வீசா தள்ளுபடித் திட்டம்

இந்தப் பக்கத்தில்:


மேலோட்டம்

சுற்றுலா அல்லது வியாபாரத்திற்காக (வருகையாளர் வீசா நோக்கங்களுக்காக) 90 நாட்கள் அல்லது அதைவிடக் குறைவான காலத்திற்கு வீசா பெறாமலேயே தங்குவதற்காக, ஒரு சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குப் பயணித்து வருவதற்கு வீசா தள்ளுபடித் திட்டம் (Visa Waiver Program (VWP)) வழி செய்கிறது. VWP திட்டத்தில் அனைத்து நாடுகளும் பங்கேற்பதில்லை மேலும் VWP திட்ட நாடுகளிலிருந்து வருகிற அனைத்துப் பயணிகளும் இத்திட்டத்தை உபயோகிக்கத் தகுதியடைவதில்லை. VWP திட்டப் பயணிகள், பயண அங்கீகரிப்பிற்கான மின்னணு அமைப்பு (ESTA) வழியாக அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது, மேலும் அவர்கள் அமெரிக்காவில் நுழையும் வாயிலில் தகுதி சோதிக்கப்படுகிறது மேலும் அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் அமெரிக்க-வருகைத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளப்படுகிறார்கள்.

*உறுப்பு நாடுகள்
அயர்லாந்து
அன்டோரா
ஆஸ்திரியா
ஆஸ்திரேலியா
இத்தாலி
எஸ்டோனியா
ஐக்கிய இராச்சியம்
ஐஸ்லாந்து
கிரீஸ்
குரோஷியா
கொரிய குடியரசு
சான் மரினோ
சிங்கப்பூர்
சிலி
சுவிட்சர்லாந்துு
செ குடியரசு
டென்மார்க்
தைவான்
நார்வே
நியூசிலாந்து
நெதர்லாந்து
பிரான்ஸ்
பின்லாந்து
புருனே
பெல்ஜியம்
போர்ச்சுகல்
போலந்து
மால்டா
மொனாக்கோ
லக்சம்பர்க்
பலாட்வியா
கலிச்சென்ஸ்டீன்
லிதுவேனியா
ஜப்பான்
ஜெர்மனி
ஸ்பெயின்
ஸ்லோவாக்கியா
ஸ்லோவேனியா
ஸ்வீடன்
ஹங்கேரி

உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பின்வரும் தேவைகளைச் சந்திக்கிற பட்சத்தில், 90 நாட்கள் அல்லது அதைவிடக் குறைவான காலத்திற்கு சுற்றுலா அல்லது வியாபாரத்திற்கு வீசா இல்லாமலேயே பயணம் செய்ய முடியும்.

 • இண்டெக்ரேட்டட் சிப் கொண்டுள்ளதோர் கடவுச்சீட்டை வைத்திருக்கிறார்கள் (மின்-கடவுச்சீட்டு);
 • பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (ESTA) வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்கிறார்கள்; மற்றும்,
 • கீழே குறிப்பிட்டுள்ள எப்போதுமுள்ள VW நிபந்தனைகளைச் சந்திக்கிறார்கள்.

கனடா, மெக்ஸிகோ மற்றும் பெர்முடாவிலுள்ள பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பகுதிகளின் பிரஜைகள் தயவுசெய்து கீழே குறிப்பிட்டுள்ள ஸ்டேட் திணைக்களத்தின் பயண வலைத்தளத்திற்கு வருகை தரவும்.

*இந்தப் பக்கத்தில் “நாடு” அல்லது “நாடுகள்” எனக் குறிப்பிட்டுள்ளவற்றைப் பொருத்த வரையில், 1979 ஆம் ஆண்டின் தாய்வான் உறவுகள் சட்டம், Pub. L. No. 96-8, பிரிவு 4(b)(1), “அந்நிய நாடுகள், தேசங்கள், மாநிலங்கள், அரசாங்கங்கள், அல்லது அதையொத்த பெயர்கள் என்பதாக அமெரிக்க நாட்டுச் சட்டம் குறிக்கும் போது அல்லது தொடர்புடையதாகும் போது, அது போன்ற சொற்கள் தாய்வானையும் சேர்க்கும் மேலும் தாய்வான் சம்பந்தமான விஷயங்களுக்குப் பொருந்தும்” என்றே சொல்கிறது, என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். 22 U.S.C. § 3303(b)(1). அதற்கேற்ப, குடிவரவு மற்றும் நாட்டினச் சட்டம், 8 U.S.C. 1187-வின் வீசா தள்ளுபடித் திட்ட அங்கீகார சட்டம், பிரிவு 217-ல் “நாடு” அல்லது நாடுகள் என்பதாக சொல்லப்படுகிற அனைத்தும் தாய்வானைச் சேர்ப்பதாகவே படிக்க வேண்டும். இது அமெரிக்காவின் ஒரே-சீனக் கொள்கைக்கு இணங்கியதாகும், இதன் கீழ் தான் 1979 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா முறைப்படி அல்லாத உறவுகளை தாய்வானுடன் பராமரித்து வருகிறது.

தகுதிகள்

வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு, பணிகளுக்கு இருந்தாக வேண்டிய தகுதிகளாவன:

 • அவர்கள் மேலே பட்டியலிட்டுள்ள நாடுகள் ஒன்றின் குடியுரிமை பெற்றவர்களாகவும், VWP திட்டத்திற்கு-இணங்குகிற கடவுச்சீட்டு ஒன்றை வைத்திருப்பவர்களாகவும் இருந்தாக வேண்டும்;
 • ESTA அங்கீகாரத்தை வைத்திருந்தாக வேண்டும்;
 • அமெரிக்காவில் 90 நாட்கள் அல்லது அதைவிடக் குறைவான காலத்திற்கே தங்கியாக வேண்டும்; மேலும்,
 • பின்வரும் நோக்கத்திற்கே பயணிக்கத் திட்டமிட்டாக வேண்டும்:
  அ. வியாபாரம் - நீங்கள் திட்டமிட்டுள்ள பயணத்திற்கான நோக்கம், வியாபாரக் கூட்டாளிகளோடு கலந்தாலோசிக்க; குறிப்பிட்ட தேதிகளில் ஒரு விஞ்ஞானப் பூர்வ, கல்வி சார்ந்த, தொழில் சார்ந்த அல்லது வியாபாரக் கூட்டம் அல்லது மாநாட்டிற்குப் பயணிப்பது, ஒரு சொத்தை விற்றுத் தீர்ப்பது; அல்லது ஒரு ஒப்பந்தத்தைப் பேசி முடிப்பது.
  ஆ. உல்லாசம் / சுற்றுலா - நீங்கள் திட்டமிட்டுள்ள பயணத்தின் நோக்கமே அதன் தன்மையில் பொழுதுபோக்கு சார்ந்தது, அதில் சுற்றுலா, விடுமுறை, கேளிக்கை, நண்பர்கள் அல்லது உறவினர்களைச் சென்று பார்த்தல், ஓய்வு, மருத்துவச் சிகிச்சை; சகோதர, சமூக அல்லது சேவைத் தன்மை கொண்ட செயல்பாடுகள்; மற்றும் இசை, விளையாட்டு மற்றும் அதையொத்த நிகழ்ச்சிகளில் அல்லது போட்டிகளில் கலந்து கொள்கிற சம்பளம் பெறாத அமர்த்தர்கள் பங்கேற்பு ஆகியவை அடங்குகிறது.
  இ. இடைவழி - நீங்கள் அமெரிக்கா வழியாகப் பயணம் செய்கிறீர்கள் என்றால்.

மேலும் அமெரிக்காவிற்குள் வான்வழியாக அல்லது கடல்வழியாக நுழைகிறீர்கள் என்றால்:

 • உங்களிடம் திரும்பிச் செல்வதற்கான அல்லது தொடர்ந்து வேறு நாட்டிற்குச் செல்வதற்கான பயணச் சீட்டு உங்களிடம் இருந்தாக வேண்டும். ஒரு மின்னணுப் பயணச் சீட்டில் பயணிக்கிறீர்கள் என்றால், குடிவரவு ஆய்வாளரிடம் காண்பிப்பதற்காக பயணத் திட்டத்தின் நகல் ஒன்றை நீங்கள் வைத்திருந்தாக வேண்டும். மெக்ஸிகோ, கனடா, பெர்முடா அல்லது கரீபியன் தீவுகளுக்குப் போய்ச் சேருகிற பயணச் சீட்டுகளை வைத்துப் பயணிக்கிறவர்கள், அப்பகுதிகளில் சட்டப்பூர்வமாக வசிப்பவர்களாக இருந்தாக வேண்டும்.
 • இத்திட்டத்தில் பங்கேற்க ஒப்புக் கொண்டிருக்கிறதோர் விமானம் அல்லது கப்பல் மூலமாகத் தான் அமெரிக்காவிற்குள் நுழைந்தாக வேண்டும். இதில், வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயணிகளைச் சுமந்து செல்வதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையோடு ஒப்பந்தம் செய்துள்ளதோர் அமெரிக்க நிறுவனத்தின் விமானம் அடங்குகிறது.

கனடா அல்லது மெக்ஸிகோ நாட்டிலிருந்து தரை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகிறீர்கள் என்றால், வட்டப்-பயணச் சீட்டுகள் மற்றும் கையொப்பமிட்டுள்ள விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் போன்றவற்றுக்கான தேவைகள் ஏதுமில்லை என்பதைத் தவிர்த்து, ஆவணத் தேவைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவையே. நீங்கள் தங்கியிருக்கும் காலத்தில் உங்களைப் பார்த்துக் கொள்வதற்கும், அமெரிக்காவை விட்டுச் செல்வதற்குமான பணம் உங்களிடம் இருக்கிறது என்பதாக நீங்கள் ஆய்வு செய்கிற அலுவலரைத் திருப்திப்படுத்த வேண்டும்.

பயண அங்கீகரிப்பிற்கான மி‎ன்னணு அமைப்பு (ESTA)

தற்காலிக அலுவலாக அல்லது உல்லாசமாக அமெரிக்காவிற்குப் பயணம் செய்யத் திட்டமிடுகிற அனைத்து நாட்டவர்களுக்கும் அல்லது நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களுக்கும், திட்டத்தின் கீழ் வான்வழியாக அல்லது கடல் வழியாக அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்காக ஒரு விமானம் அல்லது கப்பலில் ஏறுவதற்கு முன்பாக, ஒரு அங்கீகாரம் பெற்ற பயண அங்கீகரிப்பிற்கான மின்னணு அமைப்பு (ESTA) அவசியமாகிறது.

கடவுச்சீட்டுத் தேவைகள்

ஏப்ரல் 1, 2016 ல் இருந்து வீசா தள்ளுபடித் திட்டம் வழியாக அமெரிக்காவிற்கு பயணம் செய்ய முடிந்தவர்கள்  செல்லுபடியாகும்  மின்னணு கடவுச்சீட்டை கொண்டிருக்க வேண்டும். இந்த விதி பயண அனுமதிக்கான  (ESTA) செல்லுபடியாகும்  மின்னணு கணினி யை கொண்டவர்களுக்கு கூட பொருந்தும். மின்னணு கடவுச்சீட்டை கொண்டவர்களது முகப்பு அட்டையில் இந்த சின்னம் இருக்கும். 

 

பின்வரும் வகைகளில் உள்ள பயணிகள், விசா தள்ளுபடி திட்டத்தின் (VWP) கீழ் பயணம் செய்ய தகுதியற்றவர்கள் என்பதால், அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கு முன் விசாவைப் பெற வேண்டும்.

 • VWP நாடுகளின் நாட்டவர்கள் ஜனநாயக மக்கள் குடியரசு கொரியா, ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா அல்லது யேமன் ஆகிய நாடுகளில் மார்ச் 1, 2011 அன்று அல்லது அதற்குப் பிறகு (இராஜதந்திர அல்லது இராணுவத்திற்கான பயணத்திற்கு வரம்புக்குட்பட்ட விதிவிலக்குகளுடன்) பயணம் செய்த VWP நாடுகளின் நாட்டவர்கள் VWP நாட்டின் சேவையில் நோக்கங்கள்).
 • ஜனவரி 12, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு கியூபாவிற்குப் பயணம் செய்த அல்லது அங்கு இருந்த VWP நாடுகளின் நாட்டவர்கள் (VWP நாட்டின் சேவையில் இராஜதந்திர அல்லது இராணுவ நோக்கங்களுக்காகப் பயணம் செய்வதற்கான வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன்).
 • கியூபா, கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, ஈரான், ஈராக், சூடான் அல்லது சிரியாவின் நாட்டவர்களான VWP நாடுகளின் நாட்டவர்கள்.

VWP பயணிகள்  எந்த ஒரு VWP நாட்டின் ஆயுதப் படைகள்  இராணுவ சேவை  செய்வதற்காக அல்லது  ஒரு VWP நாட்டின் அரசாங்கத்தின் ஒரு முழு நேர ஊழியர் என உத்தியோகபூர்வ கடமைகளை முன்னெடுக்க இருந்தால் இப்  பயணிகளுக்கு இந்த தடை பொருந்தாது. 

 ஒரு தள்ளுபடி  சட்ட அமலாக்க  அல்லது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு  நலன்களுக்கு அவசியப்பட்டால் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர்  இந்த  VWP கட்டுப்பாட்டை ரத்து செய்யலாம். இத்தகைய சலுகை ஒரு வழக்கு மூலம் வழக்கு அடிப்படையில் மட்டும்  வழங்கப்படும்.   ஒரு பொது விடயம் ,ஒரு தள்ளுபடி தகுதி  இத்தகைய பயணிகள் வகைகளுக்கு  பெறப்படும் :

 • ஈராக், ஈரான், வட கொரியா, சிரியா, சூடான், லிபியா, சோமாலியா மற்றும் / அல்லது யேமன் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச அமைப்புகள், பிராந்திய அமைப்புகள் அல்லது துணை தேசிய அரசாங்கங்கள் சார்பாக உத்தியோகபூர்வ கடமையில் பயணம் செய்த நபர்கள்;
 • ஈராக், ஈரான், வட கொரியா, சிரியா, சூடான், லிபியா, சோமாலியா, மற்றும் / அல்லது யேமன் ஆகிய நாடுகளுக்கு ஒரு மனிதாபிமான அரசு சாரா அமைப்புகளின் (என்ஜிஓ) சார்பாக பயணம் செய்த நபர்கள்; மற்றும்
 • ஈராக், ஈரான், வட கொரியா, சிரியா, சூடான், லிபியா, சோமாலியா மற்றும் / அல்லது யேமன் ஆகிய நாடுகளுக்கு ஒரு பத்திரிகையாளராகப் பயணம் செய்த நபர்கள் அறிக்கை நோக்கங்களுக்காக.
 • அதிரடி கூட்டுப்படைகளின் விரிவான திட்டம் (ஜூலை 14, 2015) முடிந்த பின்னர் முறையான வணிக தொடர்பான நோக்கங்களுக்காக ஈரான் பயணித்த தனிநபர்கள்; மற்றும்
 • முறையான வணிக தொடர்பான நோக்கங்களுக்காக ஈராக் பயணித்த தனிநபர்கள்.

மேம்படுத்தப்பட்ட ESTA  விண்ணப்ப படிம்  கிடைக்கிறது. புதிய வடிவம் ,சட்டங்களுக்கு   இணங்க புதிய பயண தகுதி தேவைகள் நிவர்த்தி செய்ய கூடுதல் கேள்விகள் உள்ளன.  இந்த ESTA  கணினி  மேம்பாட்டு பயன்படுத்தி  நாம் ஒரு விட்டுக்கொடுப்பை சாத்தியமாக வழங்குவதை தொடர்ந்து ,  தனிப்பட்ட தீர்மானங்களை  இது  பயணிகளுக்கு  ஊக்குவிக்கும். ஒரு தள்ளுபடிக்கு எந்த ஒரு தனி விண்ணப்பம் இல்லை.

தற்போதைய ESTA வைத்திருப்பவர்கள் CBP இணையதளத்தில், https://esta.cbp.dhs.gov/esta/ பயணம் செய்ய முன் தங்கள் ESTA  நிலையை அறிய வேண்டும்.

கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலம்: அமெரிக்காவிற்குப் பயணம் செய்கிற வருகையாளர்கள், நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய, அமெரிக்காவில் அவர்கள் தங்கத் திட்டமிட்டுள்ள காலத்திற்கு அப்பால் ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகத்தக்கதோர் கடவுச்சீட்டை வைத்திருப்பது அவசியமாகிறது. வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் நீங்கள் வீசா இல்லாமலேயே பயணிக்கிறீர்கள் என்றால், உங்களது கடவுச்சீட்டு குறைந்தது 90 நாட்களுக்காவது செல்லுபடியாகத்தக்கதாக இருந்தாக வேண்டும். உங்களது கடவுச்சொல் 90 நாட்களுக்குச் செல்லுபடியாகத்தக்கதாக இல்லை என்றால், அந்தக் கடவுச்சீட்டு காலாவதியாகிற தேதி வரைக்கும் நீங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவீர்கள்.

நீங்கள் VWP திட்ட நாட்டிலிருந்து வருகிறதோர் பயணியாக இருந்து, உங்களது கடவுச்சீட்டு இத்தேவைகளைச் சந்திக்கவில்லை என்றால், நீங்கள் குடியுரிமை பெற்றுள்ள நாட்டில் உள்ள கடவுச்சீட்டு வழங்குகிற ஆணையத்திடமிருந்து ஒரு புதிய VWP-திட்டத்திற்கு இணங்குகிற கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளப் பரிசீலிக்கலாம். இல்லையென்றால், உங்களால் VWP திட்டத்தின் கீழ் பயணம் செய்ய முடியாது மேலும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு உங்கள் செல்லுபடியாகிற கடவுச்சீட்டில் ஒரு வீசாவை நீங்கள் பெற்றாக வேண்டும்.

தகுதியின்மை

சில பயணிகளால், VWP திட்டத்தின் கீழ் வீசா இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தகுதியடையாமற் போகலாம். இவர்களில், கைது செய்யப்பட்டவர்கள், அந்தக் கைது ஒரு குற்றவியல் செயல் நிரூபிக்கப்படுவதில் போய் முடியாவிட்டாலும் கூட, குற்றப் பின்னணியுள்ளவர்கள் (மன்னிப்பு, பொதுமன்னிப்பு அல்லது மற்ற கருணைச் செயலுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் கூட), ஒருசில கடுமையான தொற்றக்கூடிய சுகவீனங்களையுடையவர்கள், அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள், அல்லது அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது முன்னதாக வீசா தள்ளுபடித் திட்டத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கும் மேலாகத் தங்கியவர்கள் அடங்குவர். அது போன்ற பயணிகள் வீசாவிற்கு விண்ணப்பித்தாக வேண்டும். வீசா இல்லாமல் பயணம் செய்ய அவர்கள் முயற்சி செய்கிற பட்சத்தில், அவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.

பின்வரும் வகைகளில் உள்ள பயணிகள், விசா தள்ளுபடி திட்டத்தின் (VWP) கீழ் பயணம் செய்ய தகுதியற்றவர்கள் என்பதால், அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கு முன் விசாவைப் பெற வேண்டும்.

 • VWP நாடுகளின் நாட்டவர்கள் ஜனநாயக மக்கள் குடியரசு கொரியா, ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா அல்லது யேமன் ஆகிய நாடுகளில் மார்ச் 1, 2011 அன்று அல்லது அதற்குப் பிறகு (இராஜதந்திர அல்லது இராணுவத்திற்கான பயணத்திற்கு வரம்புக்குட்பட்ட விதிவிலக்குகளுடன்) பயணம் செய்த VWP நாடுகளின் நாட்டவர்கள் VWP நாட்டின் சேவையில் நோக்கங்கள்).
 • ஜனவரி 12, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு கியூபாவிற்குப் பயணம் செய்த அல்லது அங்கு இருந்த VWP நாடுகளின் நாட்டவர்கள் (VWP நாட்டின் சேவையில் இராஜதந்திர அல்லது இராணுவ நோக்கங்களுக்காகப் பயணம் செய்வதற்கான வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளுடன்).
 • கியூபா, கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, ஈரான், ஈராக், சூடான் அல்லது சிரியாவின் நாட்டவர்களான VWP நாடுகளின் நாட்டவர்கள்.

விசா தள்ளுபடி திட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பயங்கரவாத பயண தடுப்பு சட்டம் 2015 (சட்டம்) ஆகியவற்றின் கீழ் மாற்றங்கள் தொடர்பான விவரங்களுக்கு, விசா தள்ளுபடி திட்ட இணையதளத்தைப் பார்வையிடவும்.

கைது செய்வதில் மற்றும்/அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுவதில் போய் முடியாத சிறிய வகைப் போக்குவரத்துக் குற்றங்களைச் செய்துள்ள பயணிகள், மற்ற வகையில் தகுதியடைகிற பட்சத்தில், வீசா இல்லாமல் பயணம் செய்யலாம். நீங்கள் அமெரிக்காவில் இருக்கையில் அந்தப் போக்குவரத்துக் குற்றம் நேர்ந்து, உங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதம் நிலுவையில் இருந்தாலோ அல்லது நீங்கள் நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ளவில்லை என்றாலோ, உங்களைக் கைது செய்வதற்கானதோர் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது சாத்தியமே மேலும் அமெரிக்காவில் நுழைவதற்காக நீங்கள் விண்ணப்பிக்கும் போது நீங்கள் பிரச்சினைகளை அனுபவிக்கலாம். ஆகவே, நீங்கள் ஆஜராக வேண்டிய நீதிமன்றத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் பயணிக்கும் முன்பே அப்பிரச்சினையை நீங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும். அந்நீதிமன்றத்தின் முகவரி உங்களுக்குத் தெரியாது என்றால், அது குறித்த தகவல்களை நீங்கள் இணையத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம், இணைய முகவரி: https://refdesk.com/.

வீசா-இல்லாத பயணத்தில், படிக்க, வேலைபார்க்க, அல்லது 90 நாட்களை விட அதிகக் காலத்திற்கு அமெரிக்காவிலேயே தங்கிவிடவோ திட்டமிடுகிற அல்லது அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்ததும் தங்களது அந்தஸ்தை மாற்றிவிடலாம் என கனவு காண்கிறவர்கள் (சுற்றுலாவிலிருந்து மாணவராவது போன்று) அடங்குவதில்லை. அது போன்ற பயணிகளுக்கு வீசாக்கள் தேவை. வீசா-இல்லாமல் வந்த பயணி ஒருவர் அமெரிக்காவில் படிக்க, வேலை பார்க்க அல்லது 90 நாட்களை விட அதிக நாட்களுக்குத் தங்கப் போகிறார் என்பதாக ஒரு குடிவரவு அலுவலர் நம்புகிற பட்சத்தில், அந்த அலுவலர் அப்பயணிக்கு அமெரிக்காவில் நுழைவதற்கான அனுமதியை மறுத்து விடலாம்.

கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து வருகிற விண்ணப்பதாரர்கள்

கனடா, மெக்ஸிகோ மற்றும் பெர்முடா ஆகிய நாடுகள் வீசா தள்ளுபடித் திட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் அல்ல. குடிவரவு மற்றும் நாட்டினச் சட்டத்தில், ஒருசில சூழ்நிலைகளின் கீழ் கனடா மற்றும் பெர்முடா நாட்டவர்கள் வீசா இல்லாமல் பயணம் செய்வதற்கான மற்ற ஷரத்துக்கள் அடங்குகின்றன. கனடா மற்றும் பெர்முடா நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் வீசா தள்ளுபடித் திட்டத்தின் ஓர் அங்கமாக இல்லாததன் காரணமாக, கனடா, மெக்ஸிமோ அல்லது பெர்முடா நாட்டவர்களுக்கு எந்திரம் படிக்கக்கூடிய அல்லது உயிரி அளவீட்டுக் கடவுச்சீட்டுகளுக்கான வீசா தள்ளுபடித் திட்டத் தேவைகள் பொருந்துவதில்லை. மேலும், அமெரிக்காவிற்குப் பயணம் செய்கிற கனடா மற்றும் பெர்முடா நாட்டைச் சேர்ந்த சிலருக்கு குடிவரவாளர் அல்லாதோருக்கான வீசா தேவை என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

ESTA மறுப்பு

ESTA மறுக்கப்பட்டுள்ள பயணிகள் VWP திட்டத்தின் கீழ் பயணிக்க முடியாது. உங்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் தயவுசெய்து ஒரு வீசாவிற்கு விண்ணப்பித்து விடுங்கள்.

ESTA நடைமுறை குறித்த விசாரணை எதையும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் கேட்க வேண்டும்.