வீசா வகைகள்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

பொதுவாக, அமெரிக்க நாட்டிற்குள் நுழைய விரும்புகிற அந்நிய நாட்டுக் குடியுரிமை பெற்ற ஒருவர் முதலில் ஒரு வீசாவைப் பெற்றாக வேண்டும், அது தற்காலிகமாகத் தங்குவதற்கான குடிவரவாளர் அல்லாதோர் வீசாவாகவோ அல்லது நிரந்தரமாக வசிப்பதற்கான குடிவரவாளர் வீசாவாகவோ இருக்கலாம். தகுதிபெற்ற நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள், வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ், வீசா இல்லாமலேயே அமெரிக்காவிற்கு வந்து போக முடியலாம். வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் அமெரிக்க நாட்டிற்கு வருகை தருகிற பயணிகள் அனைவரும், அமெரிக்காவிற்கான பயணத்தைத் ஆரம்பிப்பதற்கு முன்பே பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (ESTA) என்ற அமைப்பின் வாயிலாக அங்கீகாரத்தைப் பெற்றாக வேண்டும்.

வீசா தள்ளுபடித் திட்டத்திற்கு நீங்கள் தகுதியடையவில்லை என்றாலோ அல்லது படிப்பிற்காக, வேலைக்காக, ஒரு பரிமாற்றத் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக அல்லது பயணம் செய்வதற்கான பி வீசா நோக்கத்தின் கீழ் வராத வேறு நோக்கம் எதற்காகவும் நீங்கள் பயணித்து வருகிறீர்கள் என்றாலோ; உங்களுக்கு குடிவரவாளர் அல்லாதோர் வீசா ஒன்று தேவைப்படும்.

வீசா பெறுவது என்பது அமெரிக்காவில் நுழைவதற்கு உத்திரவாதமளிப்பதில்லை. நீங்கள் குறிப்பிட்டதோர் நோக்கத்திற்காக அமெரிக்காவில் நுழைவதற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியடைகிறீர்கள் என்பதாக அமெரிக்கத் தூதரக அலுவலர் ஒருவர் தீர்மானித்திருக்கிறார் என்பதையே ஒரு வீசா சுட்டிக்காட்டுகிறது.

குடிவரவாளர் அல்லாதோர் வீசாக்கள்

குடிவரவாளர் அல்லாதோருக்கானதோர் வீசாவை, குறிப்பிட்ட நோக்கங்களைச் செய்து முடிப்பதற்காக அமெரிக்காவில் குறிப்பிட்டதோர் காலத்திற்குத் தங்க விரும்புகிற சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் அல்லது சிறப்புப் பணியாளர்கள் ஆகியோர் உபயோகிக்கின்றனர். அமெரிக்க வீசா சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, குடிவரவாளர் அல்லாதோர் வீசாவிற்கு விண்ணப்பிக்கிற பெரும்பாலானவர்கள், அவர்கள் வசிக்கிற நாட்டோடு தங்களுக்கு வலுவான பிணைப்புகள் உள்ளன என்பதை நிரூபித்துக் காண்பித்து, தற்காலிகமாக அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த பிறகு அங்கிருந்து வெளியேற எண்ணம் கொண்டுள்ளார்கள் என்பதைக் காண்பித்தாக வேண்டும்.