வீட்டுப் பணியாளர் வீசா

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

அமெரிக்காவிற்கான பணியமர்த்துபவர் ஒருவரோடு செல்கிற அல்லது அவரைப் பின் தொடர்ந்து செல்கிற தனிப்பட்ட அல்லது வீட்டுப் பணியாளர்கள், B-1 வீசாக்களுக்குத் தகுதியடையலாம். வீட்டுப் பணியாளர்களின் இந்த வகைப்பாட்டினரில், சமையலர்கள், பரிமாறுபவர்கள், வாகன ஓட்டுநர்கள், வீட்டுப் வேலைக்காரப் பெண்கள், வேலைக்காரர்கள், கதவு திறப்பவர்கள், செவிலித்தாய், தாயாரின் உதவியாளர்கள், தோட்டக்காரர்கள், மற்றும் சம்பளம் பெறும் கூட்டாளிகள் ஆகியோர் அடங்குவர் ஆனால் இவர்கள் மட்டும் தான் என்றில்லை.

ஒரு அயல்நாட்டுத் தூதரக அதிகாரி அல்லது அரசாங்க அதிகாரியாக உள்ளதோர் பணியாளரோடு செல்கிற அல்லது அவரைப் பின் தொடர்கிறவர்கள், அவர்களைப் பணியமர்த்துபவரின் வீசா அந்தஸ்தைப் பொருத்து, ஒரு A-3 அல்லது G-5 வீசாவிற்குத் தகுதியடையலாம்.

தகுதிகள்

நீங்கள் ஒரு வீட்டுப் பணியாளராக இருந்து B-1 வீசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பின்வருவனவற்றை நிலைநாட்டியாக வேண்டும்:

 • அமெரிக்காவில் நுழைவதற்கான உங்கள் சுற்றுப்பயணத்தின் நோக்கமானது ஒரு வீட்டுப் பணியாளராக வேலை பார்ப்பதற்கு.
 • ஒரு குறிப்பிட்ட, வரம்புடைய காலத்திற்கே நீங்கள் அமெரிக்காவில் இருக்கத் திட்டமிடுகிறீர்கள்
 • உங்களைப் பணியமர்த்துபவர் ஒருசில தகுதிகளைச் சந்திக்கிறார்
 • உங்களிடம் அயல்நாட்டில் கட்டாயப்படுத்துகிற சமூக மற்றும் பொருளாதாரப் பிணைப்புகள் இருக்கின்றன என்பதற்கான தடயம் இருக்கிறது
 • உங்கள் ஒப்பந்தத்தின் முடிவில் நீங்கள் அயல்நாட்டிற்குத் திரும்பிச் செல்ல உறுதியளிக்கும் வகையில், அமெரிக்காவிற்கு வெளியே உள்ளதோர் நாட்டில் உங்களுக்கு வசிப்பிடம் இருக்கிறது என்றும், அதே போல மற்ற பிணைப்புகள் உள்ளன.

குடிவரவாளர் அல்லாத வீசா வைத்திருப்பவரோடு கூடச் செல்லுதல்

நீங்கள் ஒரு வீட்டுப் பணியாளராக இருந்து, அமெரிக்கக் குடியுரிமை இல்லாத சட்டப்பூர்வமாக நிரந்தரமாக வசிப்பவர் அல்லாத, அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி நாடுகிற, அல்லது B, E, F, H, I, J, L, M, O, P, Q, அல்லது R குடிவரவாளர் அல்லாத வீசா வகையின் கீழ் ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கிற பணியமர்த்தும் ஒருவரோடு கூடச் செல்ல அல்லது அவரோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் என்றால், பின்வரும் நிலையில் நீங்கள் B-1 வீசா வகைப்பாட்டிற்குத் தகுதியடையலாம்:

 • ஒரு தனிப்பட்ட அல்லது வீட்டுப் பணியாளராக, முன்பு பணியமர்த்தியவர்களிடமிருந்து பெறுகிற அறிக்கைகள் மூலமாக சான்றளிக்கப்பட்டபடி, உங்களுக்குக் குறைந்தது ஒரு ஆண்டு அனுபவமாவது இருக்கிறது.
  • உங்களைப் பணியமர்த்துபவர் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி பெறுவதற்கு முந்தைய தேதிக்கு முன் அவர் உங்களை குறைந்தது ஒரு ஆண்டிற்காவது அமெரிக்காவிற்கு வெளியே பணியமர்த்தியிருக்கிறார்.
  • உங்கள் பணியாளர்-பணியமர்த்துபவர் உறவு, உங்களைப் பணியமர்த்துபவர் விண்ணப்பம் செய்யும் நேரத்திற்கு முன்பிருந்தே இருந்தது, மேலும் உங்களைப் பணியமர்த்துபவர் விண்ணப்பிக்கும் நேரத்திற்கு முந்தைய பல ஆண்டுகளாகவே வீட்டு வேலையில் உதவி செய்ய வழக்கமாகவே பணியாளர்களை அமர்த்தியிருக்கிறார் (வருடம் முழுவதுமோ அல்லது அவ்வப்போதோ) என்பதை அவர் நிலைநாட்ட முடிகிறது.
 • உங்களுக்கு வேறு ஏதும் வேலை இருக்காது மேலும் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் விதிகளின் கீழ் சுட்டிக்காட்டியுள்ளபடி நீங்கள் இலவச தங்கும் அறை மற்றும் உணவு பெற்றுக் கொள்வீர்கள் மற்றும் உங்களைப் பணியமர்த்தியவரிடமிருந்து இருவழி விமானப் பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்வீர்கள்.

ஒரு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரோடு உடன் செல்லுதல்

a. ஒரு தனிநபர் அல்லது உள்நாட்டு ஊழியர்கள் ஒரு அமெரிக்கா குடிமகனை துணையாகவோ அல்லது தற்காலிகமாகவோ அமேரிக்கா ராச்சியத்துடன் இணைய விரும்புவோருக்கு இதில் வரும் அமேரிக்கா ராஜ்ச்சியம் திருப்தி படுத்த கூடிய வகையில் பின்வருவன அமைய வேண்டும்.

(1) ஊழியர் வெளிநாடுகளில் ஒரு குடியிருப்பு இருக்க வேண்டும் அத்துடன் அவன் அல்லது அவலுக்கு கைவிடும் எண்ணம் இருக்க கூடாது

(2) ஊழியருக்கு ஒரு குடியிருப்பு வெளிநாடுகளில் இருக்கும் பட்ச்சத்தில் அதை அவன்/அவள் எக்காரணத்தினாலும் கைவிடுன் எண்ணம் இருக்க கூடாது

(3) அமேரிக்கா இராச்சியம் வேலைக்கு தனிநபர் அல்லது உள்நாட்டு ஊழியர்களால் வேலைக்கு அமர்த்தப்படும் அந்த்னியர் குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவது குறுப்பிட்ட துறையில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் அல்லது வேலைக்கு அமர்த்துபவர் இதற்க்கு முன் ஒரு அந்த்நியரை வேலைக்கு அமர்த்திய அனுபவமுள்ளவரென ஒப்பந்தத்துக்கு ஒப்பந்தத்தை காட்டுதல் வேண்டும்.

(4) ஊழியர்கள் தனது முந்தய வேலை அனுபவத்தை எடுத்துக்காட்டும் முகமாக வேலைக்கமர்த்திய தனிநபர்/உள்நாட்டு ஊழியர்கள் இடமிருந்து வேலை ஒரு குறைந்த பட்சம் ஒரு வருடம் அனுபவம் இருக்கையை சமர்பிக்க முடியும்.தொழிலாளி எனபடுபவர் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நுழைவு துறைமுக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பொது மூல ஒப்பந்தம் /மூல ஒப்பந்தத்தின் நகல் ஒன்றை சமர்பிப்பதோடு அதில் தனிநபர்/உள்நாட்டு ஊழியருக்கும் வேலைக்கு அமர்தபடுபவரினதும் மூல கையொப்பம் இருத்தல் வேண்டும்

b. வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளிக்கு வழங்கபடும் வேலைக்கால இடைவேளையனது இரண்டு வருடங்களுக்கு அல்லது அதக்கு மேற்பட்டதாக இருக்கும் அத்துடன் ஆறு வருடத்துக்கு மேற்பட்டதாக இருத்தலாகும்.வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதலாளியானவர் தொழிலாளிக்கு இலவச தங்குமிடம் மற்றும் பூரண பயண செலவுகளும் ஏற்றல் வேண்டும்

c. தேவைப்படும் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் ஊழியராலும் முதலாளியாலும் திகதியிடப்பட்டு கையலுத்துஇடபட்டு இருப்பதால் வேலைக்கு உத்தரவாதம் உண்டு அத்துடன் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊழியரின் வேலைசெய்யும் நேரம் எட்டு மணித்தியாலம் ஆகும்.அதற்கு மேற்பட்ட வேலை செய்யும் மேலதிக்க நேரத்திற்கு சம்பளம் வாலகங்கபடமட்டாது.ஊழியரை வேலைவிட்டு நீக்குவதற்க்கு இரண்டு வாரதிற்கு முன் வேலைக்கு அமர்தபடுபவர்களின் வேலைநீக்க அறிக்கையை ஊழியருக்கு சமர்பித்தல் வேண்டும்.

ஒரு அமெரிக்க சட்டப்பூர்வ நிரந்தரமாக வசிப்பவரோடு உடன் செல்லுதல்

அமெரிக்க சட்டப்பூர்வ நிரந்தரமாக வசிப்பவர்கள் (பச்சை அட்டை வைத்திருப்பவர்கள்), எந்தச் சூழ்நிலைகளின் கீழும் ஒரு B-1 வீசாவின் கீழ் வீட்டு வேலையாட்களை அமெரிககவிற்குக் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

B+1 வீசா வைத்திருப்பவர்களுக்கான ஒப்பந்தத் தேவைகள்

ஒரு B-1 வீசாவிற்கு விண்ணப்பிக்கிறதோர் வீட்டுப் பணியாளராக, நீங்கள் மற்றும் உங்களைப் பணியமர்த்துபவர் இருவரும் கையொப்பமிட்ட ஒரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நீங்கள் காண்பித்தாக வேண்டும், அதில் அடங்குபவை:

 • அமெரிக்காவில் உங்களது பணிகள் குறித்ததோர் விவரக் குறிப்பு
 • ஒவ்வொரு வாரமும் நீங்கள் பணியாற்றும் மணி நேரங்களின் எண்ணிக்கை
 • ஒரு ஆண்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை நாட்கள், விடுப்புகள் மற்றும் சுகவீன நாட்களின் எண்ணிக்கை
 • ஒவ்வொரு வாரத்திலும் உள்ள வழக்கமான ஓய்வு நாட்கள்
 • சம்பள விகிதம், இது உங்கள் பணியின் அனைத்து மணி நேரங்களிலும் நீங்கள் எந்த மாநிலத்தில் பணியமர்த்தப்படுவீர்களோ, அந்த மாநிலத்தின் மத்திய சட்டத்தின் கீழ் தற்போது நிலவுகிற அல்லது ஒரு மணி நேரத்திற்கான குறைந்த பட்ச கூலியாக இருக்க வேண்டும் (இதில் எது அதிகமானதோ அது). அமெரிக்காவில் உள்ள தற்போதைய குறைந்தபட்ச கூலிகளை இங்கே காணலாம் மேலும் தற்போது நிலவுகிற கூலிகளை இங்கே காணலாம்.
 • நீங்கள் கட்டணமில்லாமல் தங்கும் அறை மற்றும் உணவைப் பெற்றுக் கொள்வீர்கள் என்பதற்கானதோர் சான்று
 • உங்களைப் பணியமர்த்துபவருக்காக வேலை செய்யும் வேளையில், உங்களை நிர்ஆதரவானவராக ஆக விடாமல் பார்த்து கொள்வார் என்கிறதோர் சான்று
 • உங்களைப் பணியமர்த்துபவருக்காகப் பணியாற்றுகிற வேளையில் வேறு எந்த வேலைவாய்ப்பையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்கிறதோர் சான்று
 • உங்கள் கடவுச்சொல்லை உங்களைப் பணியமர்த்துபவர் பிடித்து வைத்துக் கொள்ளமாட்டார் என்பதற்கானதோர் சான்று
 • வேலை நேரங்களுக்குப் பிறகு ஈடு எதுவும் செய்யாமல் நீங்கள் வேலை பார்க்கும் வளாகத்திலேயே இருக்க வேண்டியதில்லை என்பதை இருதரப்பினரும் புரிந்து கொள்கிறார்கள் என்பதற்கானதோர் சான்று
 • அமெரிக்காவிற்கு வருவதற்கு ஆகும் உங்களது ஆரம்பகட்ட பயணச் செலவுகளையும், அதனைத் தொடர்ந்து உங்களைப் பணியமர்த்துபவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்ல, அல்லது வேலைவாய்ப்பு முடிவடையும் காலத்தில் நீங்கள் சாதாரணமாக வசிக்கும் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு ஆகும் பயணச் செலவுகளை உங்களைப் பணியமர்த்துபவரே செலுத்துவார் என்பதற்கானதோர் சான்று.

A-1, A-2, அல்லது G-1 - G-4 வீசா வைத்திருப்பவரோடு உடன் செல்லுதல் (A-3 அல்லது G-5 வீசாக்கள்)

நீங்கள் A-1 அல்லது A-2 அல்லது G-1 முதல் G-4 முடியவுள்ள வீசா வகையைச் சேர்ந்தவராக வகைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரின் உதவியாளர், வேலையாள், அல்லது தனிப்பட்ட பணியாளராக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்ற A-3 அல்லது G-5 வகைப்பாட்டைப் பெறுவதற்குத் தகுதியடைகிறீர்கள். நீக்ன்கள் ஒரு A-3 அல்லது G-5 வகைப்பாட்டிற்கு உரிமையுள்ளவராக நிலைநாட்டியாக வேண்டும் (உ.ம்., முன்பு பணியமர்த்திய ஒருவரிடமிருந்து ஒப்புகைக் கடிதம், அந்தத் துறையில் முன்னர் வேலை பார்த்ததற்கான அத்தாட்சி போன்றவை). அந்தப் பணியாளரின் முறைப்படியான அந்தஸ்தையும், பணியமர்த்துபவர்-பணியாளர் உறவிற்குள் நுழைவதற்குக் இரு தரப்பினருக்கும் இடையே உள்ள எண்ணத்தையும், துணைத் தூதரக அதிகாரிகள் நிலைநாட்டியாக வேண்டும். கூடுதலாக, தூதரக அதிகாரிகள் (A3) மற்றும் சர்வதேச ஸ்தாபனப் பணியாளர்கள் (G5) ஆகியோரின் வீட்டு உதவியாளர்கள், வீசா ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே முதலில் அயலுறவுத் துறையின் அயல்நாட்டுப் பணி மேலாண்மைத் தகவல் அமைப்பில் (TOMIS) பதிவு செய்தாக வேண்டும். TOMIS பதிவிற்கான விவரங்களுக்கு, தயவுசெய்து அமெரிக்க அயலுறவுத் துறையின் அயல்நாட்டுப் பணிகள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

A-3 மற்றும் G-5 வீசா விண்ணப்பதாரர்களை, ஒரு துணைத் தூதரக அதிகாரி நேர்காணல் செய்தாக வேண்டும். அவர்கள், ஒரு விதிவிலக்கோடு, சாதாரண விண்ணப்ப நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். A-3 மற்றும் G-5 வீசா விண்ணப்பதாரர்கள், வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதில்லை.

A-3 அல்லது G-5 விண்ணப்பதாரர் பெறவிருக்கிற ஊதியம், பணியமர்த்தும் பகுதியில் வழங்குகிற ஊதியத்தோடு ஒப்பிடக்கூடிய நியாயமானதோர் ஊதியம் என்பதாகவும், அது அவரை நிராதரவானவராக ஆகச் செய்யாத அளவிற்குப் போதுமானதாக இருக்கிறது என்பதாகவும், துணைத் தூதரக அதிகாரியைத் திருப்திப்படுத்தியாக வேண்டும். அது போன்ற வீசாக்களுக்கான விண்ணப்பங்களில், பணியமர்த்துபவரும் பணியாளரும் கையொப்பமிட்டாக வேண்டும்.

A-3/G-5 வீசா வைத்திருப்பவர்களுக்கான ஒப்பந்தத் தேவைகள்

ஒரு A-3 அல்லது G-5 வீசாவிற்கு விண்ணப்பிக்கிறதோர் வீட்டுப் பணியாளராக, நீங்கள் மற்றும் உங்களைப் பணியமர்த்துபவர் இருவரும் கையொப்பமிட்ட ஒரு வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை நீங்கள் காண்பித்தாக வேண்டும், அதில் அடங்குபவை:

 • மாநில அல்லது மத்திய குறைந்தபட்ச அல்லது தற்போது நிலவுகிற கூலி, இதில் எது அதிகமோ அந்த விகிதத்தில் உங்களுக்கு ஈடு செய்யப்படும் என்பதற்கானதோர் உத்திரவாதம். அமெரிக்காவில் உள்ள தற்போதைய குறைந்தபட்ச கூலிகளை இங்கே காணலாம் மேலும் தற்போது நிலவுகிற கூலிகளை இங்கே காணலாம்.
 • வேலையில் சேர்ந்த முதல் 90 நாட்களுக்குப் பிறகு, அனைத்துக் கூலிப் பணத்தைக் கொடுப்பதும் காசோலை மூலமாக அல்லது உங்கள் வங்கிக் கணக்கிற்கு மின்னணுப் பரிவர்த்தனை மூலமாகவே கொடுக்கப்பட வேண்டும். பணமர்த்தியவருக்கோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ உங்களது வங்கிக் கணக்கை அனுகக் கூடாது.
 • பணியமர்த்துபவர் அயல்நாட்டுத் தூதரக அதிகாரியாக இருக்கிற பட்சத்தில், கூடவே வசிக்கும் வீட்டு உதவியாளர்கள், உரிமைப் பழக்கத்தின் கீழ், அவர்களது சம்பளத்திற்குக் கூடுதலாக இலவச தங்குமறை மற்றும் உணவைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
 • உங்களைப் பணியமர்த்துபவருக்காகப் பணியாற்றுகிற வேளையில் வேறு எந்த வேலைவாய்ப்பையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்கிறதோர் வாக்குறுதி
 • உங்களது கடவுச்சீட்டைப் பிடித்து வைத்துக் கொள்ள மாட்டோம் என உங்களைப் பணியமர்த்துபவரிடமிருந்து ஒரு வாக்குறுதி மற்றும் வேலை நேரங்களுக்குப் பிறகு ஈடு எதுவும் செய்யாமல் நீங்கள் வேலை பார்க்கும் வளாகத்திலேயே இருக்க வேண்டியதில்லை என்பதை இருதரப்பினரும் புரிந்து கொள்கிறார்கள் என்பதற்கானதோர் வாக்குமூலம்
 • நடவடிக்கை எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் அத்தியாவசியமானதாகும், அதில் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் ஒருசில வேலைவாய்ப்பு அல்லது மனித உரிமைகள் பாதுகாப்பை நாடக்கூடியதோர் வரம்பமைப்பை அது உங்களுக்கு வழங்குகிறது. அமெரிக்காவிற்கு வருவதற்கு ஆகும் உங்களது ஆரம்பகட்ட பயணச் செலவுகளையும், அதனைத் தொடர்ந்து உங்களைப் பணியமர்த்துபவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்ல, அல்லது கொடுத்துள்ள வேலை முடிவடையும் காலத்தில் நீங்கள் சாதாரணமாக வசிக்கும் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு ஆகும் பயணச் செலவுகளை உங்களைப் பணியமர்த்துபவரே செலுத்தியாக வேண்டும்.

விண்ணப்ப உருப்படிகள்

B-1, A-3 அல்லது G-5 வீசாவிற்காக விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் பின்வருவனவற்றைச் சமர்ப்பித்தாக வேண்டும்:

 • ஒரு குடிவரவாளர் அல்லாதோர் வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவம் DS-160 குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு DS-160 இணையபக்கத்திற்குச் சென்று பாருங்கள்.
 • அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்.
 • கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த ஒரு (1) 2”x2” (5செமீx5செமீ) புகைப்படம். இந்த இணைய பக்கத்தில், தேவையான புகைப்பட வடிவமைப்பு குறித்த தகவல்கள் உள்ளன.
 • B-1 வீசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்: உங்கள் நாட்டு நாணயத்தில் செலுத்திய, உங்கள் US$160 திருப்பித் தரமுடியாத குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்ப நடவடிக்கைக் கட்டணத்தை செலுத்தியதைக் காண்பிக்கிறதோர் இரசீது. இந்த இணைய பக்கத்தில், இந்தக் கட்டணத்தைச் செலுத்துவது குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன. ஒரு வீசா வழங்கப்பட்டு விடுகிற பட்சத்தில், உங்கள் நாட்டினத்தைப் பொருத்து, கூடுதலாக ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணம் இருக்கலாம். அயலுறவுத் துறையின் இணையதளம், நீங்கள் ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்பதையும் அந்தக் கட்டணத் தொகை எவ்வளவு என்பதையும் காண உதவலாம்.
 • உங்களைப் பணியமர்த்துபவரின் வீசா அல்லது அமெரிக்காவில் அவர்கள் நுழைவதற்கு உபயோகிக்கிற மற்ற முறையின் நகல் ஒன்று (அவர்களது வீசா தள்ளுபடி நாட்டுக் கடவுச்சீட்டு அல்லது அமெரிக்கக் கடவுச்சீட்டு)
 • நீங்கள் மற்றும் உங்களைப் பணியமர்த்துபவர் இருவரும் கையொப்பமிட்டதோர் வேலைவாய்ப்பு ஒப்பந்தம், அது மேலே பட்டியலிட்டுள்ள அனைத்துத் தேவைகளையும் சந்திக்கிறது
 • A-3 மற்றும் G-5 வீசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்: முதன்மையானவரின் வேலைவாய்ப்பு நிலை, புறப்படும் தேதி, சுற்றுப்பயணத்தின் நோக்கம், மற்றும் அமெரிக்காவில் தங்கும் காலம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் தூதரகக் குறிப்பு. அந்தத் தூதரகக் குறிப்பு பணியாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அப்பணியாளரின் பதவியை அல்லது முறைப்படியான அந்தஸ்தைக் கொடுக்க வேண்டும். அது புறப்படும் தேதி, சுற்றுப்பயணத்தின் நோக்கம், மற்றும் அமெரிக்காவில் தங்கும் காலம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். A-3 மற்றும் G-5 வீசா விண்ணப்பதாரர்கள் வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.

இத்தகைய உருப்படிகளுக்குக் கூடுதலாக, நீங்கள் இந்தச் சேவை வாயிலாகத் தான் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்தீர்கள் என்பதை உறுதி செய்கிற நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதம் ஒன்றை நீங்கள் காண்பித்தாக வேண்டும். துணைத் தூதரக அலுவலருக்கு வழங்கியுள்ள தகவல்களை ஆதரிப்பதாக நீங்கள் நம்புகிற ஆதார ஆவணங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் நீங்கள் கொண்டு வரலாம்.

விண்ணப்பிப்பது எப்படி

படி 1

குடிவரவாளர் அல்லாத வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

படி 2

வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி 3

இந்த இணைய பக்கத்தில் உங்கள் நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுங்கள். உங்களுக்கான நேர்காணல் நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்வரும் தகவல்கள் தேவைப்படும்:

 • உங்கள் கடவுச்சொல் எண்
 • இந்த எண்ணைக் காண்பதில் உங்களுக்கு உதவி தேவை என்றால் இங்கே சுட்டுக.)
 • உங்கள் படிவ உறுதிப்படுத்தல் பக்கத்திலிருந்து கிடைக்கிற பத்து (10) இலக்க பட்டைக் குறியீட்டு எண்
படி 4

உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். உங்களது நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதத்தின் அச்சிட்ட நகல் ஒன்றையும், DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கத்தையும், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும், உங்களது தற்போதைய கடவுச்சீட்டு, அனைத்து பழைய கடவுச் சீட்டுகள், மற்றும் அசல் வீசா கட்டண இரசீதையும் நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். இத்தகைய உருப்படிகள் அனைத்தும் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆதார ஆவணங்கள்

ஆதார ஆவணங்கள் என்பவை, உங்கள் நேர்காணலில் துணைத் தூதரக அதிகாரி பரிசீலிக்கும் அநேகக் காரணிகளில் ஒன்றே ஒன்றாகும். துணைத் தூதரக அதிகாரிகள் ஓவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பார்வையிட்டு, வீசா கொடுப்பது குறித்து முடிவெடுக்கும் போது தொழில் ரீதியிலான, சமூக, கலாச்சார மற்றும் மற்ற காரணிகளையும் பரிசீலிப்பார்கள். துணைத் தூதரக அதிகாரிகள் உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களையும், குடும்பச் சூழ்நிலையையும், உங்கள் நீண்ட-காலத் திட்டங்களையும், நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள எதிர்நோக்குகளையும் பார்வையிடலாம். ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பரிசீலனையும் கொடுக்கப்படுகிறது.

எச்சரிக்கை: பொய்யான ஆவணங்களை அளிக்காதீர்கள். மோசடியான அல்லது தவறான ஆவணங்களைக் கொடுப்பது, நிரந்தரமாகவே வீசாவிற்குத் தகுதியடையாமற் போய் விடுவதில் போய் முடிந்து விடலாம். இரகசிதன்மை குறித்துக் கவலையடைகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் ஆவணங்களை முத்திரையிட்ட உறையில் போட்டு அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வேறு எவருக்கும் உங்கள் தகவல்களைக் கிடைக்கச் செய்யாது மேலும் உங்கள் தகவல்களின் இரகசியத்தன்மையை மதித்து நடக்கும்.

உங்கள் நேர்காணலுக்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்:

 • வாக்குறுதியளித்த கூலியைக் கொடுப்பதற்கான உங்களைப் பணியமர்த்தியவரது திறன் குறித்த அத்தாட்சி. குறிப்பு: நீங்கள் ஒரு A-3 அல்லது G-5 வீசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், இது அந்தப் பணியமர்த்துபவர் ஒரு தூதரக அந்தஸ்துள்ள ஆலோசகர் அல்லது அதற்குக் கீழானதோர் பதவியை வகித்தால் மட்டுமே பொருந்துகிறது.
 • நீங்கள் அமெரிக்காவில் தங்குவது தற்காலிகமானதே என்பதை நிலைநாட்டுகிற அத்தாட்சி.
 • இன்னும் அதிகத் தகவல்களுக்கு அயலுறவுத் துறையின் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.

இன்னும் அதிகத் தகவல்கள்

A-3, B-1, மற்றும் G-5 வீசாக்கள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, அயலுறவுத் துறையின் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.