவிர்த்து விடுங்கள்
உங்கள் முகத்தில் முழுமையாக வெளிச்சம்படும் வகையிலும், முகத்திலும், பின்னணியத்திலும் நிழல் படாமலும் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
பதற்றமில்லாமல் உட்கார்ந்து கொண்டு இயல்பாகத் தோற்றமளியுங்கள்
உங்கள் புகைப்படத்தை எடுக்கும் போது, இங்கே காண்பித்துள்ளவற்றைப் போன்று உங்கள் முகத்தில் ஓர் இயல்பான வெளிப்பாடு இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்:
மத ரீதியான நோக்கத்திற்காக அன்றாடம் அணிந்து கொண்டால் ஒழிய, கேசத்தை அல்லது கேச ஓரத்தை மறைக்கிற வகையில் தொப்பி அல்லது முக்காடு போட்டுக் கொள்ளாதீர்கள். உங்கள் முகம் நன்கு தெரிகிற வகையில் இருந்தாக வேண்டும், மேலும் முக்காடு போட்டிருப்பது உங்கள் முகத்தில் நிழல்கள் எதையும் விழச் செய்யக் கூடாது.
விரல் ரேகை
வீசா நேர்காணலின் ஒரு பகுதியாக அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் வீசா விண்ணப்பதாரர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. அவ்வீசா விண்ணப்ப நடவடிக்கையின் போது, வழக்கமாக நேர்காணலில், ஒரு மை இல்லாத, டிஜிட்டல் விரல் ரேகை விரைவாக எடுத்துக் கொள்ளப்படும். பின்வருபவர்கள் போன்ற சிலருக்கு கைவிரல் ரேகைப் பதிவுகள் அவசியமாவதில்லை:
- A-3 மற்றும் G-5 விண்ணப்பதாரர்கள் தவிர்த்து, முறைப்படியான அரசாங்க அலுவலாக பயணம் செய்கிற விண்ணப்பதாரர்கள்
- 14 வயதிற்குக் கீழ்பட்ட மற்றும் 79 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய விண்ணப்பதாரர்கள்
இன்னும் அதிகத் தகவல்கள்
வீசா விண்ணப்பப் புகைப்பட விவரக் குறிப்புகள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, அயலுறவுத் துறையின் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.
அயலுறவுத் துறையில் ஒரு புகைப்பட FAQ-வும் (அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்) இங்கே.