தொழில்சார் வீசா

இந்தப் பக்கத்தில்:


அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

மேலோட்டம்

நீங்கள் ஒரு குடிவரவாளர் அல்லாதவராக அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை செய்ய விரும்பினால், நீங்கள் செய்யும் வேலையின் வகையின் அடிப்படையில் உங்களுக்கு குறிப்பான வீசா தேவைப்படும். பெரும்பாலான தற்காலிகப் பணியாளர் வகைகளுக்கு, உங்களுக்கு வேலை கொடுக்க வாய்ப்புள்ள பணியமர்த்தும் நிறுவனம் அல்லது முகவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்வது அவசியமாகிறது, அம்மனு நீங்கள் வேலை வீசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே அமெரிக்காவில் உள்ள அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகளால் (USCIS) அங்கீகரிக்கப்பட்டாக வேண்டும்.

H, L, O, P மற்றும் Q வீசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள் அனைவரும், USCIS-ஆல் அவர்கள் சார்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோர் மனுவை வைத்திருந்தாக வேண்டும். அம்மனு, Form I-129, நீங்கள் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் வேலை வீசாவிற்காக விண்ணபிப்பதற்கு முன்பே அங்கீகரிக்கப்பட்டாக வேண்டும். உங்களது மனு அங்கீகரிக்கப்படும் போது, உங்களைப் பணியமர்த்தும் நிறுவனம் அல்லது முகவர் ஒரு நடவடிக்கை அறிவிப்பு, I-797 படிவத்தைப் பெற்றுக் கொள்வார், அது உங்கள் மனுவின் அங்கீகரிப்பு அறிவிப்பாகச் செயல்படுகிறது. உங்கள் நேர்காணலின் போது அயலுறவுத் துறையின் மனுத் தகவல் மேலாண்மைச் சேவை (PIMS) வாயிலாக உங்கள் மனு அங்கீகாரத்தை துணைத் தூதரக அதிகாரி சரிபார்ப்பார்.

உங்கள் மனுவின் அங்கீகாரத்தைச் சரிபார்ப்பதற்கு, அமெரிக்கத் தூதரகத்தில் அல்லது தூதரக அலுவலகத்தில் நடைபெறும் உங்களது நேர்காணலுக்கு உங்களது I-129 மனு இரசீது எண்ணை நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். அமெரிக்கக் குடிவரவு சட்டத்தின் கீழ் நீங்கள் வீசாவிற்குத் தகுதியற்றவராகக் காணப்படுகிற பட்சத்தில், ஒரு மனுவின் அங்கீகாரம் என்பது, வீசா ஒன்றை வழங்கி விடுவதற்கு உத்திரவாதமளிப்பதில்லை என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்.

வீசா விவரக்குறிப்புகள் மற்றும் கல்வித் தகுதிகள்

H-1B (பிரத்தியேகத் தொழில்)

முன்னமே ஏற்பாடு செய்துள்ள தொழில் முறையிலான வேலையில் சேவைகளைச் செய்து முடிப்பதற்காக நீங்கள் அமெரிக்காவிற்கு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு H-1B வீசா அவசியமாகிறது. அதற்குத் தகுதியடைவதற்கு, நீங்கள் நீங்கள் வேலை செய்ய நாடுகிற அக்குறிப்பிட்ட தனிச்சிறப்புத் துறையில் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது அதைவிட அதிகமான பட்டப்படிப்பை (அல்லது அதற்குச் சமமான பட்டப்படிப்பைப்) படித்திருக்க வேண்டும். உங்களது வேலைவாய்ப்பு ஒரு தனிச்சிறப்புத் தொழிலாக அமைகிறதா என்பதையும், அச்சேவைகளைச் செய்வதற்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதையும் USCIS தீர்மானிக்கும். உங்களைப் பணியமர்த்தும் நிறுவனம் உங்களோடு செய்துள்ள வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தொழிலாளர் துறையில் ஒரு தொழிலாளர் நிபந்தனை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

H-1B1 உடன்படிக்கை சார்ந்த தற்காலிக வேலை விசாக்கள்

சிலி மற்றும் சிங்கப்பூர் உடன் கையெழுத்திடப்பட்ட இலவச வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்க சில சூழ்நிலைகளில் சிலி மற்றும் சிங்கப்பூர் குடிமக்கள் தற்காலிகமாக அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சிலி மற்றும் சிங்கப்பூர் குடிமக்கள் மட்டுமே முக்கிய விண்ணப்பதாரராக விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றாலும்,அவர்களின் வாழ்க்கை துணைவர்கள் மற்றும் குழந்தைகள் மற்ற நாடுகளின் பிரஜைகளாக இருக்கலாம்.

H-1B1 விசா விண்ணப்பதாரர்கள், அமெரிக்காவில் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை பகுதியில் ஏற்கனவே ஒரு முதலாளியிடம் இருந்து ஒரு வேலை வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும்,ஆனால் முதலாளி படிவம் I-129, குடிவரவாளர் அல்லாத பணியாளருக்கான மனு தாக்கல் செய்ய வேண்டிய தேவையில்லை,மற்றும் விண்ணப்பதாரர் விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் படிவம் I-797 ஒப்புதல்  அறிவிப்பு பெற வேண்டிய அவசியம் இல்லை.எனினும், மனுதாரர் விசா விண்ணப்பிக்கும் முன்னதாக தொழிலாளர் துறையில் வெளிநாட்டு தொழிலாளர் சான்றளித்தல்களுக்கான விண்ணப்பத்தை  தாக்கல் செய்ய பட வேண்டும். H-1B1 விசா பற்றிய மேலும் தகவலுக்கு, https://travel.state.gov/content/travel/en/us-visas/employment/temporary-worker-visas.html பிரவேசிக்கவும்.

H-2A (காலாந்திர விவசாய வேலையாட்கள்)

H-2A வீசா என்பது அமெரிக்கப் பணியாளர்கள் செய்யக் கிடைக்காத தற்காலிக விவசாய வேலைகளைச் செய்வதற்காக அந்நிய நாட்டவர்களை அமெரிக்காவிற்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கப் பணியமர்த்தும் நிறுவனத்திற்கு வழிவகை செய்கிறது. ஒரு H-2A குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா வகைப்பாடு என்பது நீங்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவில் ஒரு தற்காலிக அல்லது காலாந்திரத் தன்மையுள்ள விவசாய வேலை அல்லது சேவைகளைச் செய்வதற்கு நாடுகிறீர்கள் என்றால் உங்களுக்குப் பொருந்துகிறது. உங்கள் சார்பாக, குடிவரவாளர் அல்லாத பணியாளருக்கான படிவம் I-129, மனுவை ஒரு அமெரிக்கப் பணியமர்த்தும் நிறுவனம் (அல்லது ஒரு கூட்டுப் பணியமர்த்தும் நிறுவனமாகப் பெயரிடப்பட்ட அமெரிக்க விவசாயப் பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம்) தாக்கல் செய்தாக வேண்டும்.

H-2B வீசா (திறமையான மற்றும் திறமையிலாத பணியாளர்கள்)

இந்த வீசா, தன்மையில் தற்காலிகமானதாக அல்லது காலாந்திரமானதாக இருக்கிறதோர் வேலையைச் செய்து முடிப்பதற்காகவே நீங்கள் அமெரிக்காவிற்கு வருகிறீர்கள் என்றாலும், அவ்வேலையைச் செய்வதற்கு அமெரிக்க வேலையாட்கள் கிடைக்கவில்லை என்றிருக்கும் போதுமே உங்களுக்கு அவசியமாகிறது. உங்களது மனு எந்த வேலையின் அடிப்படையில் இருக்கிறதோ அவ்வகை வேலையைச் செய்வதற்குத் தகுதியுள்ள அமெரிக்கப் பணியாளர்கள் யாருமில்லை என்பதை உறுதி செய்கிற தொழிலாளர் துறை சான்றை, உங்களைப் பணியமர்த்தும் நிறுவனம் பெற வேண்டியுள்ளது.

H-3 (பயிற்சி பெறுபவர்)

ஒரு H-3 வீசா என்பது, பட்டப்படிப்புக் கல்வி அல்லது பயிற்சி தவிர்த்து, இரண்டு ஆண்டுகள் வரையிலானதோர் காலத்திற்கு, எதிர்கால முயற்சியின் எந்தத் துறையிலும் பணியமர்த்தும் ஒரு நிறுவனத்திடம் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவிற்கு வருகிறீர்கள் என்றால் அவசியமாகிறது. உங்களது பயிற்சிக்காக உங்களுக்கு ஊதியம் கொடுக்கப்படலாம் மேலும் “நேரடிப் பயிற்சிகள்” அங்கீகரிக்கப்படுகின்றன. பயிற்சியை ஆக்கத்திறனுள்ள வேலைவாய்ப்பை வழங்குவதற்காக உபயோகிக்க முடியாது மேலும் அதனை உங்கள் சொந்த நாட்டில் கிடைக்கச் செய்ய முடியாது.

H-4 (சார்ந்திருப்பவர்கள்)

நீங்கள் செல்லுபடியாகிற H வீசாவை வைத்திருக்கும் முதன்மையானவர் என்றால், உங்களது வாழ்க்கைத் துணை அல்லது திருமணமாகாத குழந்தைகள் (21 வயதிற்குக் கீழானவர்கள்) அமெரிக்காவில் உங்களோடு சேர்ந்திருப்பதற்கு H-4 வீசாவைப் பெற்றுக் கொள்ளலாம். ஆயினும், அமெரிக்காவில் இருக்கும் வேளையில் உங்களது வாழ்க்கைத் துணை/குழந்தைகள் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

L-1 நிறுவனத்திற்குள்ளேயான பணி மாற்றம் பெற்றவர்கள்)

நீங்கள் ஒரு சர்வதேச நிறுவனத்தின் பணியாளராக இருந்து, அந்நிறுவனம் அமெரிக்காவில் உள்ள அதே நிறுவனத்தின் தலைமைக் கிளைக்கு, இணைப்பு நிறுவனத்திற்கு அல்லது துணை நிறுவனத்திற்கு உங்களைத் தற்காலிகமாகப் பணிமாறம் செய்கிறது என்றால் உங்களுக்கு ஒரு L-1 வீசா தேவைப்படுகிறது. அந்த சர்வதேச நிறுவனம் ஒரு அமெரிக்க நிறுவனமாகவோ அல்லது அயல்நாட்டு நிறுவனமாகவோ இருக்கலாம். ஒரு L-1 வீசாவிற்குத் தகுதியடைய வேண்டுமானால், நீங்கள் ஒரு மேலாண்மை அல்லது நிர்வாக அளவில் பணியாற்றுகிறவராக இருந்தாக வேண்டும், அல்லது உங்களுக்குப் பிரத்தியேகமான அறிவு இருந்தாக வேண்டும் மேலும் நீங்கள் அந்த அமெரிக்க நிறுவனத்திற்குள்ளேயே இத்தகைய அளவுகளில் ஒரு பதவிக்கு, அது முன்பே நீங்கள் வகித்த அதே பதவியாக இருக்க வேண்டியதில்லை என்கிற போதிலும், அதற்கு நியமிக்கப்பட்டவராக இருந்தாக வேண்டும். கூடுதலாக, அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்சென்ற மூன்று ஆண்டு காலத்திற்குள் தொடர்ச்சியான ஒரு ஆண்டிற்கு அந்த சர்வதேச நிறுவனத்தில் அமெரிக்காவிற்கு வெளியே வேலை பார்த்திருந்தாக வேண்டும். ஒரு “பிளாங்கெட்” அடிப்படையிலோ அல்லது தனிநபர் அடிப்படையிலோ, USCIS-யில் இருந்து அங்கீகரிக்கப்பட்டதோர் மனுவை உங்கள் அமெரிக்க நிறுவனம் அல்லது துணை நிறுவனம் பெற்றிருக்கிறதற்குப் பிறகு மட்டுமே நீங்கள் L-1 வீசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

L-2 (சார்ந்திருப்பவர்கள்)

நீங்கள் செல்லுபடியாகிற L வீசாவை வைத்திருக்கும் முதன்மையானவர் என்றால், உங்களது வாழ்க்கைத் துணை அல்லது திருமணமாகாத குழந்தைகள் (21 வயதிற்குக் கீழானவர்கள்) இந்த வருவிப்பு வீசாவைப் பெற்றுக் கொள்ளலாம். சட்டத்தில் சமீபத்தில் செய்துள்ள மாற்றம் காரணமாக, உங்களது வாழ்க்கைத் துணை வேலைவாய்ப்பு அங்கீகாரத்தை நாடலாம். உங்கள் இல்லத் துணைவர் தனது சொந்த L-2 வீசாவில் தான் அமெரிக்காவிற்குள் நுழைந்தாக வேண்டும் மேலும் அதன் பிறகு பூர்த்தி செய்த Form I-765 படிவத்தை, ஒரு விண்ணப்பக் கட்டணத்தோடு சேர்த்து, சமர்ப்பித்தாக வேண்டும் (USCIS-இல் இருந்து வாங்கக் கூடியது). உங்களது குழந்தைகள் அமெரிக்காவில் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

O

O வகுப்பு வீசாக்கள், விஞ்ஞானம், கலை, கல்வி, வியாபாரம், தடகளம் ஆகிய துறைகளில் அசாதாரணத் திறனுள்ளவர்களுக்கு, அல்லது நகரும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் அசாதாரண சாதனை படைத்தவர்களுக்கும், அவர்களது தனிப்பட்ட உதவியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

P (கலைஞர்கள் & பொழுது போக்கு தருபவர்கள்)

P வகுப்பு வீசாக்கள், அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த வருகிற ஒருசில தடகள வீரர்கள், பொழுதுபோக்கு தருபவர்கள், கலைஞர்கள் மற்றும் அத்தியாவசியா ஆதரவு நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

Q

நீங்கள் செயல்முறைப் பயிற்சி, வேலைவாய்ப்பு வழங்குவதற்கும், உங்கள் சொந்த நாட்டின் வரலாறு, கலாச்சாரம், மற்றும் பாரம்பரியத்தைப் பகிர்வதற்குமான நோக்கத்திற்கானதோர் சர்வதேசக் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்குப் பயணிக்கிறீர்கள் என்றால் அதற்கு ஒரு Q வீசா அவசியமாகிறது. அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் உங்கள் சார்பாக ஒரு மனு தாக்கல் செய்தாக வேண்டும் மேலும் அந்த மனுவை USCIS அங்கீகரித்தாக வேண்டும்.

எப்போது விண்ணப்பிப்பது

உங்கள் I-797-இல் குறித்துள்ளபடி வேலைவாய்ப்பு அந்தஸ்து ஆரம்பிப்பதற்கு முன்வருகிற 90 நாட்கள் வரை, அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் உங்கள் H, L, O, P அல்லது Q வீசா விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆயினும், உங்கள் பயணத் திட்டங்களை ஏற்பாடு செய்யும் போது, மத்திய ஒழுங்குமுறைகளின் காரணமாக, உங்கள் I-797-இல் குறித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட அந்தஸ்து காலம் ஆரம்பிப்பதற்கு முன்வருகிற பத்து நாட்களில் ஆரம்பித்தே அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் அந்த வீசாவை உபயோகிக்க முடியும் என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்.

விண்ணப்ப உருப்படிகள்

நீங்கள் H, L, O, P, அல்லது Q வீசாவிற்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பின்வருவனவற்றைச் சமர்ப்பித்தாக வேண்டும்:

 • ஒரு குடிவரவாளர் அல்லாதோர் வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவம் DS-160 குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு DS-160 இணையபக்கத்திற்குச் சென்று பாருங்கள்.
 • அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்.
 • கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த ஒரு (1) 2”x2” (5செமீx5செமீ) புகைப்படம். இந்த இணைய பக்கத்தில், தேவையான புகைப்பட வடிவமைப்பு குறித்த தகவல்கள் உள்ளன.
 • உங்கள் நாட்டு நாணயத்தில் செலுத்திய, உங்கள் US$190 திருப்பித் தரமுடியாத குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்ப நடவடிக்கைக் கட்டணத்தை செலுத்தியதைக் காண்பிக்கிறதோர் இரசீது. இந்த இணைய பக்கத்தில், இந்தக் கட்டணத்தைச் செலுத்துவது குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன. ஒரு வீசா வழங்கப்பட்டு விடுகிற பட்சத்தில், உங்கள் நாட்டினத்தைப் பொருத்து, கூடுதலாக ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணம் இருக்கலாம். அயலுறவுத் துறையின் இணையதளம், நீங்கள் ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்பதையும் அந்தக் கட்டணத் தொகை எவ்வளவு என்பதையும் காண உதவலாம்.
 • நீங்கள் ஒரு பிளாங்கெட் மனுவில் உள்ளதோர் L-1 வீசா விண்ணப்பதாரராக இருந்தால், நீங்கள் ஒரு மோசடித் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புக் கட்டணத்தை (இந்தக் கட்டணம் குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் இங்கே) செலுத்தியாக வேண்டும்.
 • இந்த இரசீது எண் உங்கள் அங்கீகரித்த I-129 மனுவின் மீது அச்சிடப்பட்டுள்ளது. I-797 என்ற காகித பிரதிகள் நேர்முக பேட்டியில் அவசியம் இல்லை.

இத்தகைய உருப்படிகளுக்குக் கூடுதலாக, நீங்கள் இந்தச் சேவை வாயிலாகத் தான் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்தீர்கள் என்பதை உறுதி செய்கிற நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதம் ஒன்றை நீங்கள் காண்பித்தாக வேண்டும். துணைத் தூதரக அலுவலருக்கு வழங்கியுள்ள தகவல்களை ஆதரிப்பதாக நீங்கள் நம்புகிற ஆதார ஆவணங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் நீங்கள் கொண்டு வரலாம்.

விண்ணப்பிப்பது எப்படி

படி 1

குடிவரவாளர் அல்லாத வீசா மி‎ன்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

படி 2

வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

படி 3

இந்த இணைய பக்கத்தில் உங்கள் நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுங்கள். உங்களுக்கான நேர்காணல் நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்வரும் தகவல்கள் தேவைப்படும்:

 • உங்கள் கடவுச்சொல் எண்
 • (இந்த எண்ணைக் காண்பதில் உங்களுக்கு உதவி தேவை என்றால் இங்கே சுட்டுக.)
 • உங்கள் படிவ உறுதிப்படுத்தல் பக்கத்திலிருந்து கிடைக்கிற பத்து (10) இலக்க பட்டைக் குறியீட்டு எண்
படி 4

உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். உங்களது நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதத்தின் அச்சிட்ட நகல் ஒன்றையும், DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கத்தையும், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும், உங்களது தற்போதைய கடவுச்சீட்டு மற்றும் அனைத்து பழைய கடவுச் சீட்டுகளையும் நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். இத்தகைய உருப்படிகள் அனைத்தும் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

ஆதார ஆவணங்கள்

இத்தகைய உருப்படிகளுக்குக் கூடுதலாக, நீங்கள் இந்தச் சேவை வாயிலாகத் தான் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்தீர்கள் என்பதை உறுதி செய்கிற நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதம் ஒன்றை நீங்கள் காண்பித்தாக வேண்டும். துணைத் தூதரக அலுவலருக்கு வழங்கியுள்ள தகவல்களை ஆதரிப்பதாக நீங்கள் நம்புகிற ஆதார ஆவணங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் நீங்கள் கொண்டு வரலாம்.

எச்சரிக்கை: பொய்யான ஆவணங்களை அளிக்காதீர்கள். மோசடியான அல்லது தவறான ஆவணங்களைக் கொடுப்பது, நிரந்தரமாகவே வீசாவிற்குத் தகுதியடையாமற் போய் விடுவதில் போய் முடிந்து விடலாம். இரகசிதன்மை குறித்துக் கவலையடைகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் ஆவணங்களை முத்திரையிட்ட உறையில் போட்டு அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வேறு எவருக்கும் உங்கள் தகவல்களைக் கிடைக்கச் செய்யாது மேலும் உங்கள் தகவல்களின் இரகசியத்தன்மையை மதித்து நடக்கும்.

துணைத் தூதரக அதிகாரிகள் ஓவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பார்வையிட்டு, வீசா கொடுப்பது குறித்து முடிவெடுக்கும் போது தொழில் ரீதியிலான, சமூக, கலாச்சார மற்றும் மற்ற காரணிகளையும் பரிசீலிப்பார்கள். துணைத் தூதரக அதிகாரிகள் உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களையும், குடும்பச் சூழ்நிலையையும், உங்கள் நீண்ட-காலத் திட்டங்களையும், நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள எதிர்நோக்குகளையும் பார்வையிடலாம். ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பரிசீலனையும் கொடுக்கப்படுகிறது.

நீங்கள் முதன் முறையாக வீசாவிற்கு விண்ணப்பிப்பவராக இருந்தால், உங்கள் நேர்காணலுக்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வருவதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.

 • உங்கள் வேலைத் தகுதிகளை நிலைநாட்டுகிற தடயம், பல்கலைக்கழக பட்டயங்கள் உட்பட.
 • வகித்த பதவி, நீங்கள் பணியாற்றிய திட்டங்கள், உங்களைப் பணியமர்த்திய நிறுவனத்தில் நீங்கள் எவ்வளவு காலத்திற்குப் பணியாற்றினீர்கள் என்பதை விவரித்து தற்போதைய மற்றும் முந்தைய பணியமர்த்திய நிறுவனங்களிடமிருந்து பெற்ற அசல் கடிதங்கள்.
 • நீங்கள் தற்போது பணியாற்றிக் கொண்டிருந்து, H-1B அந்தஸ்துள்ள வீசாவை வைத்திருக்கிறீர்கள் என்றால், தயவுசெய்து இந்த நாட்காட்டி ஆண்டிற்கான உங்களது சம்பளச் சான்றிதழையும், அமெரிக்காவில் நீங்கள் பணியமர்த்தப்பட்டிருந்த அனைத்து ஆண்டுகளுக்குமான உங்களது மத்திய வரிக் கணக்குகளையும் (IRS படிவம் 1040 மற்றும் W-2) சமர்ப்பியுங்கள். நீங்கள் கொண்டு வர வேண்டியது:
  • நீங்கள் தற்போது பணியாற்றுகிற அல்லது மிகவும் சமீபத்தில் பணியாற்றிய இடத்தில் இருந்து கிடைக்கிற சம்பளச் சான்றிதழ்கள்
  • நீங்கள் தற்போது பணியாற்றுகிற அல்லது முன்னர் பணியாற்றிய இடத்தில் உள்ள தனிப்பட்ட மேலாளர்களின் பெயர்கள் மற்றும் தற்போதைய தொலைபேசி எண்கள்
  • உங்கள் தற்குறிப்பு அல்லது சுய விவரம்

சார்ந்திருப்பவர்கள்

குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா எதற்குமான தேவைப்படுகிற ஆவணங்கள் அனைத்தையும் உங்களைச் சார்ந்திருப்பவர்கள் கொண்டு வர வேண்டும், அதோடு:

 • அசல் திருமண (உங்கள் வாழ்க்கைத் துணைக்கு) மற்றும்/அல்லது பிறப்புச் சான்றிதழ் (21 வயதிற்குக் கீழான திருமணமாகாத குழந்தைகள்) பொருந்துகிறபடி
 • நீங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தி உங்களைப் பணியமர்த்தியுள்ள நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம்
 • உங்களது வாழ்க்கைத் துணை ஒரு H1-B வீசாவில் தற்போது பணியாற்றிக் கொண்டிருந்தால், இந்த நாட்காட்டி ஆண்டிற்கான உங்களது சம்பளச் சான்றிதழ் மற்றும் H-1B வீசாவில் அமெரிக்காவில் அவர் பணியமர்த்தப்பட்டிருந்த அனைத்து ஆண்டுகளுக்குமான அவரது மத்திய வரிக் கணக்குகளையும் (IRS படிவம் 1040 மற்றும் W-2) சமர்ப்பியுங்கள்.

இன்னும் அதிகத் தகவல்கள்

H, L, O, P மற்றும், Q வீசாக்கள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, அயலுறவுத் துறையின் தற்காலிகப் பணியாளர்கள் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.