வீசா கட்டணங்கள்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா ஒன்றை விண்ணப்பிப்பதற்கு முன்பாக, குழந்தைகள் உள்ளிட்ட வீசா விண்ணப்பதாரர்கள் திருப்பித் தரமுடியாத, மற்றவர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியாத வீசா விண்ணப்பக் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டியுள்ளது, இது சில நேரங்களில் MRV கட்டணம் என்று குறிப்பிடப்படுகிறது. வீசா கொடுக்கப்படுகிறதோ இல்லையோ, ஆனால் வீசா விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும். நீங்கள் எந்த வீசாவிற்கு விண்ணப்பிக்கிறீர்களோ அது தான் வீசாக் கட்டணத்தைத் தீர்மாணிக்கிறது. உங்கள் குடியுரிமை வகை மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் வீசா வகை ஆகியவற்றைப் பொருத்து, நீங்கள் வீசா வழங்கல் கட்டணம் அல்லது "பிரதிச்சலுகைக்" கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டியிருக்கலாம். இந்த இணையபக்கம், ஒவ்வொரு குடிவரவாளர் அல்லாதோர் வீசா வகையோடும் தொடர்புடைய வீசா விண்ணப்பக் கட்டணங்களைப் பட்டியலிடுகிறது.

குடிவரவாளர் அல்லாதோர் வீசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்கள் மட்டுமே இங்கே பட்டியலிடப்படுகின்றன என்பதைத் தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்.

கட்டண செலுத்துவதற்கான வழிவகைகள்

யு.எஸ். டாலர்களில் கட்டணம் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இலங்கையில் வசிப்பவர்கள் இலங்கையில் உள்ள எந்த DFCC வங்கி இடத்திலும் கட்டணம் செலுத்தலாம். கட்டண விருப்பங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் இங்கே. DFCC கிளையை கண்டுபிடிக்க, இங்கே கிளிக் செய்க. இராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மாலத்தீவில் வசிப்பவர்கள் இலங்கை வங்கியில் வரையப்பட்ட ரூபாயில் உள்ள வங்கி வரைவு மூலம் "UNITED STATES DISBURSING OFFICER, SYMBOL 8768" க்கு கட்டணம் செலுத்தலாம். அமெரிக்க டாலர் வங்கி வரைவுகளில் செய்யப்பட்ட விசா கட்டண கொடுப்பனவுகள் அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் வரையப்பட வேண்டும் (அமெரிக்காவிற்கு வெளியே உள்ள வங்கிகளில் வரையப்பட்ட அமெரிக்க டாலர் வங்கி வரைவுகள் ஏற்றுக்கொள்ளப்படாது). மாலத்தீவில் இருந்து வசிப்பவர்கள் குடியேற்றமற்ற விசா நியமனங்களை இந்த இணையதளத்தில் வங்கி ரசீது இல்லாமல் திட்டமிட முடியும்.

கட்டுப்பாடுகள்

உங்கள் வீசா விண்ணப்பம் திரும்பத் தரக்கூடியதல்ல மேலும் இதனை இன்னொரு நபருக்கு மாற்றிக் கொள்ள முடியாது. விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு நீங்கள் ஒரு இரசீதைப் பெற்றுக் கொள்வீர்கள்.அக்டோபர் 1, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு செய்யப்படும் அனைத்து  குடி பெயராதவர்கான விசா விண்ணப்பக் கட்டணமும் (MRV கட்டணம் என்றும் அழைக்கப்படுகிறது) MRV கட்டணத்தைச் செலுத்துவதற்கான ரசீது வழங்கப்பட்ட நாளிலிருந்து 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் இந்த 365 நாள் காலத்தில் நேர்காணல் சந்திப்பைத் திட்டமிட வேண்டும் அல்லது நேர்காணல் தள்ளுபடி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நேர்காணலை மட்டுமே திட்டமிட வேண்டும் அல்லது 365-நாள் காலத்திற்குள் தங்கள் தள்ளுபடி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். நேர்காணல் 365-நாள் காலப்பகுதியில் நிகழ வேண்டும் என்ற தேவை இல்லை. அக்டோபர் 1, 2022 க்கு முன் வழங்கப்பட்ட MRV கட்டணத்திற்கான அனைத்து ரசீதுகளும் செப்டம்பர் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த தேதி வரை செல்லுபடியாகும்.

வீசா வகைகள் மற்றும் விண்ணப்பக் கட்டணத் தொகைகள்

வீசா விண்ணப்பக் கட்டணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன மேலும் இவை ஒரு வீசா விண்ணப்பத்திற்கு மட்டுமே பொருந்துகிறது. மிகவும் பொதுவான குடிவரவாளர் அல்லாதோர் வீசா வகைகளுக்கான விண்ணப்பக் கட்டணம் US$185 ஆகும். இவற்றில் சுற்றுலாப் பயணி, வர்த்தகர், மாணவர் மற்றும் பரிமாற்ற வீசாக்கள் அடங்குகின்றன. வேலை மற்றும் மத ரீதியிலான வீசாக்கள் போன்ற பெரும்பாலான மனு-அடிப்படையிலான வீசாக்களுக்கு US$205 ஆகும். K வீசாக்களுக்கான வீசாக்களுக்கு US$265 தொகையும், E வீசாக்களுக்கு US$315 தொகையும் கட்டணமாக விதிக்கப்படுகிறது. கீழுள்ள அட்டவணைகள், வீசா வகைகள் மற்றும் அவற்றுக்கான கட்டணத் தொகைகள் குறித்ததோர் விரிவான பட்டியலை வழங்குகிறது.

வீசா வகைகள் மற்றும் விண்ணப்பக் கட்டணத் தொகைகள் - கட்டண வகுப்பு வாரியாக அடுக்கப்படுகிறது
கட்டணத் தொகை (USD$) கட்டணத் தொகை (LKR) வீசா வகை விவரக்குறிப்பு
$185 N/A B வியாபாரம்/சுற்றுலா
$185 N/A C-1 பயண இடைநிலை
$185 N/A D கப்பல் / விமானப் பணியாளர்
$185 N/A F மாணவர் (கல்வி)
$185 N/A I பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகம்
$185 N/A J பரிமாற்ற வருகையாளர்கள்
$185 N/A M மாணவர் (தொழிற் கல்வி)
$185 N/A T ஆட்கடத்தலில் சிக்கிக் கொண்டவர்கள்
$185 N/A TN/TD NAFTA தொழில் நிபுணர்கள்
$185 N/A U குற்றவியல் செயல்பாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள்
$205 N/A H தற்காலிக / காலநிலைப் பணியாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி பெறுபவர்கள்
$205 N/A L நிறுவனத்தினுள் பணிமாற்றம் பெறுபவர்கள்
$205 N/A O அசாதாரணத் திறனுள்ள நபர்கள்
$205 N/A P தடகள விளையாட்டு வீரர்கள். கலைஞர்கள் & பொழுது போக்கு தருபவர்கள்
$205 N/A Q சர்வதேசக் கலாச்சாரப் பரிமாற்றம்
$205 N/A R மதப் பணியாளர்
$265 N/A K அமெரிக்க குடியுரிமை பெற்றவரைத் திருமண நிச்சயம் செய்துள்ளவர் அல்லது அவரது இல்வாழ்க்கைத் துணை
$315 N/A E உடன்பாட்டு வர்த்தகர் / முதலீட்டாளர், ஆஸ்திரேலிய சிறப்புத் தொழில் நிபுணர்
வீசா வகைகள் மற்றும் விண்ணப்பக் கட்டணத் தொகைகள் - வீசா வகை வாரியாக அடுக்கப்படுகிறது
வீசா வகை விவரக்குறிப்பு கட்டணத் தொகை (USD$) கட்டணத் தொகை (LKR)
B வியாபாரம்/சுற்றுலா $185 N/A
C-1 பயண இடைநிலை $185 N/A
D கப்பல் / விமானப் பணியாளர் $185 N/A
E உடன்பாட்டு வர்த்தகர் / முதலீட்டாளர், ஆஸ்திரேலிய சிறப்புத் தொழில் நிபுணர் $315 N/A
F மாணவர் (கல்வி) $185 N/A
H தற்காலிக / காலநிலைப் பணியாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி பெறுபவர்கள் $205 N/A
I பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகம் $185 N/A
J பரிமாற்ற வருகையாளர் $185 N/A
K அமெரிக்க குடியுரிமை பெற்றவரைத் திருமண நிச்சயம் செய்துள்ளவர் அல்லது அவரது இல்வாழ்க்கைத் துணை $265 N/A
L நிறுவனத்தினுள் பணிமாற்றம் பெறுபவர்கள் $205 N/A
M மாணவர் (தொழிற் கல்வி) $185 N/A
O அசாதாரணத் திறனுள்ள நபர்கள் $205 N/A
P தடகள விளையாட்டு வீரர்கள். கலைஞர்கள் & பொழுது போக்கு தருபவர்கள் $205 N/A
Q சர்வதேசக் கலாச்சாரப் பரிமாற்றம் $205 N/A
R மதப் பணியாளர் $205 N/A
T ஆட்கடத்தலில் சிக்கிக் கொண்டவர்கள் $185 N/A
U குற்றவியல் செயல்பாடுகளில் சிக்கிக் கொண்டவர்கள் $185 N/A
TN/TD NAFTA தொழில் நிபுணர்கள் $185 N/A

கட்டணம் அவசியமில்லாத வீசா வகைகள் மற்றும் அவற்றுக்கான நிபந்தனைகள்

  • A, G, C-2, C-3, NATO மற்றும் தூதரகப் பணி வீசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள் (22 CFR 41.26-ல் விவரித்துள்ளபடி);
  • J வீசாக்களை வைத்திருந்து, ஒருசில அலுவலகப் பூர்வமான அமெரிக்க அரசாங்கம் நிதியுதவியளிக்கிற கல்வி மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்கிற விண்ணப்பதாரர்கள்;
  • அசல் வீசா முறையாக ஒட்டப்படாமல் இருக்கும் போது அல்லது விண்ணப்பதாரரின் பால் தவறேதும் இல்லாமல் இருந்து வீசாவை மறுபடியும் வழங்க வேண்டியுள்ள போது, வீசா வழங்கியதிலிருந்து ஒரு ஆண்டிற்குள் எந்திரம்-படித்துணரக்கூடியதோர் வீசாவாக மாற்றுகிறவர்கள்;
  • ஐக்கிய நாடுகளின் பொதுப் பேரவை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையத்திற்கான கண்காணிப்புப் பணியில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட சர்வதேச ஒப்பந்தங்களினால் விதிவிலக்குப் பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்தம் நேரடிக் குடும்பத்தினர்;
  • ஒருசில கருணை அடிப்படையிலான சேவைகளை வழங்குவதற்காகப் பயணிக்கிற விண்ணப்பதாரர்கள்;
  • அலுவலகப் பூர்வமான வேலையாகப் பயணம் செய்கிற அமெரிக்க அரசாங்கப் பணியாளர்கள்; மற்றும்,
  • பணியிலிருக்கும் போது கொலை செய்யப்பட்டதோர் அமெரிக்க அரசாங்கப் பணியாளரின் உடல் தகனத்தில் மற்றும்/அல்லது உடல் அடக்கத்தில் கலந்து கொள்வதற்காகப் பயணிக்கிற அப்பணியாளரின் பெற்றோர், உடன் பிறந்தோர், இல்வாழ்க்கைத் துணை அல்லது குழந்தை; அல்லது பணியிலிருக்கும் போது மிகக் கடுமையாகக் காயமடைந்ததோர் அமெரிக்கப் பணியாளரின் அவசர சிகிச்சை மற்றும் உடல் தேறிவரும் காலத்தின் போது அவரைப் பார்ப்பதற்காக பயணம் செய்கிற அவரது பெற்றோர், உடன்பிறந்தோர், இல்வாழ்க்கைத் துணை, மகன் அல்லது மகள்.

மற்ற கட்டணங்கள்

சில நிலைகளில், தேசிய வீசா மையத்திற்கு, அமெரிக்கத் தூதரகத்திற்கு அல்லது துணைத் தூதரகத்திற்கு அல்லது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு நேரடியாகக் கூடுதல் வீசாக் கட்டணங்கள் செலுத்தப்படுகின்றன.

குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா வழங்குதல் (“பிரதிச்சலுகை”) கட்டணம்

ஒருசில நாடுகளிலிருந்து வருகிற விண்ணப்பதாரர்களது விண்ணப்பத்தை அங்கீகரித்த பிறகு அவர்கள் வீசா வழங்கல் கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டியிருக்கலாம். இக்கட்டணங்கள் “பிரதிச்சலுகை” அடிப்படையிலானவையாகும் (இதே போன்றதோர் வீசா வகைக்கு அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒருவருக்கு மற்றொரு நாடு எவ்வளவு விதிக்கிறதோ அவ்வளவு). கூடுமான போதெல்லாம் வீசா வழங்கல் கட்டணத்தைக் குறைப்பதற்கு அமெரிக்கா கடுமுயற்சி எடுத்துக் கொள்கிறது, ஆயினும் ஒரு அயல்நாட்டு அரசாங்கம் ஒருசில வீசா வகைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள் மீது இவ்விதக் கட்டணங்களை விதிக்கும் போது, அதே போன்ற வீசா வகைகளுக்கு அந்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களுக்கு ஒரு “பிரதிக்” கட்டணத்தை அமெரிக்கா விதிக்கும். வீசா வழங்கல் கட்டணம் குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் அமெரிக்காவின் அயலுறவுத் துறை இணையதளத்தில் கிடைக்கின்றன மேலும் அவை உங்கள் நாட்டினத்திற்கு வீசா வழங்கல் கட்டணம் ஒன்று பொருந்துகிறதா என்பதைத் தீர்மானிக்க உதவ முடியும்.

SEVIS கட்டணம்

மாணவர் மற்றும் பரிமாற்ற வருகையாளர் தகவல் அமைப்பு (Student and Exchange Visitor Information System (SEVIS)) என்பது F, M, மற்றும் J வீசா பங்கேற்பாளர்கள் தங்களது ஆரம்பகட்ட ஆவணப்படுத்தலைப் பெற்றுக் கொள்கிற நேரத்திலிருந்து (I-20 அல்லது DS-2019) அவர்கள் பட்டம் பெறுகிற வரை / பாடசாலையை விட்டுச் செல்கிற வரை அல்லது நிகழ்ச்சியை முடிக்கும் வரை / அதனை விட்டுச் செல்லும் வரை அவர்களது நிலையைத் தொடர்ந்து தெரிந்து வைத்துக் கொள்கிறதோர் இணைய-அடிப்படையிலான அமைப்பாகும்.

F, M மற்றும் J விசா முதன்மை விண்ணப்பதாரர்கள்: உங்கள் தகவல் SEVIS இல் உள்ளிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் யு.எஸ் பள்ளியைத் தொடர்புகொள்ளவும். விசா விண்ணப்பக் கட்டணத்துடன் கூடுதலாக நீங்கள் தனி SEVIS கட்டணத்தைச் செலுத்த வேண்டும். படிவம் I-20 உடன் குடியேறாத மாணவர்கள் மற்றும் DS-2019 படிவம் கொண்ட பெரும்பாலான பரிமாற்ற பார்வையாளர்களுக்கு, SEVIS கட்டணத் தொகையை இங்கே காணலாம்.

SEVIS கட்டண விதிவிலக்கு

ஓர் அமெரிக்க அரசாங்கம் நிதியுதவியளிக்கிற திட்டத்தில் பங்கேற்கிற விண்ணப்பதாரர்கள் (G-1, G-2, G-3, G-7 என்ற குறியீடுகளைக் கொண்டு ஆரம்பிக்கிற திட்டங்கள்) SEVIS கட்டணத்தைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

Blanket L Fee (மோசடித் தடுப்புக்கான கட்டணம்)

எல் நிலைக்கான போர்வை மனுவின் கீழ் முதல் முறையாக முதன்மை விண்ணப்பதாரர்கள் மோசடி தடுப்பு மற்றும் கண்டறிதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். நேர்முகத் தேர்வின் நாளில் தூதரகப் பிரிவில் உள்ள காசாளரிடம் இந்தக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். ஒரு புதிய படிவம் I-129Sஐ அடிப்படையாகக் கொண்ட எல்-1 விசா விண்ணப்பம், மோசடி தடுப்பு மற்றும் கண்டறிதல் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்பட வேண்டும்.