வீசா ஒன்றுக்கு விண்ணப்பிக்கவும்

இந்தப் பக்கத்தில்:

மேலோட்டம்

நீங்கள் வீசா ஒன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா இல்லையா என்பதை தயவுசெய்து உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களிடம் ஏற்கெனவே ஒரு செல்லுபடியாகிற அமெரிக்க வீசா இருக்கிற பட்சத்தில் அல்லது நீங்கள் வீசா தள்ளுபடித் திட்டத்தில் பங்கேற்கிற நாட்டைச் சேர்ந்தவராக இருக்கிற பட்சத்தில் நீங்கள் ஒரு புதிய அமெரிக்க வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லாமல் இருக்கலாம்.

குடிவரவாளர் அல்லாதோருக்கானதோர் வீசாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டியிருந்தால், தயவுசெய்து கீழுள்ள படிகளைப் பின்பற்றுங்கள்.

விண்ணப்பிப்பது எப்படி

படி 1

குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்பதாரர்களுக்கு:

பொதுவான குடிவரவாளர் அல்லாதோர் வீசாக்கள் என்பதைப் படிப்பதன் மூலம் உங்கள் வீசா வகையைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வீசா வகையும், அதற்கான தகுதிகளையும், விண்ணப்ப உருப்படிகளையும் விளக்கிச் சொல்கிறது. உங்களது சூழ்நிலைக்குப் பொருந்துகிற வீசா வகையையே தேர்ந்தெடுங்கள்.

வீசா தள்ளுபடித் திட்டத்தைப் படித்துப் பார்ப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் நாடு வீசா தள்ளுபடித் திட்டத்தில் பங்கேற்கிறது என்றால், நீங்கள் வியாபாரத்திற்காகவோ அல்லது உல்லாசத்திற்காகவோ பயணம் செய்கிறீர்கள் மேலும் நீங்கள் அமெரிக்காவில் 90 நாட்கள் அல்லது அதைவிடக் குறைவான காலத்திற்கே தங்கியிருப்பீர்கள் என்றால் நீங்கள் வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

படி 2

அடுத்த படி என்பது DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்வதாகும். DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களைக் கவனமாகப் படிக்கப் பாருங்கள். அனைத்துத் தகவல்களும் சரியானவையாகவும், துல்லியமானவையாகவும் இருந்தாக வேண்டும். படிவத்தைச் சமர்ப்பித்ததும், நீங்கள் மாற்றம் எதையும் செய்ய முடியாது. உங்களுக்கு உதவி தேவை என்றால், தயவுசெய்து ஒரு குடிவரவு வழக்கறிஞர் அல்லது மொழிபெயர்ப்பாளரிடம் ஆலோசனை பெறுங்கள். அழைப்பு மையத்தினரால் உங்கள் DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்ய உதவ முடியாது. உங்களுக்கான நேரத்தைக் குறித்துக் கொள்வதற்கு உங்களது DS-160 படிவ எண் உங்களுக்குத் தேவைப்படும்.

படி 3

சரியான வீசா வகையை நீங்கள் தீர்மானித்து, DS-160 படிவத்தைப் பூர்த்தி செய்ததும், நீங்கள் வீசா கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். வீசா கட்டணப் பக்கம், வீசா வகைகளையும், அதற்கேற்ற வீசா கட்டணங்களை அமெரிக்க டாலர்களிலும், அந்தந்த நாட்டு நாணயங்களிலும் பட்டியலிடுகிறது.

உங்கள் வீசா கட்டனத்தைச் செலுத்த, வங்கி மற்றும் பணம் செலுத்தும் வழிவகைகள் பக்கத்தைப் படித்துப் பாருங்கள். இந்தப் பக்கம், உங்கள் வீசா கட்டணத்தை எவ்விதம் செலுத்துவது என்பதை விளக்கிச் சொல்கிறது. நீங்கள் ஒரு சுயவிவரத்தை உருவாக்குவீர்கள் மேலும் உங்கள் வீசா நேர்காணலுக்கான நேரத்தைக் குறித்துக் கொள்வதற்கு உங்கள் இரசீது எண்ணை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 4

இப்போது உங்கள் வீசா கட்டனத்தைச் செலுத்த உபயோகித்த அதே தகவல்களைக் கொண்டே நீங்கள் உங்கள் சுயவிவரத்திற்குள் புகுபதிகை செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் அந்த அமைப்பிற்குள் சென்றதும், நீங்கள் ஒரு முகப்புப்பெட்டியைப் பார்ப்பீர்கள்.

இடது-கைப் பக்கத்தில் உள்ள மெனுவில் நேரம் குறிப்பதைத் திட்டமிடுக என்பதன் மீது சுட்டுக.

இது உங்கள் நேர்காணலுக்கான நேரம் குறிப்பதைத் திட்டமிடுவதற்கான நடைமுறையைத் துவக்கும். உங்களுக்குத் தேவைப்படுபவை:

  • உங்கள் கடவுச்சீட்டுஎண்.
  • உங்கள் வீசாக் கட்டண இரசீதில் உள்ள இரசீது எண். இந்த எண்ணைக் காண்பதில் உங்களுக்கு உதவி தேவை என்றால் இங்கே சுட்டுக.
  • உங்கள் DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கத்திலிருந்து கிடைக்கிற பத்து (10) இலக்க பட்டைக் குறியீட்டு எண்.

அந்நடைமுறை வழியாக நீங்கள் செல்கையில், உங்களால் உங்கள் வீசா வகையைத் தேர்ந்தெடுத்து, தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்து, உங்களைச் சார்ந்துள்ளவர்களைச் சேர்த்து, உங்கள் ஆவணத்தைக் கொடுப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து, வீசாவிற்குப் பணம் செலுத்துவதை உறுதி செய்து, உங்கள் நேர்காணலுக்கான நேரத்தைத் திட்டமிட இயலும்.

படி 5

உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். உங்களது நேர்காணலுக்கான நேரம் குறிப்பதற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய ஆவணங்களைத் தெரிந்து கொள்ள எனது நேர்காணல் நேரக்குறிப்பைத் திட்டமிடுக என்ற பக்கத்தைப் பார்த்து உறுதி செய்யுங்கள்.

படி 6

உங்களது வீசா அங்கீகரிக்கப்படுகிற பட்சத்தில், தூதரகத்தில் வந்து பெற்றுக் கொள்வதற்கு உங்கள் வீசா தயாராக இருக்கும்.