மாணவர் வீசா

இந்தப் பக்கத்தில்:


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

மேலோட்டம்

படிப்பதற்காக அமெரிக்காவிற்கு வருகிற அந்நிய நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களை அமெரிக்கா வரவேற்கிறது. ஒரு வீசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அனைத்து மாணவர் வீசா விண்ணப்பதாரர்களும், அவர்களது பாடசாலை அல்லது திட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்டதும், ஒரு மாணவர் வீசாவிற்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய, தேவைப்படுகிற அனைத்து அங்கீகரிப்பு ஆவணத்தையும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் கல்வி ஸ்தாபனங்கள் வழங்கும்.

வீசா விவரக்குறிப்புகள் மற்றும் கல்வித் தகுதிகள்

F-1 வீசா

இது தான் மிகவும் பொதுவான வகை மாணவர் வீசாவாகும். ஒரு சான்றுபெற்ற அமெரிக்கக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம், தனியார் மேல்நிலைப் பாடசாலை, அல்லது அங்கீகாரம் பெற்ற ஆங்கில மொழித் திட்டம் போன்ற அங்கீகரித்ததோர் பாடசாலையில், அமெரிக்காவில் கல்விப் படிப்புகளில் ஈடுபட நீங்கள் விரும்புகிற பட்சத்தில், அப்போது உங்களுக்கு F-1 வீசா தேவைப்படுகிறது. நீங்கள் படிக்கும் பயிற்சித் திட்டம் 18 மணி நேரங்களுக்கும் மேலானதாக இருந்தால், அப்போதும் உங்களுக்கு F-1 வீசா தேவைப்படும்.

M-1 வீசா

நீங்கள் ஒரு அமெரிக்க ஸ்தாபனத்தில் கல்வி-சாராத அல்லது தொழில்கல்விப் படிப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடத் திட்டமிடுகிற பட்சத்தில், அப்போது உங்களுக்கு M-1 வீசா தேவைப்படுகிறது.

இவ்வீசாக்கள் ஒவ்வொன்றும் குறித்த இன்னும் அதிகத் தகவல்களையும், அமெரிக்காவில் படிப்பது குறித்த வாய்ப்புகளையும், அமெரிக்கக் கல்வி இணையதளத்தில் காணலாம்.

அமெரிக்கப் பொதுப் பாடசாலைகள்

அயல்நாட்டு மாணவர்கள் (மழலையர் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை) பொது ஆரம்பப் பாடசாலைகளில் அல்லது பொது நிதியுதவி பெறுகிற வயது நிரம்பியோர் கல்வித் திட்டத்தில் சேர்வதற்கு அமெரிக்க சட்டம் அனுமதிப்பதில்லை. ஆகவே, அது போன்ற பாடசாலைகளுக்கு F-1 வீசாக்களை வழங்க முடியாது.

ஒரு பொதுப் பாடசாலையில் சேர்வதற்கு (9 முதல் 12 ஆம் வகுப்புகள்) ஒரு F-1 வீசாவை வழங்க முடியும், ஆனால் அம்மாணவர் அந்தப் பாடசாலையில் அதிகபட்சம் 12 மாதங்கள் படிப்பதற்கே கட்டுப்படுத்தப்படுகிறார். கல்விக்கான மாணியமற்ற செலவை அம்மாணவர் செலுத்தி விட்டார் என்பதையும், அந்த நோக்கத்திற்காக அந்த மாணவர் செலுத்டிய தொகையையும், அப்பாடசாலையும் I-20 படிவத்தில் சுட்டிக்காட்டியாக வேண்டும்.

வீசா சட்டத் தேவைகள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, அயலுறவுத் துறையின் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.

குறிப்பு: A, E, F-2, G, H-4, J-2, L-2, M-2 அல்லது மற்ற வருவிப்புக் குடிவரவாளர் அல்லாதோர் வீசாக்களை வைத்திருப்பவர்கள், பொது ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பாடசாலைகளில் சேர்ந்து கொள்ளலாம்.

மாணவர் உதவி, ஒரு பாடசாலையைத் தேடிப்பிடித்தல்

அமெரிக்கக் கல்வி ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்ள விரும்புகிற மாணவர்கள், தொடர்பு கொள்ளவும், https://travel.state.gov/content/travel/en/us-visas/visa-information-resources/all-visa-categories.html என்ற இணையதளத்திற்குச் சென்று பார்க்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்

விண்ணப்ப உருப்படிகள்

F அல்லது M வீசாவிற்காக விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் பின்வருவனவற்றைச் சமர்ப்பித்தாக வேண்டும்:

 • ஒரு குடிவரவாளர் அல்லாதோர் வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவம் DS-160 குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு DS-160 இணையபக்கத்திற்குச் சென்று பாருங்கள்.
 • அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்.
 • கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த ஒரு (1) 2”x2” (5செமீx5செமீ) புகைப்படம். இந்த இணைய பக்கத்தில், தேவையான புகைப்பட வடிவமைப்பு குறித்த தகவல்கள் உள்ளன.
 • உங்கள் நாட்டு நாணயத்தில் செலுத்திய, உங்கள் US$160 திருப்பித் தரமுடியாத குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்ப நடவடிக்கைக் கட்டணத்தை செலுத்தியதைக் காண்பிக்கிறதோர் இரசீது. இந்த இணைய பக்கத்தில், இந்தக் கட்டணத்தைச் செலுத்துவது குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன. ஒரு வீசா வழங்கப்பட்டு விடுகிற பட்சத்தில், உங்கள் நாட்டினத்தைப் பொருத்து, கூடுதலாக ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணம் இருக்கலாம். அயலுறவுத் துறையின் இணையதளம், நீங்கள் ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்பதையும் அந்தக் கட்டணத் தொகை எவ்வளவு என்பதையும் காண உதவலாம்.
 • உங்கள் அமெரிக்கப் பாடசாலை அல்லது திட்டத்திலிருந்து பெறுகிறதோர் அங்கீகரித்த I-20 படிவம்.

இத்தகைய உருப்படிகளுக்குக் கூடுதலாக, நீங்கள் இந்தச் சேவை வாயிலாகத் தான் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்தீர்கள் என்பதை உறுதி செய்கிற நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதம் ஒன்றை நீங்கள் காண்பித்தாக வேண்டும். துணைத் தூதரக அலுவலருக்கு வழங்கியுள்ள தகவல்களை ஆதரிப்பதாக நீங்கள் நம்புகிற ஆதார ஆவணங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் நீங்கள் கொண்டு வரலாம்.

விண்ணப்பிப்பது எப்படி

படி 1

குடிவரவாளர் அல்லாத வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

படி 2

வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி 3

இந்த இணைய பக்கத்தில் உங்கள் நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுங்கள். உங்களுக்கான நேர்காணல் நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்வரும் தகவல்கள் தேவைப்படும்:

 • உங்கள் கடவுச்சொல் எண்
 • (இந்த எண்ணைக் காண்பதில் உங்களுக்கு உதவி தேவை என்றால் இங்கே சுட்டுக.)
 • உங்கள் படிவ உறுதிப்படுத்தல் பக்கத்திலிருந்து கிடைக்கிற பத்து (10) இலக்க பட்டைக் குறியீட்டு எண்
படி 4

உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். உங்களது நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதத்தின் அச்சிட்ட நகல் ஒன்றையும், DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கத்தையும், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும், உங்களது தற்போதைய கடவுச்சீட்டு, அனைத்து பழைய கடவுச் சீட்டுகள், மற்றும் அசல் வீசா கட்டண இரசீதையும் நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். இத்தகைய உருப்படிகள் அனைத்தும் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆதார ஆவணங்கள்

ஆதார ஆவணங்கள் என்பவை, உங்கள் நேர்காணலில் துணைத் தூதரக அதிகாரி பரிசீலிக்கும் அநேகக் காரணிகளில் ஒன்றே ஒன்றாகும். துணைத் தூதரக அதிகாரிகள் ஓவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பார்வையிட்டு, வீசா கொடுப்பது குறித்து முடிவெடுக்கும் போது தொழில் ரீதியிலான, சமூக, கலாச்சார மற்றும் மற்ற காரணிகளையும் பரிசீலிப்பார்கள். துணைத் தூதரக அதிகாரிகள் உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களையும், குடும்பச் சூழ்நிலையையும், உங்கள் நீண்ட-காலத் திட்டங்களையும், நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள எதிர்நோக்குகளையும் பார்வையிடலாம். ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பரிசீலனையும் கொடுக்கப்படுகிறது.

எச்சரிக்கை: பொய்யான ஆவணங்களை அளிக்காதீர்கள். மோசடியான அல்லது தவறான ஆவணங்களைக் கொடுப்பது, நிரந்தரமாகவே வீசாவிற்குத் தகுதியடையாமற் போய் விடுவதில் போய் முடிந்து விடலாம். இரகசிதன்மை குறித்துக் கவலையடைகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் ஆவணங்களை முத்திரையிட்ட உறையில் போட்டு அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வேறு எவருக்கும் உங்கள் தகவல்களைக் கிடைக்கச் செய்யாது மேலும் உங்கள் தகவல்களின் இரகசியத்தன்மையை மதித்து நடக்கும்.

உங்கள் நேர்காணலுக்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்:

 • அமெரிக்காவில் உங்களது படிப்புத் திட்டம் முடிவடைந்த பிறகு உங்களது சொந்த நாட்டிற்குத் திரும்பி விடுவதை கட்டாயப்படுத்துகிற, உங்கள் சொந்த நாட்டோடு உங்களுக்குள்ள வலுவான நிதி, சமூக மற்றும் குடும்பப் பிணைப்புகளை நிலைநாட்டுகிற ஆவணங்கள்.
 • நிதி மற்றும் உங்களது விண்ணப்பத்திற்கு ஆதாரமாக இருக்கிறதும், படிப்பின் முதல் ஆண்டிற்குத் தேவைப்படுகிற அனைத்து செலவினங்களையும் சந்திப்பதற்கான நிதிகள் போதுமான அளவிற்கு உங்களிடம் தயார் நிலையில் உள்ளது என்பதற்கான நம்பகமான தடயத்தையும், நீங்கள் அமெரிக்காவில் இருக்கையில் செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வதற்கான நிதி வசதி உங்களிடம் இருக்கிறது என்பதற்கான தடயத்தையும் கொடுப்பதாக நீங்கள் நம்புகிற வேறு ஏதேனும் ஆவணங்கள். M-1 வீசா விண்ணப்பதாரர்கள் அமெரிககவில் தங்கியிருக்க எண்ணங் கொண்டுள்ள முழு காலத்திற்குமான அனைத்துப் படிப்புக் கட்டணங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்குப் பணம் செலவழிப்பதற்கான திறன் அவர்களுக்கு இருக்கிறது என்பதை நிலைநாட்டியாக வேண்டும்.
 • வங்கிக் கணக்கு அறிக்கைகளின் அசல் நகல்கள் அல்லது அசல் வங்கிக் கணக்குப் புத்தகங்களையும் நீங்கள் காண்பித்தால் ஒழிய, கணக்கு அறிக்கைகளின் புகைப்பட நகல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
 • உங்களை நிதிசார்ந்து இன்னொரு நபர் ஸ்பான்சர் செய்கிறார் என்றால், அந்த ஸ்பான்சருக்கும் உங்களுக்கும் உள்ள உறவிற்கான அத்தாட்சி (உங்கள் பிறப்புச் சான்றிதழ் போன்றவை), ஸ்பான்சரின் மிகச் சமீபத்திய அசல் வரிக் கணப்புப் படிவங்கள் மற்றும் ஸ்பான்சரின் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும்/அல்லது வைப்புநிதி சான்றுகள் ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்.
 • பாடசாலைப் படிப்புத் தயார்நிலையைக் காண்பிக்கிற அனைத்துக் கல்வி ஆவணங்கள். பயனுள்ள ஆவணங்களில், வகுப்புகளோடு பாடசாலைக் கையெழுத்துப் பிரதிகள் (அசல் நகல்களே விரும்பப்படுகின்றன), பொதுத் தேர்வுச் சான்றுகள் (A-லெவெல்கள்), நிலையாக்கப்பட்ட பரிசோதனை மதிப்பெண்கள் (SAT, TOEFL, போன்றவை), மற்றும் பட்டயப் படிப்புகள்.

சார்ந்திருப்பவர்கள்

அமெரிக்காவில் முதன்மை வீசா வைத்திருப்பவரோடு அவர் தங்கியிருக்கும் காலத்திற்குச் சேர்ந்து கொள்ள விரும்புகிற வாழ்க்கைத் துணைகள் மற்றும்/அல்லது 21 வயதிற்குக் கீழ்ப்பட்ட திருமணமாகாத குழந்தைகளுக்கு, F அல்லது M வீசாக்கள் அவசியமாகின்றன. F அல்லது M வீசா வைத்திருப்பவர்களுக்கு வருவிப்பு வீசா எதுவும் அவசியமில்லை.

வீசா வைத்திருக்கும் முதன்மையானவரோடு அமெரிக்காவில் தங்கியிருக்க விரும்பாத, ஆனால் விடுமுறைக் காலங்களுக்கு மட்டும் வருகை தர விரும்புகிற குடும்ப உறுப்பினர்கள், வருகையாளர் (B-2) வீசாக்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியடையலாம்.

F அல்லது M வருவிப்பு வீசாவில் வந்துள்ள வாழ்க்கைத் துணைகள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற முடியாது. உங்களது வாழ்க்கைத் துணை/குழந்தை வேலை தேடுகிற பட்சத்தில், அந்த வாழ்க்கைத் துணை அதற்கேற்ற வேலை வீசாவைப் பெற்றுக் கொண்டாக வேண்டும்.

சார்ந்திருப்பவர்களுக்கான ஆதார ஆவணங்கள்

சார்ந்திருப்பவர்கள் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றையும் வழங்க வேண்டும்:

 • மாணவருக்கும், அவரது வாழ்க்கைத் துணை மற்றும்/அல்லது குழந்தைக்குமான உறவு குறித்த அத்தாட்சி (உ.ம்., திருமண மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள்)
 • அதே நேரத்தில் குடும்பத்தினர் அவரவரது வீசாக்களுக்கு விண்ணப்பிப்பதே விரும்பப்படுகிறது, ஆனால் வாழ்க்கைத் துணை மற்றும்/அல்லது குழந்தை பின்னொரு நேரத்தில் தனியாக விண்ணபித்தாக வேண்டியிருந்தால், அவர்கள் மாணவர் வீசா வைத்திருப்பவரின் கடவுச்சீட்டு மற்றும் வீசாவின் நகலை, தேவைப்படுகிற மற்ற ஆவணங்களோடு சேர்த்துக் கொண்டு வர வேண்டும்.

மற்ற தகவல்கள்

விருப்பம் சார்ந்த செயல்முறைப் பயிற்சி (OPT)

F-1 வீசா வைத்திருப்பவர்கள், பட்டப்படிப்பிற்குத் தேவையான அனைத்துப் பயிற்சியையும் நிறைவு செய்ததைத் தொடர்ந்து (ஆராய்ச்சிக் கட்டுரை அல்லது அதற்குச் சமமானது உட்படாமல்), அல்லது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து, 12 மாதங்கள் வரையிலான விருப்பம் சார்ந்த செயல்முறைப் பயிற்சிக்குத் தகுதியடையலாம். OPT என்பது மாணவரின் கல்விப் பணியிலிருந்து அப்பாற்பட்டதாகும், மேலும் OPT-க்கான கால அளவு அம்மாணவரின் கல்வித் திட்டத்தின் போது அல்லது பூர்த்தி செய்த கல்வித் தேதியில் தெரிவிக்கப்படாது. OPT எடுப்பதற்காக ஒரு F வீசாவிற்கு விண்ணப்பிக்கிற மாணவர்கள், கடந்து போயிருக்கக் கூடிய அசல் படிப்பு முடிப்புத் தேதியோடுள்ளதோர் I-20 படிவத்தைக் காண்பிக்கலாம். ஆயினும், இத்தகைய I-20 படிவங்களில், வழக்கமான படிப்புக் கால முடிவிற்கு அப்பாலும் நீள்கிற தோர் OPT திட்டத்தை அங்கீகரித்துள்ளதைத் தெரிவித்து, நியமித்த பாடசாலை அலுவலர் குறிப்பெழுத வேண்டும். கூடுதலாக, அவர்களது செயல்முறைப் பயிற்சித் திட்டத்தைUSCIS அங்கீகரித்துள்ளது என்பதற்கான அல்லது ஒரு விண்ணப்பம் நிலுவையில் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை வைத்திருந்தாக வேண்டும், அது இவருக்கு ஒரு OPT திட்டத்திற்கான விண்ணப்பம் நிலுவையில் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிற வேலைவாய்ப்பு அங்கீகரிப்பு அட்டை வடிவத்திலோ அல்லது படிவத்திலோ இருக்கலாம்.

படிப்புகளில் ஒரு இடைவெளி ஏற்பட்டதற்குப் பிறகு மாணவர் வீசாக்களின் செல்லுபடியாகும் தன்மை

ஐந்து மாதங்களுக்கும் மேலாக தங்களது வகுப்புகளுக்கு வராமல் இருக்கிற மாணவர்கள், வெளிநாட்டிற்குப் பயணம் செய்து வந்ததைத் தொடர்ந்து திரும்பவும் பாடசாலைக்குத் திரும்பிச் செல்ல, கீழே விளக்கிச் சொல்லியுள்ளபடி ஒரு புதிய F-1 அல்லது M-1 மாணவர் வீசாவிற்கு விண்ணப்பித்துப் பெற எதிர்பார்க்க வேண்டும்.

அமெரிக்காவிற்குள்ளேயுள்ள மாணவர்கள்

குடிவரவு சட்டத்தின் கீழ், பாடசாலையை அல்லது படிப்புத் திட்டங்களை மாற்றிய தேதியிலிருந்து ஐந்து மாதங்களுக்குள் மாணவர்கள் தங்களது படிப்புகளை ஆரம்பிக்கவில்லை என்றால், அவர்கள் தங்களது (F-1 அல்லது M-1) அந்தஸ்தை இழந்து போகலாம். ஒரு மாணவர் தனது அந்தஸ்தை இழந்து போகிற பட்சத்தில், USCIS அம்மாணவரது அந்தஸ்தைத் திரும்பப் பெற்றுத் தந்தால் ஒழிய, அம்மாணவர் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குப் பயணித்து வருவதற்கான அவரது F அல்லது M வீசாவும் செல்லாததாகிவிடும். இன்னும் அதிகத் தகவல்களுக்கு USCIS இணையதளத்தைப் பாருங்கள், மேலும் அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதற்கான வேண்டுகோளுக்கான நீட்டிப்பு / குடிவரவாளர் அல்லாதோர் அந்தஸ்தை மாற்றுவதற்கான விண்ணப்பத்திற்கான அறிவுறுத்தல்களுக்கு படிவம் I-539 பாருங்கள்.

மாணவர்கள் - வெளிநாட்டுக்குப் பயணம் செய்து அமெரிக்காவிற்குத் திரும்கிறவர்கள்

ஐந்து மாதங்கள் அல்லது அதைவிட அதிகமான காலத்திற்கு தங்களது படிப்பில் இடைவெளி விட்டு அமெரிக்காவை விட்டு வெளியே செல்கிற மாணவர்கள், அயல்நாட்டில் அவர்கள் செய்கிற செயல்பாடுகள் அவர்களது படிப்போடு தொடர்புடையதாக இருந்தால் ஒழிய, அவர்களது F-1 அல்லது M-1 வீசா அந்தஸ்தை இழந்து போகலாம். அவர்களது செயல்பாடு அவர்கள் படிப்போடு தொடர்புடையதாக இருக்கிறதா என்பது குறித்து மாணவர்களுக்குக் கேளி எதுவும் இருந்தால், அம்மாணவர்கள் தங்களது பயணத்திற்கு முன்பாகவே, அதற்கென நியமித்துள்ள பாடசாலை அதிகாரியிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம்.

ஐந்து மாதங்களுக்கும் மேலாக அமெரிக்காவிற்கு வெளியே இருந்திருந்து, மாணவர் அந்தஸ்து கைவிட்டுப் போன, அயல்நாடிலிருந்து திரும்பி வரும் மாணவர் ஒருவர், அமெரிக்காவிற்குள் நுழையும் இடத்தில் அங்குள்ள சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) குடிவரவு ஆய்வாளரிடம், முன்னர் உபயோகித்த, காலாவதியாகாத F-1 அல்லது M-1 வீசாவைக் காண்பிக்கும் போது, செல்லுபடியாகிற குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசாவை வைத்திருக்காமல் இருந்ததற்காக அம்மாணவர் உள்ளே நுழைவதற்குத் தகுதியில்லாதவர் என்பதாக அந்த CBP குடிவரவு ஆய்வாளர் கருதலாம். அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான விண்ணப்பத்தை விலக்கிக் கொள்வதற்கான அனுமதியை அம்மாணவருக்குக் கொடுத்த பிறகு அந்த வீசாவையும் CBP இரத்து செய்து விடலாம். ஆகவே, மாணவர்கள் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தங்களது படிப்பிற்குத் தொடர்பில்லாத வகையில் அமெரிக்காவில் இல்லாமல் இருந்த பிறகு, தங்களது படிப்பிற்காக அமெரிக்காவிற்குத் திரும்பவும் பயணம் செய்வதற்கு முன்பே அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் ஒன்றில் புதிய வீசாக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.