தூதரக மற்றும் அரசாங்க அதிகாரிகள் - கூடுதல் தகவல்கள்

இந்தப் பக்கத்தில்:

மேலோட்டம்

வகை வீசாக்கள் பொதுவாகவே உரிய விருந்தினர் நாட்டின் அலுவலகம் அல்லது அயலுறவு அலுவலகத்திலிருந்து கொடுக்கிறதோர் தூதரகக் குறிப்பை அழிப்பதன் பேரிலேயே கொடுக்கப்படுகிறது. ஒரு A-1 அல்லது A-2 வீசா விண்ணப்பதாரர் 90 நாட்களை விடக் குறைவானதோர் காலத்திற்கு நீடிக்கிறதோர் வேலைக்காக அமெரிக்காவிற்கு வருகிற பட்சத்தில், அந்த வீசா "TDY" என்று குறிக்கப்படுகிறது. சாதாரணமாக, விருந்தின நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கிற அல்லது குடியுரிமை பெறுவதற்கான சான்று பெற்றவர்களாக இருக்கிற உண்மையான A-1 மற்றும் A-2 வீசா விண்ணப்பதாரர்களுக்கான தனிப்பட்ட நேர்காணல் தேவை தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆயினும், தூதரக அலுவலர் நேர்காணல் ஒன்றை நடத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிற சூழல்களும் இருக்கலாம்.

இந்தப் பட்டியல் இந்த வகுப்பிற்குள் உள்ள குறிப்பிட்ட வீசா வகைகளுக்கான கூடுதல் தகவல்களைக் கொடுக்கிறது:

A-3 வீசா

A-1 அல்லது A-2 அந்தஸ்தில் உள்ளதோர் நபரின் உதவியாளர்கள் அல்லது தனிப்பட்ட பணியாளருக்கு வழங்கப்படுகிறது.

G-1 வீசா

தகுதியைப் பொருட்படுத்தாமல் அங்கீகரித்துள்ளதோர் அரசாங்கத்தின், ஒரு சர்வதேச ஸ்தாபனத்தின் நிரந்தர அயலுறவு அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கும், அவர்தம் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது. G-1 வீசாக்கள் வீட்டுப் பணியாளர்கள் தவிர்த்து தூதரக அலுவலகத்தின் செயலர்களுக்கும், வாகன ஓட்டிகள் மற்றும் காவல் பணியாளர்கள் ஆகியோருக்குக் கொடுக்கப்படுகிறது, வீட்டுப் பணியாளர்களுக்கு G-5 வீசாக்கள் கொடுக்கப்படுகின்றன.

G-2 வீசா

அமர்த்தப்பட்டுள்ளதோர் சர்வதேச ஸ்தாபனத்தின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குத் தற்காலிகமாகப் பயணித்து வருகிற அங்கீகாரம்பெற்ற அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. G-2 அதிகாரிகள், சர்வதேச ஸ்தாபனத்திற்கான அந்த நாட்டின் பணிக்காக, ஐக்கிய நாடுகளின் (யூஎன்) பொது சபையில் தங்களது அரசாங்கங்களுக்குப் பிரதிநிதிகளாக அல்லது TDY அலுவலர்களாகச் செயல்படலாம். G-2 வீசாக்கள், சமாதான விஷயங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகத்திற்கு உதவி புரிகிற இராணுவ அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படலாம். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் G-2 வீசாக்கள் கொடுக்கப்படலாம்.

G-3 வீசா

அங்கீகரிக்கப்படாத அல்லது உறுப்பினர் அல்லாத அரசாங்கங்களுக்குப் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு அவர்களது தகுதியைப் பொருட்படுத்தாமலும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. G-3 வீசாக்களை அமர்த்தப்பட்டுள்ள சர்வதேச ஸ்தாபனங்களின் தற்காலிகக் கூட்டங்களில் (உ.ம்., ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் கூட்டம்) பங்கேற்கும் வகையில், அது போன்ற அரசாங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கொடுக்கப்படலாம்.

G-4 வீசா

அமர்த்தப்பட்டுள்ளதோர் சர்வதேச ஸ்தாபனத்தில் (ஐக்கிய நாடுகள் உட்பட) பணி நியமனம் பெறுவதற்காக அமெரிக்காவிற்குச் செல்கிற எந்தப் பதவியையும் சேர்ந்த அலுவலர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அவர்களது வீட்டுப் பணியாளர்கள் தவிர, அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் G-4 வீசாக்கள் கொடுக்கப்படலாம், வீட்டுப் பணியாளர்களுக்கு G-5 வீசாக்கள் கொடுக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிராத, அமர்த்தப்பட்டுள்ள சர்வதேச ஸ்தாபனங்களின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், அமெரிக்கா வழியாகச் செல்ல எண்ணங் கொண்டிருந்தால் அவர்களுக்கு G-4 வகைப்பாடு வழங்கப்படலாம். அதிகாரியின் வேண்டுகோளுக்குத் தக்கபடி எத்தனை முறை நுழைகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். G-4 வீசாக்கள், அமர்த்தப்பட்டுள்ள சர்வதேச ஸ்தாபனத்தின் சார்பாக அமெரிக்காவிற்குச் செல்கிற அந்த ஸ்தாபனத்தின் சம்பளப் பட்டியலில் எந்தப் பதவியிலும் உள்ள அதிகாரிகளுக்கும் வழங்கப்படலாம்.

G-5 வீசா

G-1 முதல் G-4 முடிய உள்ள அந்தஸ்தில் உள்ள நபர்களின் உதவியாளர்கள் அல்லது தனிப்பட்ட பணியாளருக்கு வழங்கப்படுகிறது.

குறிப்பு: சட்டப்பூர்வமாக நிரந்தரமாக வசிப்பவர்கள் (LPR) அமெரிக்காவில் ஒரு அயல்நாட்டுப் பணிக்காக பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்றால், அவரது நிரந்தர வசிப்பவர் அட்டையை ஒப்படைப்பு செய்ய விருப்பமுள்ளராக இருந்தால் அவர் A வீசா அந்தஸ்தைப் பெறுவதற்குத் தகுதியடைவார்.