பயண ஒருங்கிணைப்பாளர்

இந்தப் பக்கத்தில்:

மேலோட்டம்

நீங்கள் மற்ற பயணிகளுக்காகத் திரும்பத் திரும்ப நேர்காணல் நேரம் குறிக்கிறதோர் பயண ஒருங்கிணைப்பாளர் என்றால், நீங்கள் எமது ஆன்லைன் அமைப்பில் ஒரு பயண ஒருங்கிணைப்பாளர் சுயவிவரத்தை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒரு புதிய சுயவிவரத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, இந்த சிறப்பம்சம் உங்கள் சுயவிவரத்தின் கீழ் உள்ள உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரின் நிலையையும் தெரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இந்த மத்திய இடத்திலிருந்து, ஒரே திரையிலிருந்தே பல்வேறு வாடிக்கையாளருக்கு நேர்காணல் நேரம் குறிப்பதைத் திட்டமிடவோ, மறுதிட்டமிடவோ, இரத்து செய்யவோ அல்லது உறுதி செய்யவோ முடியும். இது, பல்வேறு சுயவிவரப் பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர் நேர்காணல் நேரக்குறிப்பு குறித்து வெளிப்புறமாக நிலையறிதல் ஆகியவற்றுக்கான தேவையைக் குறைக்கின்றது. இந்த அம்சம், குழுவாக நேரம் குறிப்பதையோ அல்லது “லோக்கல் வீசா தீட்டங்களின்” கீழ் பட்டியலிட்டுள்ள மற்ற திட்டங்களுக்கு மாற்றாக அமையும் எண்ணத்திலானதல்ல.

நீங்கள் ஒன்றாகப் பயணம் செய்கிற பல்வேறு விண்ணப்பதாரர்களுக்கு மொத்தமாகப் பணம் செலுத்த விரும்பினால், இங்கே சொடுக்குங்கள்.

ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
  1. ஒரு விண்ணப்பதாரர் துரித அல்லது அவசர நேரக் குறிப்பிற்கு விண்ணப்பிக்கிறார் என்றால், பயண ஒருங்கிணைப்பாளர் சுயவிவரத்தின் வழியாக நேரம் குறிக்கத் திட்டமிடாதீர்கள். அந்த விண்ணப்பதாரர், ஒரு தனிநபரைப் போலவே வழக்கமான நடைமுறை வழியாகவே ஒரு நேர்காணலுக்குத் திட்டமிட்டாக வேண்டும்.
  2. ஒரு அமர்வின் போது நீங்கள் பல விண்ணப்பதாரர்களுக்கு நேரம் குறிக்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அந்தக் குழுவினருக்கு ஒரே நேர்காணல் தேதியே இருக்கும். அவ்விண்ணப்பதாரர்கள் ஒன்றாகப் பயணம் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு வெவ்வேறு நேர்காணல் தேதி இருக்கும் வகையில் அவர்கள் வெவ்வேறு திட்டமிடும் அமர்வில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
  3. பயண ஒருங்கிணைப்பாளர்களுக்கு குழு வேண்டுகோள் கிடைப்பதில்லை. குழு வேண்டுகோள்களை வழக்கமான சுயவிவரங்களிலிருந்தே செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு குழு நேரக் குறிப்பு அறிவுறுத்தல்களைப் பாருங்கள்.

பயண ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தல்களை அணுகுவதற்கும், ஒரே நேரத்தில் பல நேரக் குறிப்புகளை மேலாண்மை செய்வதற்குமான அறிவுறுத்தல்கள்

படி 1

எமது ஆன்லைன் விண்ணப்ப அமைப்பில் புகுபதிகை செய்து, ஒரு சுயவிவரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்கெனவே ஒரு சுயவிவரம் இருந்தால், 2 ஆம் படிக்குச் சென்று விடுங்கள்.

படி 2

பொருள் வரியில் உங்கள் UID எண்ணோடு travel-coordinator@ustraveldocs.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். இது ஒரு பயண ஒருங்கிணைப்பாளராக விண்ணப்பதாரர்களைத் திட்டமிடுவதற்கு உங்களுக்கு அணுகலைக் கொடுக்கும். உங்களது UID எண்ணை திரையில் உங்கள் பயனர் பெயருக்கு அடுத்து வலது-கைப் பக்கத்தில் காணலாம். இந்த மின்னஞ்சலின் உடலப் பகுதியில் நீங்கள் உரை எதையும் எழுத வேண்டியதில்லை.

UID Location

படி 3

உங்கள் மின்னஞ்சல் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 5 நிமிடங்கள் காத்திருந்து, பின் மேல் இடது கை மூலையில் உள்ள முகப்பு இணைப்பின் மீது சுட்டுங்கள். உங்கள் டேஷ்போர்டு மற்றும் மெனு உருப்படிகள் மாறியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இடது-கை மெனுவில் நேரக்குறிப்புகளைத் தேடுதல் மற்றும் நேரக்குறிப்பு வரலாறு வாய்ப்புகள் அடங்குகின்றன.

UID Location

படி 4

நீங்கள் நேரம் ஒன்றைக் குறிப்பதற்குத் தயாராகி விட்டீர்கள், நேரம் குறிக்கத் திட்டமிடுங்கள் என்பதில் சுட்டுங்கள். வீசா வகை, தூதரக அலுவலகம், வீசா வகைப்பாடு, வீசா வகுப்பு மற்றும் விண்ணப்பத் தகவல் ஆகியவற்றுக்கான தகவல்களை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். அதன் பின் அவ்வமைப்பு உங்கள் வாடிக்கையாளரின் வீசா நேர்காணலுக்கானதோர் குறிப்பிட்ட தேதியை உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கும்படியும், உறுதிப்படுத்தல் விபரங்களை வழங்குமாறும் உங்களிடம் சொல்லும்.

படி 5

நீங்கள் தொடர்ந்து மற்ற வாடிக்கையாளர்களை உங்கள் சுயவிவரத்தில் சேர்த்து, இன்னும் அதிக நேரங்களைக் குறிக்கத் திட்டமிடலாம். நீங்கள் முன்னதாக திட்டமிட்ட நேரக் குறிப்புகளைப் பார்வையிட விரும்பினால், நீங்கள் நேரக்குறிப்புகளைத் தேடு அல்லது நேரக்குறிப்பு வரலாறைப் பார்வையிடு என்பதன் மீது சுட்டலாம்.

நேரக்குறிப்பு வரலாறு, நீங்கள் குறித்த நேரங்கள் அனைத்தையும் பார்வையிடுவதற்கு உங்களுக்கு வழி செய்கிறது. பச்சை நிற கூட்டல் அடையாளத்தின் மீது நீங்கள் சுட்டுவீர்கள் என்றால், நேரம் குறித்த தேதி, வீசா வகைப்பாடு, விண்ணப்பதாரர் மின்னஞ்சல் மற்றும் UID எண் போன்ற உங்கள் வாடிக்கையாளரின் தகவல்கள் குறித்ததோர் விரைவு ஸ்னாப்ஷாட்டை நீங்கள் காண முடியும். நீங்கள் நேரம் குறித்துள்ள தேதி, வீசா வகை அல்லது நிலை வாரியாக உங்கள் வாடிக்கையாளர்களை வரிசைப்படுத்தவும் முடியும்.

குறிப்பு: இவ்வமைப்பில் பதிவு செய்துள்ள அதிகபட்ச நேரக் குறிப்புப் பதிவுகள் என்ற வகையில் நேரக் குறிப்பு வரலாற்று வாய்ப்பிற்கு வரம்புகள் உள்ளன என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள். ஆகவே, அதில் உள்ள தகவல்களை உங்களது சொந்தத் தரவு தளப் பதிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வகையாக உபயோகிக்கக் கூடாது.

UID Location

நேர்காணலுக்குக் குறித்த நேரங்களைத் தேடுக என்ற வாய்ப்பு, உங்களது வாடிக்கையாளருக்கானதோர் செயல்பாட்டைச் செய்து முடிக்க உங்களுக்கு வழி செய்கிறது. கீழுள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் காண்கிறபடி, நீங்கள் உறுதிப்படுத்தல் கடிதத்தைப் பார்வையிட்டு, நேரக்குறிப்பை மறுதிட்டமிட்டு, ஆவணம் கொடுக்கும் தகவல்களில் புதிய தகவல்களைச் சேர்த்து அல்லது உங்களது வாடிக்கையாளரின் நேர்காணலை இரத்து செய்யலாம்.

UID Location

இன்னும் அதிகத் தகவல்கள்

குறிப்பு: ஒரு பயண ஒருங்கிணைப்பாளர் சுயவிவரத்திற்கான உங்களது தனிப்பட்ட அணுகலை மாற்றிக் கொள்ள நீங்கள் விரும்பினால், உங்களுக்காக நீங்கள் ஒரு நேரக்குறிப்பைத் திட்டமிட முடியாது. உங்களுக்கென்று சொந்தமாக நேரம் குறிக்கத் திட்டமிட, பொருள் வரியில் உங்கள் UID எண்ணோடு travel-coordinator@ustraveldocs.com என்ற முகவரிக்கு இன்னொரு மின்னஞ்சல் அனுப்பி வையுங்கள். இது உங்கள் பயண ஒருங்கிணைப்பாளர் சுயவிவரத்தை செயலிழக்கச் செய்துவிடும். உங்களது நேரக் குறிப்பை நீங்கள் திட்டமிடும் போது, சார்ந்திருப்பவர்கள் திரையில் முன்னதாகத் திட்டமிட்ட நேரக் குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் அகற்றியாக வேண்டும். உங்களது நேரக் குறிப்பை நீங்கள் திட்டமிட்டதும், அந்த மின்னஞ்சலை மறுபடியும் அனுப்பி வையுங்கள், உங்கள் அணுகல் திரும்பக் கிடைத்துவிடும்.