வியாபாரம் / சுற்றுலா வீசா

இந்தப் பக்கத்தில்:


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

மேலோட்டம்

B-1/B-2 வருகையாளர் வீசா என்பது வியாபாரத்திற்காக (B-1) அல்லது உல்லாசத்திற்காக அல்லது மருத்துவச் சிகிச்சைக்காகத் (B-2) தற்காலிகமாக அமெரிக்காவிற்குப் ப்யணம் செய்கிறவர்களுக்கானதாகும். பொதுவாக, B-1 வீசா என்பது, வியாபாரக் கூட்டாளிகளோடு ஆலோசனை செய்கிற, விஞ்ஞானப் பூர்வ, கல்வி சார்ந்த, தொழில் ரீதியிலான அல்லது வியாபார கூட்டங்களில்/மாநாடுகளில் கலந்து கொள்கிற, சொத்து ஒன்றை விற்றுத் தீர்க்கிற அல்லது ஒப்பந்தங்களில் பேச்சுவார்த்தை நடத்துகிற பயணிகளுக்கானதாகும். B-2 வீசா என்பது, தன்மையில் பொழுதுபோக்கு சார்ந்ததாக உள்ள பயணத்திற்கானதாகும், அதில் சுற்றுலா, நண்பர்கள் அல்லது உறவினர்களைப் போய்ப் பார்த்து வருதல், மருத்துவச் சிகிச்சை மற்றும் சகோதரத்துவ, சமுதாய அல்லது சேவைத் தன்மையுள்ள செயல்பாடுகள் அடங்குகின்றன. பெரும்பாலும் B-1 மற்றும் B-2 வீசாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே B-1/B-2 வீசாவாக வழங்கப்படுகிறது.

தகுதிகள்

நீங்கள் B-1/B-2 வீசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அமெரிக்கக் குடிவரவு மற்றும் நாட்டினச் சட்டத்திற்கு (INA) ஏற்ப ஒரு அமெரிக்க வீசாவிற்குத் தகுதியடைகிறீர்கள் என்பதை துணைத் தூதரக அதிகாரி ஒருவருக்கு நிரூபித்துக் காண்பித்தாக வேண்டும். INA சட்டத்தின் 214(b) பிரிவு, ஒவ்வொரு B-1/B-2 விண்ணப்பதாரரையும் குடிவரவாளராக எண்ணம் கொண்டுள்ளவர் என்பதாகவே எடுத்துக் கொள்கிறது. பின்வருவனவற்றைக் காண்பிப்பதன் மூலம் நீங்கள் இந்த சட்ட ரீதியான கருத்தை மேற்கொண்டாக வேண்டும்:

 • அமெரிக்காவிற்கு நீங்கள் செய்யும் பயணத்தின் நோக்கம், வியாபாரம், உல்லாசம் அல்லது மருத்துவச் சிகிச்சை போன்றதோர் தற்காலிக விஜயத்திற்கானதே என்று
 • ஒரு குறிப்பிட்ட, வரம்புடைய காலத்திற்கே நீங்கள் அமெரிக்காவில் இருக்கத் திட்டமிடுகிறீர்கள் என்று
 • நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் வேளையில் உங்கள் செலவுகளைப் பார்த்துக் கொள்வதற்கான நிதிகளுக்கான அத்தாட்சி
 • உங்கள் வருகையின் முடிவில் நீங்கள் அயல்நாட்டிற்குத் திரும்பிச் செல்ல உறுதியளிக்கும் வகையில், அமெரிக்காவிற்கு வெளியே உள்ளதோர் நாட்டில் உங்களுக்கு வசிப்பிடம் இருக்கிறது என்றும், அதே போல மற்ற சமூகப் பொருளாதாரப் பிணைப்புகள் உள்ளன என்றும்

தனிப்பட்ட அல்லது வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அமெரிக்காவின் வெளிவட்ட ஆளுகைக்கு உள்ளேயுள்ள விமானம்/கப்பல்களில் பணியாற்றுகிற பணியாட்கள் சில சூழநிலைகளின் B-1 வீசாக்களுக்குத் தகுதியடையலாம்.

சில அயல்நாட்டவர்கள், குடிவரவு மற்றும் நாட்டினச் சட்டத்திற்கு ஏற்ப வீசாக்களுக்குத் தகுதியடையாமல் போகலாம். குடிவரவு மற்றும் நாட்டினச் சட்டத்தைக் குறித்தும், வீசாவிற்குத் தகுதியில்லாமல் போவது குறித்தும் இங்கே நீங்கள் இன்னும் அதிகமாகப் படித்துப் பார்க்கலாம்.

விண்ணப்ப உருப்படிகள்

நீங்கள் வியாபாரம் / சுற்றுலா வீசாவிற்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பின்வருவனவற்றைச் சமர்ப்பித்தாக வேண்டும்:

 • ஒரு குடிவரவாளர் அல்லாதோர் வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவம் DS-160 குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு DS-160 இணையபக்கத்திற்குச் சென்று பாருங்கள்.
 • அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்.
 • கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த ஒரு (1) 2”x2” (5செமீx5செமீ) புகைப்படம். இந்த இணைய பக்கத்தில், தேவையான புகைப்பட வடிவமைப்பு குறித்த தகவல்கள் உள்ளன.
 • உங்கள் நாட்டு நாணயத்தில் செலுத்திய, உங்கள் US$160 திருப்பித் தரமுடியாத குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்ப நடவடிக்கைக் கட்டணத்தை செலுத்தியதைக் காண்பிக்கிறதோர் இரசீது. இந்த இணைய பக்கத்தில், இந்தக் கட்டணத்தைச் செலுத்துவது குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன. ஒரு வீசா வழங்கப்பட்டு விடுகிற பட்சத்தில், உங்கள் நாட்டினத்தைப் பொருத்து, கூடுதலாக ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணம் இருக்கலாம். அயலுறவுத் துறையின் இணையதளம், நீங்கள் ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்பதையும் அந்தக் கட்டணத் தொகை எவ்வளவு என்பதையும் காண உதவலாம்.

இத்தகைய உருப்படிகளுக்குக் கூடுதலாக, நீங்கள் இந்தச் சேவை வாயிலாகத் தான் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்தீர்கள் என்பதை உறுதி செய்கிற நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதம் ஒன்றை நீங்கள் காண்பித்தாக வேண்டும். துணைத் தூதரக அலுவலருக்கு வழங்கியுள்ள தகவல்களை ஆதரிப்பதாக நீங்கள் நம்புகிற ஆதார ஆவணங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் நீங்கள் கொண்டு வரலாம்.

விண்ணப்பிப்பது எப்படி

படி 1

குடிவரவாளர் அல்லாத வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

படி 2

வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி 3

இந்த இணைய பக்கத்தில் உங்கள் நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுங்கள். உங்களுக்கான நேர்காணல் நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்வரும் தகவல்கள் தேவைப்படும்:

 • உங்கள் கடவுச்சொல் எண்
 • (இந்த எண்ணைக் காண்பதில் உங்களுக்கு உதவி தேவை என்றால் இங்கே சுட்டுக.)
 • உங்கள் படிவ உறுதிப்படுத்தல் பக்கத்திலிருந்து கிடைக்கிற பத்து (10) இலக்க பட்டைக் குறியீட்டு எண்
படி 4

உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். உங்களது நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதத்தின் அச்சிட்ட நகல் ஒன்றையும், DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கத்தையும், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும், உங்களது தற்போதைய கடவுச்சீட்டு மற்றும் அனைத்து பழைய கடவுச் சீட்டுகளையும் நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். இத்தகைய உருப்படிகள் அனைத்தும் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆதார ஆவணங்கள்

ஆதார ஆவணங்கள் என்பவை, உங்கள் நேர்காணலில் துணைத் தூதரக அதிகாரி பரிசீலிக்கும் அநேகக் காரணிகளில் ஒன்றே ஒன்றாகும். துணைத் தூதரக அதிகாரிகள் ஓவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பார்வையிட்டு, வீசா கொடுப்பது குறித்து முடிவெடுக்கும் போது தொழில் ரீதியிலான, சமூக, கலாச்சார மற்றும் மற்ற காரணிகளையும் பரிசீலிப்பார்கள். துணைத் தூதரக அதிகாரிகள் உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களையும், குடும்பச் சூழ்நிலையையும், உங்கள் நீண்ட-காலத் திட்டங்களையும், நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள எதிர்நோக்குகளையும் பார்வையிடலாம். ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பரிசீலனையும் கொடுக்கப்படுகிறது.

எச்சரிக்கை: பொய்யான ஆவணங்களை அளிக்காதீர்கள். மோசடியான அல்லது தவறான ஆவணங்களைக் கொடுப்பது, நிரந்தரமாகவே வீசாவிற்குத் தகுதியடையாமற் போய் விடுவதில் போய் முடிந்து விடலாம். இரகசிதன்மை குறித்துக் கவலையடைகிறீர்கள் என்றால், விண்ணப்பதாரர் ஆவணங்களை முத்திரையிட்ட உறையில் போட்டு அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வேறு எவருக்கும் இந்தத் தகவல்களைக் கிடைக்கச் செய்யாது மேலும் அத்தகவல்களின் இரகசியத்தன்மையை மதித்து நடக்கும்.

உங்கள் நேர்காணலுக்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும். புகைப்பட நகல்களை விட அசல் ஆவணங்கள் தான் எப்போதுமே விரும்பப்படுகின்றன மேலும் நீங்கள் இவ்வாவணங்களை உங்களோடு உங்கள் நேர்காணலுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். ஆதார ஆவணங்களை அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு தொலைநகலிலோ, மின்னஞ்சலிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்காதீர்கள்.

 • தற்போதைய வருமான அத்தாட்சி, வரி செலுத்திய இரசீதுகள், சொத்து அல்லது வியாபார உரிமை அல்லது சொத்துக்கள்.
 • உங்கள் பயண திட்டம் மற்றும்/அல்லது மற்ற நீங்கள் திட்டமிட்டுள்ள சுற்றுப்பயணம் குறித்த மற்ற விளக்கம்.
 • உங்கள் பதவி, ஊதியம், நீங்கள் எவ்வளவு காலமாகப் பணியாற்றுகிறீர்கள், அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை எதுவும், மற்றும் உங்கள் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின் வியாபார நோக்கம் ஏதுமிருந்தால் அது, ஆகியவற்றை விவரிக்கிற, உங்களைப் பணியமர்த்திய நிறுவனத்திடமிருந்து பெற்றதோர் கடிதம்.
 • உங்களது தண்டனையை நீங்கள் அனுபவித்து முடிந்திருந்தாலும் கூட அல்லது அவை மன்னித்து விடப்பட்டிருந்தாலும் கூட, கைது அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டது சம்பந்தமாக குற்றவியல் / நீதிமன்றப் பதிவுகள்.

கூடுதலாக, உங்களது பயண நோக்கத்தின் அடிப்படையில், நீங்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வரப் பரிசீலிக்க வேண்டும்:

மாணவர்கள்

உங்களது மிகச் சமீபத்திய பாடசாலை முடிவுகள், கையெழுத்துப் படிவங்கள் மற்றும் பட்டம்/பட்டயங்கள் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள். மேலும் மாதாந்திர வங்கி அறிக்கைகள், வைப்பு நிதி இரசீதுகள், அல்லது மற்ற தடயங்களையும் கொண்டு வாருங்கள்.

பணிபுரியும் வயது நிரம்பியவர்கள்

உங்களைப் பணியமர்த்தியுள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற வேலைவாய்ப்புக் கடிதம் மற்றும் மிகச் சமீபத்திய மாதங்களிலிருந்து எடுத்த ஊதியப் பட்டியல் போன்றவற்றைக் கொண்டு வாருங்கள்.

வியாபாரிகள் மற்றும் நிறுவன இயக்குநர்கள்

நிறுவனத்தில் உங்களது பதவி மற்றும் சம்பாத்தியத்திற்கான தடயத்தைக் கொண்டு வாருங்கள்.

ஒரு உறவினரைப் போய்ப் பார்த்தல்

உங்கள் உறவினரின் அந்தஸ்து அத்தாட்சியின் (உ.ம். பச்சை அட்டை, குடியுரிமை பெற்ற சான்று, செல்லத்தக்க வீசா போன்றவை) புகைப்பட நகலைக் கொண்டு வாருங்கள்.

அமெரிக்காவிற்கு முன்பு விஜயம் செய்தவர்கள்

நீங்கள் முன்பு அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறீர்கள் என்றால், உங்களது குடிவரவு அல்லத் வீசா அந்தஸ்தை சான்றளிக்கிற ஆவணங்கள் எதுவும்.

மருத்துவக் கவனிப்பை நாடுகிற விண்ணப்பதாரர்களுக்கான ஆதார ஆவணங்கள்

மருத்துவச் சிகிச்சைக்காக நீங்கள் அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், மேலே பட்டியலிட்டுள்ள ஆவணங்களுக்குக் கூடுதலாக நீங்கள் பின்வரும் ஆவணங்களைக் கொடுக்கத் தயாராக வேண்டும் மேலும் அத்தகைய துணைத் தூதரக அதிகாரிகளுக்குப் பின்வருபவை அவசியமாகலாம்:

 • உங்கள் பகுதி மருத்துவரிடமிருந்து, அவர் கண்டுபிடித்த நோய், உங்கள் நோயின் தன்மை மற்றும் அமெரிக்காவில் உங்களுக்குச் சிகிச்சை அவசியமாதவதற்கான காராணம் ஆகியவற்றை விளக்குகிற அறிக்கை.
 • இந்தக் குறிப்பிட்ட நோயிற்குச் சிகிச்சையளிப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறதும், சிகிச்சைக்கு செய்ய எதிர்பார்க்கும் காலம் மற்றும் ஆகக் கூடிய செலவை விவரிக்கிறதுமான, அமெரிக்காவில் உள்ள மருத்துவர் அல்லது மருத்துவமனையிடமிருந்து பெற்றதோர் கடிதம் (மருத்துவர்களின் கட்டணம், மருத்துவமனையில் சேர்ப்பதற்கான கட்டணங்கள், மற்றும் அனைத்து மருத்துவம் தொடர்பான செலவுகள் உட்பட).
 • உங்களைக் கொண்டு செல்வதற்கும், மருத்துவ மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கும் பணம் கொடுக்கிற தனிநபர்கள் அல்லது ஸ்தாபனத்திடமிருந்து பெற்ற நிதிசார்ந்த பொறுப்பு அறிக்கை ஒன்று. இத்தகைய செலவுகளுக்கு உத்திரவாதமளிக்கிற தனிநபர்கள், அப்படிச் செய்வதற்கு அவர்களுக்குள்ள திறன் குறித்த அத்தாட்சியை வழங்கியாக வேண்டும், பெரும்பாலும் அது வங்கி அறிக்கை அல்லது மற்ற வருமான / சேமிப்பு அறிக்கைகள் அல்லது வருமான வரிச் செலுத்திய இரசீதுகளின் சான்றொப்பம் பெற்ற நகல்களாகவே இருக்கின்றது.

மின்னணு விசா புதுப்பிப்பு முறை (EVUS)

விசா செல்லுபடியை நீட்டிக்க அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, நவம்பர் 29, 2016 முதல், சீன மக்கள் குடியரசின் கடவுசீட்டில் 10 ஆண்டு B1, B2 அல்லது B1/B2 விசாக்களைக் கொண்டவர்கள். அவர்களின் விபரங்களை மற்றும் பிற தகவல்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு  முறை வலைத்தளம் வழியாக புதுப்பிக்க வேண்டும் அல்லது புதிய கடவுசீட்டு பெற்றுக்கொண்டால் புதுப்பிக்க வேண்டும், இதில் எது முதலில் நிகழ்கிறதே அதன் படி புதுப்பிக்க வேண்டும்.  இந்த வழிமுறை EVUS - மின்னணு விசா புதுப்பிப்பு முறை என்று அழைக்கப்படுகிறது.

EVUS வலைத்தளம் இப்போது www.EVUS.gov இல் பதிவுசெய்ய பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் EVUS சேர்க்கைக்கு CBP கட்டணம் வசூலிக்காது. EVUS சேர்க்கைக் கட்டணத்தை இறுதியில் செயல்படுத்துவதை CBP எதிர்பார்க்கிறது, ஆனால் அதற்கு ஒரு கால அளவு இல்லை. கட்டணம் அமல்படுத்தப்படும் வரை, பயணிகள் கட்டணம் இன்றி EVUS இல் சேரலாம். உள்நாட்டு பாதுகாப்பு, சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை (சிபிபி) விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய தகவல்களைத் ஆண்டு முழுவதும் தெரிவிக்கும். மேலும் தகவலுக்கு, www.cbp.gov/EVUS ஐப் பார்வையிடவும்

இன்னும் அதிகத் தகவல்கள்

வியாபார அல்லது சுற்றுலா வீசாக்கள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, அயலுறவுத் துறையின் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.