தூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள்
இந்தப் பக்கத்தில்:மேலோட்டம்
G-1 முதல் G-4 முடிய உள்ள வீசாக்களை அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்காக தூதரக அதிகாரிகள் மற்றும் மற்ற அரசாங்க அலுவலர்களுக்கு வழங்கலாம். பொதுவாக, ஒரு தூதரக அதிகாரி அல்லது மற்ற அரசாங்க அலுவலருக்குத் தேவைப்படுகிற வீசா வகை, அமெரிக்காவிற்கு அவர்கள் பயணிக்கும் நோக்கத்தையே பொருத்துள்ளது. அமெரிக்கக் குடிவரவு சட்டத்தின் கீழ், A, G அல்லது NATO வீசாக்களுக்குத் தகுதியடைவதற்கு விண்ணப்பதாரர்கள் சந்தித்தாக வேண்டிய மிகக் குறிப்பான தேவைகளும் இருக்கத் தான் செய்கின்றன.
இலங்கை அல்லது மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான A-1, A-2, மற்றும் G-1-இல் இருந்து G-4 வரையிலான வீசாக்களுக்கான விண்ணப்பங்களை, விண்ணப்பதாரர் அல்லது விண்ணப்பதாரரின் பிரதிநிதி அமெரிக்கத் தூதரக துணைத்தூதரகப் பிரிவிலேயே சமர்ப்பித்தாக வேண்டும். தூதரக அலுவலகக் குறிப்போடு, அனைத்து A-1, A-2, மற்றும் G-1-இல் இருந்து G-4 வரையிலான வீசாக்களுக்கான விண்ணப்பங்களும் சேர்ந்திருக்க வேண்டும்.
அனைத்து G-1-இல் இருந்து G-4 வரையிலான விண்ணப்பங்களோடும், ஒரு தூதரக அலுவலகக் குறிப்பு அல்லது, சர்வதேச ஸ்தாபங்களைப் பொருத்த வரையில், G வீசா ஒன்றை வழங்குமாறு வேண்டிக் கொள்கிறதோர் அலுவலகப்பூர்வமான கடிதம் சேர்ந்திருந்தாக வேண்டும். இந்த இணையதளத்தின் வழியாக MRV வீசா விண்ணப்பக் கட்டணம் ஒன்றைச் செலுத்தாதீர்கள், அது திரும்பத் தரப்பட மாட்டாது.
இன்னும் அதிகத் தகவல்கள்
இன்னும் அதிகத் தகவல்களுக்கு, தயவுசெய்து இந்த இணைய பக்கத்திற்குச் சென்று பாருங்கள் அல்லது வீசா வழங்குவதற்கான உங்கள் அரசாங்க அல்லது முகமையின் நிர்வாக அலுவலகத்திடம் ஆலோசனை பெறுங்கள்.
தூதரக மற்றும் அலுவலகப் பூர்வமான வீசாக்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கும், A வீசாக்கள் மற்றும் G வீசாக்கள் குறித்த இன்னும் அதிகக் குறிப்பான தகவல்களுக்கும் நீங்கள் அயலுறவுத்துறை இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.