மதப்பணியாளர் வீசா

இந்தப் பக்கத்தில்:


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

மேலோட்டம்

R வீசா வகை என்பது, தற்காலிக அடிப்படையில், குடிவரவு மற்றும் நாட்டினச் சட்டத்தில் (INA) §101(a)(15)(R) வரையறுத்தபடி, ஒரு மத ரீதியான அளவில் உழைப்பதற்காக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நாடுகிற தனிநபர்களுக்கானதாகும்.

தகுதிகள்

மதப் பணியாளர்களில், மத ரீதியிலான கூட்டத்தை நடத்துவதற்கும், அந்த மதத்தின் மதப்பிரிவின் அங்கீகாரம் பெற்ற நபர்கள் வழக்கமாகச் செய்கிற மற்ற பணிகளை மேற்கொள்வதற்கும், அங்கீகாரம் பெற்ற அமைப்பிடமிருந்து அங்கீகாரம் பெற்ற நபர்கள் மற்றும் மத ரீதியிலான விடுமுறை அல்லது வேலையில் ஈடுபடுகிற பணியாளர்கள் அடங்குவர். மதப் பணியாளர் வீசாவை நீங்கள் நாடினால் நீங்கள் பின்வரும் வரன்முறையைச் சந்தித்தாக வேண்டும்:

 • அமெரிக்காவில் உண்மையான இலாப நோக்கற்ற மத ஸ்தாபனம் ஒன்று அங்கீகரித்துள்ள ஒரு மதப் பிரிவின் உறுப்பினர் ஒருவராக இருந்தாக வேண்டும்.
 • உங்களது மதப் பிரிவும், அதன் துணை அமைப்புகளும், பொருந்துமானால், வரி விலக்குப் பெற்றிருந்தாக வேண்டும் அல்லது வரி-விலக்குக் அந்தஸ்திற்குத் தகுதியடைய வேண்டும்.
 • நீங்கள் பின்வரும் ஒருவராக இருந்தாக வேண்டும்:
  அ) மதப் பணியாளர் அந்தஸ்திற்கான உங்கள் விண்ணப்பத்திற்கு நேர் முன் செல்கிற இரண்டு ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் மதப்பிரிவின் உறுப்பினராக இருந்தாக வேண்டும்
  (ஆ) உங்கள் மதப்பிரிவின் மத ஊழியர்காகப் பணியாற்றத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாக வேண்டும் அல்லது ஒரு உண்மையான, இலாப நோக்கற்ற மத ரீதியிலான ஸ்தாபனத்திற்காக (அல்லது அது போன்றதோர் ஸ்தாபனத்தின் வரி விலக்கு பெற்ற துணை அமைப்பிற்காக) மத ரீதியான வேலையில் அல்லது விடுமுறையில் இருந்தாக வேண்டும்
  (இ) இந்த வகையில் ஐந்து ஆண்டுகளை முன்னதாக செலவிட்டிருந்தால், விண்ணப்பிப்பதற்கு நேர் முன் செல்கிற ஆண்டில் அமெரிக்காவிற்கு வெளியே வசித்த்தாக வேண்டும் அல்லது உடல் ரீதியாக இருந்தாக வேண்டும்.

உங்களுக்கு அயல்நாட்டில் ஒரு வசிப்பிடம் இருக்கிறது என்றும் அதனை கைவிடுவதற்கான எண்ணமேதும் இல்லை என்பதற்கான தேவை ஏதுமில்லை. ஆயினும், உங்களது சட்டப்பூர்வமான நிலையின் முடிவில், எதிர்மறையான குறிப்பிட்ட அறிகுறிகள் அல்லது தடயம் இல்லாத பட்சத்தில், நீங்கள் அமெரிக்காவை விட்டுப் புறப்பட எண்ணம் கொண்டாக வேண்டும்.

மனுக்கள்

உங்களைப் பணியமர்த்திக் கொள்ள வாய்ப்புள்ள நிறுவனம் குடிவரவாளர் அல்லாத பணியாளருக்கான மனுவான I-129 படிவத்தை, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரசு சேவைகளில் (USCIS) தாக்கல் செய்தாக வேண்டும். I-129 படிவத்தை தாக்கல் செய்வது சம்பந்தமான இன்னும் விபரமான தகவல்களுக்கும், அதே போலத் தேவைகளுக்கும், தயவுசெய்து USCIS R-1 தற்காலிக குடிவரவு அல்லாத மதப் பணியாளர் இணையதளத்தைப் பாருங்கள்.

குறிப்பு: மனு மற்றும் அதனைத் தொடர்ந்து வருகிற வீசா நடவடிக்கைக்குப் போதுமான கால அவகாசத்தைத் தருவதற்காக, பணியமர்த்திக் கொள்ளப் போகிற நிறுவனம் கூடிய விரைவில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் (திட்டமிட்டுள்ள வேலை துவங்குவதற்கு முன் 6 ஆறு மாதங்களுக்கு மேல் அல்லாமல்).

உங்கள் மனு, Form I-129, நீங்கள் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் ஒரு வீசாவிற்காக விண்ணபிப்பதற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டாக வேண்டும். உங்களது மனு அங்கீகரிக்கப்படும் போது, உங்களைப் பணியமர்த்தும் நிறுவனம் அல்லது முகவர் ஒரு நடவடிக்கை அறிவிப்பு, I-797 படிவத்தைப் பெற்றுக் கொள்வார், அது உங்கள் மனுவின் அங்கீகரிப்பு அறிவிப்பாகச் செயல்படுகிறது. உங்கள் நேர்காணலின் போது அயலுறவுத் துறையின் மனுத் தகவல் மேலாண்மைச் சேவை (PIMS) வாயிலாக உங்கள் மனு அங்கீகாரத்தை துணைத் தூதரக அதிகாரி சரிபார்ப்பார்.

உங்கள் மனுவின் அங்கீகாரத்தைச் சரிபார்ப்பதற்கு, அமெரிக்கத் தூதரகத்தில் அல்லது தூதரக அலுவலகத்தில் நடைபெறும் உங்களது நேர்காணலுக்கு உங்களது I-129 மனு இரசீது எண்ணை நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். அமெரிக்கக் குடிவரவு சட்டத்தின் கீழ் நீங்கள் வீசாவிற்குத் தகுதியற்றவராகக் காணப்படுகிற பட்சத்தில், ஒரு மனுவின் அங்கீகாரம் என்பது, வீசா ஒன்றை வழங்கி விடுவதற்கு உத்திரவாதமளிப்பதில்லை என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்ப உருப்படிகள்

நீங்கள் மதப்பணியாளர் வீசாவிற்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பின்வருவனவற்றைச் சமர்ப்பித்தாக வேண்டும்:

 • ஒரு குடிவரவாளர் அல்லாதோர் வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவம் DS-160 குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு DS-160 இணையபக்கத்திற்குச் சென்று பாருங்கள்.
 • அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்.
 • கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த ஒரு (1) 2”x2” (5செமீx5செமீ) புகைப்படம். இந்த இணைய பக்கத்தில், தேவையான புகைப்பட வடிவமைப்பு குறித்த தகவல்கள் உள்ளன.
 • உங்கள் நாட்டு நாணயத்தில் செலுத்திய, உங்கள் US$190 திருப்பித் தரமுடியாத குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்ப நடவடிக்கைக் கட்டணத்தை செலுத்தியதைக் காண்பிக்கிறதோர் இரசீது. இந்த இணைய பக்கத்தில், இந்தக் கட்டணத்தைச் செலுத்துவது குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன. ஒரு வீசா வழங்கப்பட்டு விடுகிற பட்சத்தில், உங்கள் நாட்டினத்தைப் பொருத்து, கூடுதலாக ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணம் இருக்கலாம். அயலுறவுத் துறையின் இணையதளம், நீங்கள் ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்பதையும் அந்தக் கட்டணத் தொகை எவ்வளவு என்பதையும் காண உதவலாம்.
 • இந்த இரசீது எண் உங்கள் அங்கீகரித்த I-129 மனுவின் மீது அச்சிடப்பட்டுள்ளது. இந்த நேர்காணலுக்கு I-797 படிவம் அவசியமில்லை என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்.

இத்தகைய உருப்படிகளுக்குக் கூடுதலாக, நீங்கள் இந்தச் சேவை வாயிலாகத் தான் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்தீர்கள் என்பதை உறுதி செய்கிற நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதம் ஒன்றை நீங்கள் காண்பித்தாக வேண்டும். துணைத் தூதரக அலுவலருக்கு வழங்கியுள்ள தகவல்களை ஆதரிப்பதாக நீங்கள் நம்புகிற ஆதார ஆவணங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் நீங்கள் கொண்டு வரலாம்.

விண்ணப்பிப்பது எப்படி

படி 1

குடிவரவாளர் அல்லாத வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

படி 2

வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி 3

இந்த இணைய பக்கத்தில் உங்கள் நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுங்கள். உங்களுக்கான நேர்காணல் நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்வரும் தகவல்கள் தேவைப்படும்:

 • உங்கள் கடவுச்சொல் எண்
 • (இந்த எண்ணைக் காண்பதில் உங்களுக்கு உதவி தேவை என்றால் இங்கே சுட்டுக.)
 • உங்கள் படிவ உறுதிப்படுத்தல் பக்கத்திலிருந்து கிடைக்கிற பத்து (10) இலக்க பட்டைக் குறியீட்டு எண்
படி 4

உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். உங்களது நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதத்தின் அச்சிட்ட நகல் ஒன்றையும், DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கத்தையும், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும், உங்களது தற்போதைய கடவுச்சீட்டு, அனைத்து பழைய கடவுச் சீட்டுகள், மற்றும் அசல் வீசா கட்டண இரசீதையும் நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். இத்தகைய உருப்படிகள் அனைத்தும் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆதார ஆவணங்கள்

ஆதார ஆவணங்கள் என்பவை, உங்கள் நேர்காணலில் துணைத் தூதரக அதிகாரி பரிசீலிக்கும் அநேகக் காரணிகளில் ஒன்றே ஒன்றாகும். துணைத் தூதரக அதிகாரிகள் ஓவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பார்வையிட்டு, வீசா கொடுப்பது குறித்து முடிவெடுக்கும் போது தொழில் ரீதியிலான, சமூக, கலாச்சார மற்றும் மற்ற காரணிகளையும் பரிசீலிப்பார்கள். துணைத் தூதரக அதிகாரிகள் உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களையும், குடும்பச் சூழ்நிலையையும், உங்கள் நீண்ட-காலத் திட்டங்களையும், நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள எதிர்நோக்குகளையும் பார்வையிடலாம். ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பரிசீலனையும் கொடுக்கப்படுகிறது.

எச்சரிக்கை: பொய்யான ஆவணங்களை அளிக்காதீர்கள். மோசடியான அல்லது தவறான ஆவணங்களைக் கொடுப்பது, நிரந்தரமாகவே வீசாவிற்குத் தகுதியடையாமற் போய் விடுவதில் போய் முடிந்து விடலாம். இரகசிதன்மை குறித்துக் கவலையடைகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் ஆவணங்களை முத்திரையிட்ட உறையில் போட்டு அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வேறு எவருக்கும் உங்கள் தகவல்களைக் கிடைக்கச் செய்யாது மேலும் உங்கள் தகவல்களின் இரகசியத்தன்மையை மதித்து நடக்கும்.

உங்கள் நேர்காணலுக்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்:

 • அமெரிக்காவிற்கு வெளியே, முழுமையாக அல்லது பாதியாக, உங்களது மத உறுப்பினர்த்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை, அந்த அயல்நாட்டு மற்றும் அமெரிக்க மத ஸ்தாபனங்கள் அதே மதப் பிரிவைச் சேர்ந்தவை என்றும், ஒரு R வீசாவிற்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு சற்று முன்பு, தேவையான அந்த இரண்டு-ஆண்டு காலத்திற்கு நீங்கள் அம்மதப் பிரிவின் உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள் என்றும் சான்றளித்து, உங்களைப் பணியமர்த்தும் ஸ்தாபனத்தின் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அதிகாரம் பெற்ற அலுவலர் ஒருவரிடமிருந்து பெற்ற கடிதம்.
 • நீங்கள் ஓர் மத ஊழியர் என்றால், அந்த மதப் பிரிவிற்கான மத வழிபாட்டை நடத்துவதற்கு நீங்கள் அதிகாரம் பெற்றிருக்கிறீர்கள். இப்பணிகளை விவவரமாக விவரிக்க வேண்டும்; அல்லது
 • நீங்கள் மத ரீதியான தொழில் நிபுணர் என்றால், நீங்கள் குறைந்தது ஒரு இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்கிறீர்கள் என்றும், அம்மதத் தொழிலில் நுழைவதற்குத் ஒரு பட்டப்படிப்பு தேவை என்பதையும் விவரிக்க வேண்டும்; அல்லது
 • நீங்கள் தொழில்முறையில் அல்லாததோர் விடுமுறை அல்லது தொழிலில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், செய்ய வேண்டிய வேலையின் வகை, பாரம்பரிய மதச் செயல்பாட்டிற்குத் தொடர்புடையது என்பதை விவரித்தாக வேண்டும்.
 • ஊதியத்திற்கான ஏற்பாடுகள், தொகை மற்றும் சம்பளத்திற்கான மூலம், உணவு மற்றும் தங்குமிடம் போன்ற மற்ற வகை இழப்பீடுகள், மற்றும் பணம் சார்ந்த மதிப்பு பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் பலன்கள், மற்றும் அது போன்ற ஊதியம் கொடுக்கப்படுகிற சேவைக்குக் கைமாறானதா என்பது குரித்த அறிக்கை உட்பட.
 • நீங்கள் சேவைகளை வழங்கும் அக்குறிப்பிட்ட மதப் பிரிவின் ஸ்தாபன மையத்தின் அல்லது துணை மையத்தின் பெயர் மற்றும் இருப்பிடம்.
 • மதப் பிரிவோடு இணைந்துள்ளதோர் ஸ்தாபனத்திற்காக நீங்கள் உழைப்பீர்கள் என்றால், அவ்விரண்டு ஸ்தாபனங்களுக்கு இடையே உள்ள உறவின் தன்மை குறித்ததோர் விவரக்குறிப்பு.
 • மத ஸ்தாபனத்தின் சொத்துக்கள் மற்றும் இயங்கும் முறை குறித்த அத்தாட்சி.
 • பொருந்துகிற மாநிலச் சட்டத்தின் கீழ் உங்கள் ஸ்தாபனத்தின் பதிவு ஆவணங்கள்.

இன்னும் அதிகத் தகவல்கள்

மத ஊழியர்களுக்கான வீசாக்கள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, அயலுறவுத் துறையின் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.