இடைவழி/கப்பல் பணியாளர் வீசா

இந்தப் பக்கத்தில்:


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

மேலோட்டம்

இடைவழி (C வீசா)

அமெரிக்காவின் வழியாக இன்னொரு அந்நிய நாட்டு இடத்திற்குச் செல்கிற, உடனடி மற்றும் தொடர்ச்சியான இடைவழியில் பயணம் செய்கிறதோர் அயல்நாட்டுக் குடியுரிமை பெற்ற நபருக்கு செல்லுபடியாகிறதோர் இடைவழி வீசா அவசியமாகிறது. இந்தத் தேவைக்கான விதிவிலக்குகளில், வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் வீசா இல்லாமலேயே அமெரிக்கா வழியாகச் செல்லத் தகுதியுள்ள பயணிகள் அல்லது வீசா இல்லாமல் அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய தங்களது குடிமக்களை அனுமதிக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்துள்ள நாட்டைச் சேர்ந்த பயணிகளேயாவர்.

பயண இடைவெளியில் அமெரிக்காவிற்கு வந்து செல்வது தவிர, நண்பர்களைப் போய்ப் பார்ப்பது, சுற்றிப் பார்ப்பது போன்ற மற்ற நோக்கங்களுக்காக தங்குவதற்கான உரிமைகளை அப்பயணி நாடினால், B-2 வீசா போன்று அந்தந்த நோக்கத்திற்கு அவசியமாகிற வீசா வகைக்கு நீங்கள் தகுதியடைந்து, அதனை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

வேலையாட்கள் (D வீசா)

அமெரிக்காவில் உள்ள கப்பல் அல்லது விமானத்தில் சேவை புரிகிறதோர் வேலையாளுக்கு ஒரு வேலையாள் வீசா தேவைப்படுகிறது. அமெரிக்கா வழியாக அல்லது அதன் நீர் வழி வழியாகச் செல்கிறதோர் விமானம் அல்லது கப்பலின் ஊழியர்கள் பொதுவாக ஒரு கூட்டு இடைவழி / வேலையாள வீசாவை (C-1/D) உபயோகித்துக் கொள்கிறார்கள். ஆயினும், சில நிலைகளில், தனிநபர்களுக்கு D வீசா மட்டுமே தேவைப்படலாம்.

அமெரிக்காவின் வெளி வட்ட ஆளுகைக்கு உள்ளேயுள்ள கப்பல்களில் பணியாற்றுகிற வேலையாட்கள் ஒரு வேலையாள் வீசாவிற்குப் பதிலாக மாற்றியமைத்ததோர் B-1 வீசாவிற்குத் தகுதியடையலாம்.

விமானப் பயணம் அல்லது கப்பல் பயணங்களுக்கு இடையே அமெரிக்காவில் நுழையும் வேலையாட்கள், இத்தகைய தனிப்பட்ட / விடுமுறை நாட்களின் போது உபயோகித்துக் கொள்வதற்காக B-1/B-2 வீசாவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு C-1/D மற்றும் ஒரு B-1/B2 இரண்டு வீசாக்களுக்குமே ஒரே நேரத்தில் விண்ணப்பிக்கிற விண்ணப்பதாரர்கள், ஒரே ஒரு வீசா விண்ணப்பக் கட்டணத்தையே செலுத்துகிறார்கள்.

தகுதிகள்

இடைவழி வீசாவிற்காக விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் பின்வருவனவற்றைக் காண்பித்தாக வேண்டும்:

 • அமெரிக்காவின் வழியாக உடனடியாக அல்லது தொடர்ச்சியாகக் கடந்து செல்வதற்கான நோக்கம்.
 • ஒரு பொது போக்குவரத்துச் சேவை நிறுவனத்தின் பயணச் சீட்டு அல்லது நீங்கள் போய்ச் சேருமிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கான பயண ஏற்பாடுகள் குறித்த மற்ற தடயம்.
 • உங்கள் இடைவழிப் பயணத்தின் நோக்கத்தை மேற்கொள்வதற்குத் தேவையான நிதிகள்.
 • அமெரிக்காவில் இருந்து புறப்பட்டதன் பேரில் இன்னொரு நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி.

மற்ற C, D அல்லது C-1/D வீசாக்களுக்கு விண்ணப்பிக்க, பின்வருபவற்றை ஒரு துணைத் தூதரக அதிகாரிக்கு நிரூபித்துக் காண்பித்தாக வேண்டும்:

 • உங்கள் சுற்றுப்பயணத்தின் நோக்கமானது, அமெரிக்காவிற்குள் இடைவழியாக அல்லது வேலையாள் நோக்கங்களுக்காக மட்டுமே நுழைவது.
 • அமெரிக்காவில் இருக்கும் வேளையில், தற்காலிக வேலை வீசா ஒன்றுக்கு உங்களுக்கு முறையான அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் ஒழிய, அமெரிக்க ஆதாரம் ஒன்று உங்களுக்குப் பணம் கொடுக்க நீங்கள் எண்ணம் கொள்ளவில்லை.
 • குறிப்பிட்டதோர், வரம்புடைய காலத்திற்கே அமெரிக்காவில் தங்கத் திட்டமிடுகிறீர்கள்.
 • நீங்கள் அமெரிக்காவில் இருக்கும் வேளையில் உங்கள் செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வதற்கான நிதிகளுக்கான அத்தாட்சி உங்களிடம் உள்ளது.

விண்ணப்ப உருப்படிகள்

இடைவழி அல்லது வேலையாள் வீசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் பின்வருவனவற்றைச் சமர்ப்பித்தாக வேண்டும்:

 • ஒரு குடிவரவாளர் அல்லாதோர் வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவம் DS-160 குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு DS-160 இணையபக்கத்திற்குச் சென்று பாருங்கள்.
 • அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்.
 • கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த ஒரு (1) 2”x2” (5செமீx5செமீ) புகைப்படம். இந்த இணைய பக்கத்தில், தேவையான புகைப்பட வடிவமைப்பு குறித்த தகவல்கள் உள்ளன.
 • உங்கள் நாட்டு நாணயத்தில் செலுத்திய, உங்கள் US$160 திருப்பித் தரமுடியாத குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்ப நடவடிக்கைக் கட்டணத்தை செலுத்தியதைக் காண்பிக்கிறதோர் இரசீது.இந்த இணைய பக்கத்தில், இந்தக் கட்டணத்தைச் செலுத்துவது குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன. ஒரு வீசா வழங்கப்பட்டு விடுகிற பட்சத்தில், உங்கள் நாட்டினத்தைப் பொருத்து, கூடுதலாக ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணம் இருக்கலாம். அயலுறவுத் துறையின் இணையதளம், நீங்கள் ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்பதையும் அந்தக் கட்டணத் தொகை எவ்வளவு என்பதையும் காண உதவலாம்.
 • பொருந்துமானால், உங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் காலாவதியாவதற்குப் பின்னும் செல்லுபடியாகிறதோர் கப்பல் பணியாளர் புத்தகம் மற்றும் அனைத்து முந்தைய கப்பல் பணியாளர் புத்தகங்களும். வேலையாட்களால் அப்புத்தகத்தை சமர்ப்பிக்க இயலவில்லை என்றால், அது தொலைந்தது குறித்ததோர் முறைப்படியான அறிவிப்பை சமர்ப்பித்தாக வேண்டும்.

இத்தகைய உருப்படிகளுக்குக் கூடுதலாக, நீங்கள் இந்தச் சேவை வாயிலாகத் தான் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்தீர்கள் என்பதை உறுதி செய்கிற நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதம் ஒன்றை நீங்கள் காண்பித்தாக வேண்டும். துணைத் தூதரக அலுவலருக்கு வழங்கியுள்ள தகவல்களை ஆதரிப்பதாக நீங்கள் நம்புகிற ஆதார ஆவணங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் நீங்கள் கொண்டு வரலாம்.

விண்ணப்பிப்பது எப்படி

படி 1

குடிவரவாளர் அல்லாத வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

படி 2

வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி 3

இந்த இணைய பக்கத்தில் உங்கள் நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுங்கள். உங்களுக்கான நேர்காணல் நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்வரும் தகவல்கள் தேவைப்படும்:

 • உங்கள் கடவுச்சொல் எண்
 • (இந்த எண்ணைக் காண்பதில் உங்களுக்கு உதவி தேவை என்றால் இங்கே சுட்டுக.)
 • உங்கள் படிவ உறுதிப்படுத்தல் பக்கத்திலிருந்து கிடைக்கிற பத்து (10) இலக்க பட்டைக் குறியீட்டு எண்
படி 4

உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். உங்களது நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதத்தின் அச்சிட்ட நகல் ஒன்றையும், DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கத்தையும், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும், உங்களது தற்போதைய கடவுச்சீட்டு, அனைத்து பழைய கடவுச் சீட்டுகள், மற்றும் அசல் வீசா கட்டண இரசீதையும் நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். இத்தகைய உருப்படிகள் அனைத்தும் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆதார ஆவணங்கள்

ஆதார ஆவணங்கள் என்பவை, உங்கள் நேர்காணலில் துணைத் தூதரக அதிகாரி பரிசீலிக்கும் அநேகக் காரணிகளில் ஒன்றே ஒன்றாகும். துணைத் தூதரக அதிகாரிகள் ஓவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பார்வையிட்டு, வீசா கொடுப்பது குறித்து முடிவெடுக்கும் போது தொழில் ரீதியிலான, சமூக, கலாச்சார மற்றும் மற்ற காரணிகளையும் பரிசீலிப்பார்கள். துணைத் தூதரக அதிகாரிகள் உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களையும், குடும்பச் சூழ்நிலையையும், உங்கள் நீண்ட-காலத் திட்டங்களையும், நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள எதிர்நோக்குகளையும் பார்வையிடலாம். ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பரிசீலனையும் கொடுக்கப்படுகிறது.

ஆதார ஆவணங்கள் உங்களுக்கு உங்கள் துணை ஆய்வில் துணை புரியலாம் என்கிற போதிலும், ஒரு வீசாவிற்கு நீங்கள் தகுதியடைவதைத் தீர்மானிப்பதற்கு முதன்மையாக நேர்காணலையே துணைத் தூதரக அதிகாரிகள் முதன்மையாக நம்பியிருக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்வோமானால், ஆதார ஆவணங்கள் என்பவை தன்னார்வத்தினாலானதும், இரண்டாம் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததுமேயாகும்.

எச்சரிக்கை: பொய்யான ஆவணங்களை அளிக்காதீர்கள். மோசடியான அல்லது தவறான ஆவணங்களைக் கொடுப்பது, நிரந்தரமாகவே வீசாவிற்குத் தகுதியடையாமற் போய் விடுவதில் போய் முடிந்து விடலாம். இரகசிதன்மை குறித்துக் கவலையடைகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் ஆவணங்களை முத்திரையிட்ட உறையில் போட்டு அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வேறு எவருக்கும் உங்கள் தகவல்களைக் கிடைக்கச் செய்யாது மேலும் உங்கள் தகவல்களின் இரகசியத்தன்மையை மதித்து நடக்கும்.

உங்கள் நேர்காணலுக்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்:

 • தற்போதைய வருமான அத்தாட்சி, வரி செலுத்திய இரசீதுகள், சொத்து அல்லது வியாபார உரிமை அல்லது சொத்துக்கள்.
 • உங்கள் பதவி, ஊதியம், நீங்கள் எவ்வளவு காலமாகப் பணியாற்றுகிறீர்கள், அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை எதுவும், மற்றும் உங்கள் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தின் வியாபார நோக்கம் ஏதுமிருந்தால் அது, ஆகியவற்றை விவரிக்கிற, உங்களைப் பணியமர்த்திய நிறுவனத்திடமிருந்து பெற்றதோர் கடிதம்.
 • பொருந்துகிற இடங்களில், ஒரு பயண திட்டம் மற்றும்/அல்லது மற்ற நீங்கள் திட்டமிட்டுள்ள சுற்றுப்பயணம் குறித்த மற்ற தகவல். (இது உத்தேசமானதாக இருக்கலாம்).
 • உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மீதத்தொகை மற்றும் கணக்குச் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகிற, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் அல்லது பணமாக உள்ள சொத்துக்கள் குறித்த மற்ற தடயம்.
 • மனை குத்தகை அல்லது ஒப்பந்தங்கள்
 • வேலையாளைப் பொருத்தவரை: உங்கள் நிறுவனத் தலைமையகத்திலிருந்து பெற்றதோர் கடிதம் மற்றும்/அல்லது உங்கள் கப்பல் பணியாளர் புத்தகம்.

இன்னும் அதிகத் தகவல்கள்

இடைவழி வீசாக்கள் மற்றும் வேலையாட்களுக்கான வீசாக்கள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, அயலுறவுத் துறையின் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.